ஆன்லைன் மோசடியால் 40 லட்ச ரூபாய் காரை இழந்த பாடகர்! எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க! இவருக்கே இந்த நிலைமையா!

நமக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்கு இணையதளங்களில் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றன. ஆனால் வேறு சில நிறுவனங்களோ, வாடிக்கையாளர்களின் தலையில் மிளகாய் அரைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள், சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாது, பிரபலமானவர்களுக்கும் கூட நடக்கின்றன.

உங்களுக்கு பாடகர் பின்னி ஷர்மாவை (Binny Sharma) தெரியுமா? இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இவரது கார், தற்போது எங்கே இருக்கிறது? என்பதையே கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Singer Binny Sharma

இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் விலை சுமார் 40 லட்ச ரூபாய். அனேகமாக இது ரெனால்ட் கோலியோஸ் (Renault Koleos) காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. Move My Car என்ற போர்ட்டல் மூலமாக முன்பதிவு செய்து, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து இவர் சமீபத்தில் காரை அனுப்பி வைத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கார், தற்போது எங்கே இருக்கிறது? என்பதே தெரியவில்லை. அதாவது காரை லாரியில் ஏற்றிய பிறகு, பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் தன்னிடம் இருந்து இன்னும் அதிக பணத்தை பறிக்க முயற்சி செய்வதாகவும், பாடகர் பின்னி ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

Singer Binny Sharma Car

இந்த பிரச்னை தொடர்பாக சைபர்க்ரைம் போலீஸில், பின்னி ஷர்மா தற்போது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாடகர் பின்னி ஷர்மா கூறியிருப்பதாவது: அகர்வால் எக்ஸ்பிரஸ் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் மற்றும் Move My Car போர்ட்டல் மீது சைபர்க்ரைம் மற்றும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளேன்.

எனது காரை திருடியது மற்றும் பணம் பறிக்க முயற்சி செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தனியாக எஃப்ஐஆர் பதிவு செய்யவும் முயற்சி செய்து வருகிறேன். ஏனெனில் அவர்கள் எனது காரை பிடியில் வைத்து கொண்டு, கூடுதல் பணம் தராவிட்டால் சேதப்படுத்தி விடுவோம் என மிரட்டுகிறார்கள். இவ்வாறு பின்னி ஷர்மா கூறியுள்ளார்.

Move My Car என்பது ஒரு போர்ட்டல் ஆகும். வாகனங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பல்வேறு நிறுவனங்களுடன் இவர்கள் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அகர்வால் எக்ஸ்பிரஸ் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பின்னி ஷர்மாவின் கார் கொண்டு செல்லப்பட்டபோதுதான், இந்த மோசடி நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இருந்து பெங்களூர் அல்லது கோவை போன்ற நகரங்களுக்கு கார்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தால், முடிந்த வரை நீங்களே ஓட்டி செல்லலாம். சோர்வு ஏற்பட்டால், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுடன் காரை மாற்றி மாற்றி ஓட்டி செல்லலாம்.

மிகவும் நீண்ட தொலைவு என்றால், பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் மூலமாகதான் அனுப்ப முடியும். அத்தகைய சமயங்களில் மிகவும் பிரபலமான நிறுவனங்களாக பார்த்து தேர்வு செய்வது நல்லது. ஆன்லைனில் அவர்களை பற்றிய விமர்சனங்களை படித்து விட்டு முடிவு செய்யுங்கள். கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக தவறான முடிவை எடுத்தால், பிரச்னையில் சிக்க நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 17:43 [IST]
English summary
Singer binny sharma loses suv worth rs 40 lakh alleges online scam all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+