இந்திய பாடகர் ஓட்டின இந்த காரோட விலை ரூ. 30 கோடியா! ஒரே ஊருக்காரராக இருந்ததால் சிங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான ராப் பாடகர்களில் கரண் அவுஜ்லா-வும் ஒருவர் ஆவார். இவரை அறியாத இந்தி பாடல் விரும்பிகளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான ஓர் ராப் பாடகரே கரண் ஆவார். இவரே சமீபத்தில் தொழில் ரீதியாக துபாய் சென்றிருக்கின்றார். அப்போதே நாம் யாரும் நேரில் கண்டிராத புகாட்டி சிரோன் (Bugatti Chiron) கார் மாடலை அவர் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றார். சந்தித்தது மட்டுமல்ல அந்த அரிய வகை காரில் அவர் ரைடும் சென்றிருக்கின்றார்.

இந்த கார் அவருடையது அல்ல என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேறொரு துபாய் தொழிலதிபருக்குச் சொந்தமானதே இந்த கார் மாடல் என கூறப்படுகின்றது. அதேவேளையில், இந்த ராப் பாடகரிடத்திலும் எண்ணற்ற ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் மாடல்கூட அவரிடத்தில் உள்ளது.

Singer karan aujla drives bugatti chiron

இதுமட்டுமல்ல பென்ட்லீ (Bentley) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் (Mercedes MayBach) கார் மாடல்களையும் அவர் வைத்திருக்கின்றார். ஆகையால், சொகுசு கார்களை வைத்திருப்பதில் இவரும் லேசு பட்டவர் என கூறலாம். ஆனால், அவர் ஓட்டிய புகாட்டி சிரோன் கார் மாடல் மிக மிக காஸ்ட்லியானது.

அது ஓர் ஹைப்பர் வகை கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் இந்திய மதிப்பு மட்டுமே ரூ. 30 கோடி ஆகும். இத்தகைய அல்ட்ரா காஸ்ட்லியான காரை பார்த்த உடனேயே அவர் குழந்தையாக மாறி, அந்த காரை ஓட்டவும் தொடங்கிவிட்டார்.

காரின் பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு அவர் அந்த காரை ஓட்டிச் சென்றதை நம்மால் பார்க்க முடிகின்றது. புகாட்டி நிறுவனத்தின் அரிய தயாரிப்பு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த உலகிற்குமே வெறும் 500 யூனிட்டுகளை மட்டுமே புகாட்டி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. அந்த 500 யூனிட்டுகளில் ஒன்றிலேயே ராப் பாடகர் கரண் பயணித்திருக்கின்றார்.

புகாட்டி சிரோன் பலதரப்பட்ட வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிரோன் ஸ்போர்ட் (Chiron Sport), சிரோஸ் பர் ஸ்போர்ட் (Chiron Pur Sport), சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300 பிளஸ் (Chiron Super Sport 300+) ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, இன்னும் சில சிறப்பு எடிசன்களும் இதில் வழங்கப்படுகின்றன.

கரண் ஓட்டியது ஸ்டாண்டர்டு பதிப்பாகும். இந்த வாகனத்தில் 8.0 லிட்டர் குவாட் டர்போசார்ஜட், டபிள்யூ 16 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதிகபட்சமா 1,500 பிஎஸ் மற்றும் 1,600 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதே இந்த மோட்டார். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 420 கிமீ ஆகும்.

இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.4 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட காரிலேயே இந்திய பாடகர் ஜாலி ரைடு செய்திருக்கின்றார். இந்த கார் சொகுசு வசதிகள் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகளவில் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாடகரும், அந்த 30 கோடி ரூபா மதிப்புள்ள காரின் உரிமையாளரும் ஒரே ஊருகாரர்கள் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் பஞ்சாப் மொழியில் பேசிக் கொண்டதை நம்மால் காண முடிகின்றது. இதன் விளைவாகவே அவரை புகாட்டி காரின் உரிமையாளர் ஓட்ட அனுமதித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இருப்பினும், இவ்வளவு விலை உயர்ந்த காரை மற்றவர்களை ஓட்ட அனுமதிப்பதெல்லாம் மிகப் பெரிய விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2025, 20:27 [IST]
English summary
Singer karan aujla drives bugatti chiron worth rs 30 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+