பிராண்ட்-நியூ பென்ஸ் கார் உடன் நிற்பது யாரென்று தெரிகிறதா? டெலிவிரி பெறும்போது ஷோரூமில் செய்த காரியம்!

வெற்றிகரமான இசைக் கலைஞர்கள் தங்கள் வீடுகளில் பல விலையுயர்ந்த கார்களை வாங்கிச் சேர்ப்பது வழக்கம். ஆடம்பர கார்களையும், எஸ்யூவிக்களையும் பிரபல பாடகர்கள் வாங்கும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பார்க்கிறோம். அந்த வகையில், மலையாளத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான எம்.ஜி. ஸ்ரீகுமார் (M.G Sreekumar) புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class) என்கிற லக்சரியான செடான் காரை வாங்கியுள்ளார்.

இவ்வாறு புதியதாக சொகுசு கார்களை வாங்கும் சினிமா பிரபலங்களுள் சிலர் அதனை வெகுவாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், எம்ஜி. ஸ்ரீகுமாரும் பிராண்ட்-நியூ (Brand-new) பென்ஸ் காரை வாங்கியதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். ஷோரூமில் இருந்து காரை டெலிவிரி (Delivery) பெறும்போது, டீலர்ஷிப் ஊழியர் ஒருவருடன் தனது மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றை பாடி ஸ்ரீகுமார் அசத்தியுள்ளார்.

malayalam singer mg sreekumar bought brand-new mercedes-benz e-class

இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ (Video) பின்னர் ஆன்லைனில் பகிரப்பட்டது. கேரளா பிரைட்வே மோட்டார்ஸ் டீலரிடம் இருந்து எம்.ஜி. ஸ்ரீகுமார் தனது புதிய இ-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். தனது மனைவியுடன் வந்து அவர் காரைப் பெற்றுக் கொண்டார். கேரளாவில் மிகவும் பிரபலமான பாடகரான எம்ஜி ஸ்ரீகுமார் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதனாலேயே, டீலர்ஷிப் ஊழியர் ஒருவர் அன்பாக கேட்டவுடன் சேர்ந்து பாட விருப்பம் தெரிவித்தார். எம்.ஜி. ஸ்ரீகுமார் அன்புடன் சம்மதித்து, அவருடன் இணைந்து ஒரு டூயட் பாடலைப் பாடினார். 1986ஆம் ஆண்டு வெளியான 'தளவட்டம்' என்கிற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற 'பொன் வீணே' என்ற பாடலை இருவரும் சேர்ந்து ஷோரூமில் பாடினர்.

malayalam singer mg sreekumar bought brand-new mercedes-benz e-class

தளவட்டம் திரைப்படத்தில் இப்பாடலை எம்.ஜி. ஸ்ரீகுமார் பிரபல பாடகி கே.எஸ். சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார். டீலர்ஷிப் பணியாளரும் அழகாகவும் நம்பிக்கையுடனும் பாடினார். ஸ்ரீகுமார் அவரை உற்சாகப்படுத்தியதுடன், சில இடங்களில் அவரது பாடலை திருத்தவும் செய்தார். மற்ற வாடிக்கையாளர்களும், டீலர்ஷிப் ஊழியர்களும் இதைக் கேட்டு கைதட்டி மகிழ, அந்த இடமே கொஞ்சம் நேரத்தில் உற்சாகம் நிறைந்ததாக மாறியது.

மலையாள பாடகர் எம்ஜி ஸ்ரீகுமார் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் ஆகும். அவரது மனைவியின் முகநூல் பக்கத்தில் பின்னர் பகிரப்பட்ட ஒரு படத்திலும் இந்த செடான் காரை பார்க்க முடிகிறது. தம்பதியினர் இருவரும் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலுக்கு தங்களது புதிய பென்ஸ் காரை கொண்டு சென்று பூஜை செய்த போது அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

malayalam singer mg sreekumar bought brand-new mercedes-benz e-class

காரின் கிரில்லில் பூமாலைகளும், பொனட்டில் பூக்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இ-கிளாஸ் காரை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இதனை 2024 அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது இ-கிளாஸ் (V214) காரின் ஆறாவது தலைமுறை ஆகும். மெர்சிடிஸ் இ-கிளாஸ் செடான் இந்தியாவில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, புதிய மாடலும் அதற்கு விதிவிலக்கல்ல.

தற்சமயம், இ-கிளாஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.78.5 லட்சம் ஆகும். இ200, இ220d, இ450 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இ-கிளாஸ் ஆனது முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரத்துடன் ஒரு லாங் வீல்பேஸ் (LWB) காராகத் தொடர்கிறது. இது அதன் முந்தைய ஜென்ரேஷன் மாடலை விட நீளமாகவும் அகலமாகவும் உள்ளது.

mercedes-benz e-class

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் இ-கிளாஸ் கார் சற்று விலை அதிகமானதாக அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய ஜென்ரேஷனை விட புதிய இ-கிளாஸ் பல சுவாரஸ்யமான டிசைன் அப்டேட்களை பெற்றது. இது, இ.க்யூ கார்களின் ஸ்டைலிங், பெரிய மெர்சிடிஸ் லோகோ, ஸ்டைலான கிளாஸ் பிளாக் டிரிம்கள், ஃப்ளஷ்-டைப் கதவு கைப்பிடிகள், 18-இன்ச் சக்கரங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் புதிய பம்பர்கள் கொண்ட புதிய முன் முகப்பைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டவை உடன் 360 டிகிரி வரை சாய்க்கக்கூடிய & தொடை சப்போர்ட் உடன் கூடிய பின் இருக்கைகள், டேஸ்போர்டில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் சூப்பர்ஸ்கிரீன் அமைப்பை கொண்டுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆனது பாடகர் எம்ஜி ஸ்ரீகுமார் போன்ற மிகவும் சொகுசான பயணங்களை எதிர்பார்ப்போருக்கு ஏற்ற கார் ஆகும். இதன் இ450 வேரியண்ட்டில் மட்டுமே 4Matic AWD அமைப்பு வழங்கப்படும் நிலையில், இந்த விலைமிக்க வேரியண்ட்டை தான் இந்த மலையாள பாடகர் வாங்கி உள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, September 29, 2025, 14:09 [IST]
English summary
Singer mg sreekumar bought brand new mercedes benz e class check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X