நீண்ட கால தோழி என்றாலும் இது எல்லாம் கொஞ்சம் ஓவர்... பிரபல பாடகரின் காஸ்ட்லீயான பரிசு!!
சினிமா துறையில் நுழைந்துவிட்டாலே சொகுசு கார்களை வாங்கி குவிக்கலாம் என சொல்லும் அளவிற்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை தொடர்ச்சியாக நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். சில சினிமா நட்சத்திரங்கள் சொகுசு கார்களை தங்களுக்காக வாங்காமல் குடும்பத்திற்காக வாங்கியுள்ள நிகழ்வுகளையும் பார்த்துள்ளோம். ஆனால், இங்கு ஒரு சினிமா பாடகர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை தன்னுடன் பணியாற்றும் பாடகிக்கு பரிசளித்து கவனத்தை ஈர்த்துள்ளார். யார் இந்த பாடகர் என்பதையும், அவர் பரிசாக வழங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சொகுசு கார்களை விற்பனை செய்வதில் இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தின் மாடர்ன் கார்களை சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வாங்குவதை அவ்வபோது பார்த்து வருகிறோம். குறிப்பாக, பாலிவுட் ஸ்டார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்க அதிகமாக விரும்புகின்றனர்.

இந்த வரிசையில், நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள பாடகர் வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும். இந்த பாடகர் வேறு யாருமில்லை, பிரபல பெங்காலி பாடகரான மிகா சிங் (Mika Singh) ஆவார். பொது வெளியில் நேரலையாக அவ்வப்போது பாடல் நிகழ்ச்சிகளை நடத்துபவர், மிகா சிங். இவரது குழுவில் முன்னணி பாடகியாக விளங்கும் நிக்கி சிங்கிற்காக இந்த மெர்சிடிஸ் காரை மிகா சிங் வாங்கியுள்ளார்.
மிகா சிங் உடன் நிக்கி சிங் நீண்ட வருடமாக பாடகியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட்டின் திருமணத்தில் கூட பாடகர் மிகா சிங்கின் இசை கச்சேரியில் நிக்கி சிங் உடன் இருந்தார். இத்தகைய நீண்ட கால தோழிக்கு மிகா சிங் வாங்கி கொடுத்திருப்பது புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் கிடையாது. செகண்ட்-ஹேண்டில் தான் வாங்கி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில் மிகா சிங் மற்றும் நிக்கி சிங் உடன் காட்சி தருவது பழைய ஜென்ரேஷன் மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் கார் ஆகும். தோற்றத்தை வைத்தே இது பழைய ஜிஎல்எஸ் கார் என்பதை எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். போதாக்குறைக்கு, நிக்கி சிங்கின் இந்த புதிய காரில் டெல்லி மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.
தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் ஆனது மாடர்னான தோற்றத்தில் வழங்கப்படுகிறது. மிகா சிங் வாங்கியிருக்கும் பழைய ஜிஎல்எஸ் கார் உடன் ஒப்பிட்டால், விற்பனையில் இருக்கும் ஜிஎல்எஸ் காரின் முன்பக்கம் முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. அதாவது, இடைப்பட்ட காலத்தில் ஜிஎல்எஸ் காரை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தோற்றத்தில் மெருக்கேற்றியுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.32 கோடி (பெட்ரோல் என்ஜின் உடன்) மற்றும் ரூ.1.37 கோடி (டீசல் என்ஜின் உடன்) ஆக உள்ளன. இந்த காரில் வழங்கப்படும் 3 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 381 பிஎஸ் மற்றும் 500 என்.எம் டார்க் திறனையும், 3 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 367 பிஎஸ் மற்றும் 750 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியவைகளாக உள்ளன.
இந்த இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படுகின்றன. அதேபோல், இந்த இரு என்ஜின்களில் எதனுடன் வாங்கினாலும், ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை பெறலாம். அப்சிடியன் கருப்பு, சோடாலைட் நீலம், செலெனைட் சில்வர், ஹை-டெக் சில்வர் மற்றும் போலார் வெள்ளை என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஜி.எல்.எஸ் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் உள்ள ஜிஎல்எஸ் கார் அளவிற்கு பழைய ஜென்ரேஷன் ஜிஎல்எஸ் காரின் விலை இருந்திருக்காது என்றாலும், நிச்சயமாக கிட்டத்தட்ட கோடி ரூபாய் அளவிற்கு இருந்திருக்கும். அத்தகைய காரை தற்போது செகண்ட்-ஹேண்டில் பல இலட்ச ரூபாய்கள் கொடுத்து தன்னுடன் பணியாற்றும் பாடகிக்காக பாடகர் மிகா சிங் வாங்கி கொடுத்திருப்பது, இவர்கள் இருவர் இடையேயான நட்பை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









