1.5 கோடி ரூபாய் காரை தூக்கி கொடுக்க பெரிய மனசு வேணும்! சினிமாவில் தடை விதிக்கப்பட்ட இந்த பாடகரை தெரியுதா?
மிகா சிங் (Mikha Singh), இந்தியாவின் மிக சிறந்த ராப் பாடகர் (Rap Singer)-களுள் ஒருவர். மேற்கு வங்காளத்தில் பிறந்தவரான மிகா சிங் பாடகர் மட்டுமில்லாமல், இசைக்கலைஞர் மற்றும் நடிகர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டிருப்பவர். இதனாலேயே பாலிவுட் சினிமாவில் விரைவாகவே தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்ட மிகா சிங், 2011- 14 சமயங்களில் ஒரே வருடத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு மிகவும் பிசியாக சுற்றி திரிந்தார். ஆனால், 2019இல் பாகிஸ்தானில் இசை கச்சேரி நடத்தியதற்காக மிகா சிங் ஒட்டுமொத்தமாக இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டார்.
ஆனால், அதன்பின் அதுகுறித்து மிகா சிங் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், முந்தைய அளவிற்கு திரைப்பட வாய்ப்புகள் இந்த பெங்காலி பாடகருக்கு வருவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், ஆரம்பத்திலேயே ஈட்டிய வருவாயில் செல்வ செழிப்பில் மிகா சிங் வாழ்ந்து வருகிறார்.

எந்த அளவிற்கு என்றால், தற்போது தனது மேனேஜர் (Manager)-க்கு விலையுயர்ந்த டிஃபெண்டர் (Defender) காரை பரிசளித்து கவனத்தை ஈர்த்துள்ளார். பாடகர் மிகா சிங்கின் மேனேஜராக இருப்பவர் கன்வால்ஜீத் (Kanwaljeet) ஆவார். இவர் மிகா சிங்கின் மேனேஜர் மட்டுமில்லை, அவரது நெருங்கிய நண்பரும் கூட. இதனாலேயே அவ்வப்போது கன்வால்ஜீத்துக்கு ஏதேனும் பரிசு பொருளை வழங்குவதை மிகா சிங் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு கூட, விலையுயர்ந்த பரிசு பொருள் ஒன்றை கன்வால்ஜீத்துக்கு வழங்கி இருந்தார். ஆனால், இந்த முறை அதனை காட்டிலும் விலையுயர்ந்த பரிசு பொருளை வழங்கியுள்ளார். தற்போது மிகா சிங் அவரது மேனேஜருக்கு வழங்கி இருப்பது, லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் கார் ஆகும். டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து காரை டெலிவிரி பெற்ற பின் கன்வால்ஜீத் உடன் பாடகர் மிகா சிங் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் நிறுவனம் உற்பத்தி செய்யும் பிரபலமான கார்களுள் ஒன்று டிஃபெண்டர் ஆகும். இந்தியாவில் தற்சமயம் டிஃபெண்டர் கார்கள் 90, 110, 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் வேறுப்படுகிறது.
அதுமட்டுமின்றி, டிஃபெண்டர் 90 காரில் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்றவை இரண்டிலும் 5 கதவுகள் கொடுக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, எக்ஸ்-டைனாமிக் எச்.எஸ்.இ, செடோனா எடிசன் (டிஃபெண்டர் 110-க்கு மட்டும்) மற்றும் எக்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் டிஃபெண்டர் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

காரின் முழு படம் வெளியாகாததால், இதில் எந்த வெர்சனை மிகா சிங் தனது நண்பரும், மேனேஜருமான கன்வால்ஜீத்துக்கு வழங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்தியாவில் சமீபத்தில்தான், அப்டேட் செய்யப்பட்ட டிஃபெண்டர் காரை லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய 2025 டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.39 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன.
இந்தியாவில் சுமார் 4 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 2 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரீட், 3 லிட்டர் டீசல், 5 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் என்பன அந்த 4 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இவை அனைத்திலும், என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் கம்பீரமான கார்களுள் ஒன்றாக டிஃபெண்டர் விளங்குகிறது. அத்தகைய காரை தான் பாடகர் மிகா சிங் தற்போது தனது மேனேஜருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். பெரும்பாலும் இவ்வாறு காரை பரிசளிப்பவர்கள், தாங்கள் பயன்படுத்திய பழைய காரை தான் மற்றவர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். ஆனால், மிகா சிங் தனது பிராண்ட்-நியூ காரை பரிசளித்து இருப்பது அவரது தூய மனதை வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









