அது இவரோட குரலா! பாட்டு பாடியே பிஎம்டபிள்யூ காரை வாங்கீட்டாரு! நேர்ல பாத்ததும் உறைந்து போன ஷோரூம் ஊழியர்கள்!

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலரும், சொகுசு கார்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு நஜீம் அர்ஷத்தும் (Najim Arshad) விதிவிலக்கு அல்ல. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவரான நஜீம் அர்ஷத், மிகவும் பிரபலமான பாடகராக இருக்கிறார். மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவரது பாடல்களை உங்களால் கேட்க முடியும்.

இந்த சூழலில் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை நஜீம் அர்ஷத் தற்போது வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் (BMW 2 Series) கார் ஆகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை செடான் (Entry-level Sedan) ரக கார் ஆகும். இந்த காரில் பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

Singer Najim Arshad Buys BMW 2 Series

அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இதில் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 178 பிஎஸ் மற்றும் 280 என்எம் ஆக உள்ளது. மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் ஆக இருக்கிறது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை காராக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகளை பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கொண்டுள்ளது.

BMW 2 Series

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரின் ஆரம்ப விலை 43.90 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 46.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் செடான் (Mercedes Benz A-Class Sedan) காருடன், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் போட்டியிட்டு வருகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இது மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நஜீம் அர்ஷத் தமிழில் பட்டாளம் திரைப்படத்தில் வரும் திசையெட்டும் உள்ளிட்ட பாடல்களை எல்லாம் பாடியவர் ஆவார். அவர் தற்போது வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கார், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொகுசான பயணத்தை வழங்கும் என உறுதியாக நம்பலாம்.

இதற்கிடையே பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரை டெலிவரி எடுப்பதற்காக பாடகர் நஜீம் அர்ஷத் ஷோரூமிற்கே குடும்பத்துடன் நேரடியாக சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோவை (Viral Video) சமூக வலை தளங்களில் பாடகர் நஜீம் அர்ஷத்தின் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 12:27 [IST]
English summary
Singer najim arshad buys bmw 2 series viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+