பாடகராக மட்டுமில்ல... குடும்ப தலைவராகவும் வாழ்க்கையில் ஜெய்ச்சிட்டாரு! ஹூண்டாய் கார் ஷோரூமில் மனைவி, மகன் உடன்
நஜீம் அர்ஷத் (Najim Arshad), பிரபலமான மலையாள திரைப்பட பாடகர். 100க்கும் அதிகமான பாடல்களை பாடி கேரள மக்கள் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் நஜீம் அர்ஷத், தனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளார். அதுதான், புதிய காரை வாங்கியது ஆகும். பாடகர் நஜீம் அர்ஷத் புதியதாக பிராண்ட்-நியூ ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) காரை வாங்கி உள்ளார். பாடகர் நஜீம் அர்ஷத்தை பற்றியும், அவர் வாங்கியுள்ள ஹூண்டாய் அல்கஸார் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஹூண்டாய் கார், கிரெட்டா (Creta) என சொன்னால் அது மிகையில்லை. இந்தியாவில் முதல்முறையாக கார் வாங்குவோரின் முதன்மையான தேர்வாக கடந்த சில வருடங்களாகவே கிரெட்டா உள்ளதை பற்றி பலமுறை நமது செய்தித்தளத்தில் கூறியுள்ளோம்.

ஹூண்டாயின் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காரான கிரெட்டாவின் 6, 7-சீட்டர் வெர்சனாக அல்கஸார் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சரியாக அந்த சமயத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் களமிறக்கிய சஃபாரி (Safari) காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் அல்கஸாரை அறிமுகம் செய்தது.
ஹூண்டாய் கிரெட்டா காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், அதேபோல் அல்கஸாரும் நல்ல வரவேற்பை பெறும் என ஹூண்டாய் நம்பியது. ஆனால், டாடா சஃபாரி கார் அளவிற்கு அல்கஸாரின் விற்பனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், டாடா அல்கஸார் காரை மலையாள திரைப்பட பாடகர் நஜீம் அர்ஷத் வாங்கி உள்ளார்.

ரம்ஜான் (Ramadan) பண்டிகையை முன்னிட்டு மனைவி மற்றும் மகன் உடன் புத்தம் புதிய ஹூண்டாய் அல்கஸார் காரை பாடகர் நஜீம் அர்ஷத் டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் மூலம், முற்றிலும் கருப்பு நிறத்திலான அல்கஸார் காரை இந்த மலையாள பாடகர் வாங்கி இருப்பதை அறிய முடிகிறது.
பிரதானமாக மலையாள திரைப்படங்களுக்கு தான் பாடல்களை பாடியுள்ளார் என்றாலும், சில தமிழ், தெலுங்கு பாடல்களையும் நஜீம் அர்ஷத் பாடி உள்ளார். மலையாள திரைப்படமான 'ஒரு முறை வந்து பார்த்தாயா'-இல் நஜீம் அர்ஷத் பாடிய "அரிகில் பாதியே" பாடல் ஒவ்வொரு கேரள இளைஞர்களின் ஃபேவரட் ஆக உள்ளது.
இத்தகையவர் தற்போது வாங்கியுள்ள ஹூண்டாய் அல்கஸார் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஹூண்டாயின் மிட்-சைஸ் எஸ்யூவி காராக விளங்குகிறது. பாடகர் நஜீம் அர்ஷத் இந்த காரை கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார் அல்லவா... இந்த கருப்பு நிறத்தை 'அபிஸ் பிளாக்' (Abyss Black) என ஹூண்டாய் நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், அட்லாஸ் வெள்ளை, ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, ரப்பஸ்ட் எமெரல்ட், ஸ்டார்ரி நைட், டைட்டன் கிரே மேட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் அல்கஸார் கார் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.99 லட்சத்தில் இருந்து ரூ.21.70 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பமாக 6-7 பேர் பயணிப்பதற்கு அல்கஸார் மிகவும் ஏற்ற கார் ஆகும். அதுமட்டுமின்றி, அல்கஸாரில் மிகவும் பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதால், இந்த காரின் பெர்ஃபார்மன்ஸில் எந்தவொரு குறையையும் சொல்ல முடியாது. இத்தகைய காரை தான் நஜீம் அர்ஷத் அவரது குரல் வளத்திற்கு ஏற்ப வாங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications
