இவ்ளோ பெரிய ஆளா! சாதாரண காரை வாங்கிய பாட்டியின் உண்மை முகம்! யார்னு தெரிஞ்சதும் வாயடைத்து போன மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்த சூழலில் மூதாட்டி ஒருவர் கியா சொனெட் காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

இந்த மூதாட்டி யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்கள் கேரளாவை சேர்ந்தவராகவோ அல்லது திரைப்படங்களை ஆழமாக நேசிப்பவராகவோ இருந்தால், இந்த மூதாட்டி யார்? என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். இந்த மூதாட்டியின் பெயர் நஞ்சியம்மா (Nanjiyamma).

Singer Nanjiyamma Buys Kia Sonet

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வின் (President Droupadi Murmu) கையால் தேசிய விருது (National Award) பெற்ற பாடகர் (Singer) இவர். கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்தவரான நஞ்சியம்மா, அய்யப்பனும் கோஷியும் (Ayyappanum Koshiyum) திரைப்படத்தில் இடம்பெற்ற 'கலகாத்தா' என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதை தன்வசப்படுத்தினார்.

பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கியா ஷோரூமில், சொனெட் காரை இவர் தற்போது டெலிவரி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிகவும் பிரபலமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) உள்ளிட்ட கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை (Price) 7.79 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். செயல்திறனை பொறுத்தவரையில் கியா சொனெட் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும்.

மற்றொன்று 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். இதுதவிர 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷனும், இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புத்தம் புதிய கியா சொனெட் காரை வாங்கியுள்ள பாடகர் நஞ்சியம்மாவிற்கு எங்களது வாழ்த்துக்கள். கியா சொனெட் கார் அவருக்கு நிச்சயம் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும். கியா சொனெட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 22, 2023, 23:56 [IST]
English summary
Singer nanjiyamma buys kia sonet check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+