35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
சினிமா பாடகர் ஒருவர் விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே டிஃபெண்டர் காரை வாங்கிய முதல் சினிமா பாடகர் என கூறப்படும் இந்த நபரை பற்றியும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மற்ற விலையுயர்ந்த கார்களுடன் ஒப்பிடுகையில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கொஞ்சம் வித்தியாசமானது என்பது உண்மையே. ஏனெனில், சொகுசு வசதிகளுடன் இருக்கும் அதே நேரத்தில், டிஃபெண்டர் கார்கள் நன்கு கம்பீரமான தோற்றத்தை கொண்டவை ஆகும். இதன் காரணமாக காரின் ஏரோடைனாமிக் தோற்றம் பாதிக்கப்படுகிறது. அதாவது, எதிர்காற்றில் இயங்கும் வேகம் ஆனது இவ்வாறான கார்களில் தடைப்படுகிறது.

இதற்காகவே, டிஃபெண்டர் கார்களில் நன்கு ஆற்றல்மிக்க என்ஜினை லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்குகிறது. டிஃபெண்டர் கார்களை அவற்றின் கம்பீரமான தோற்றத்தினாலேயே பணக்காரர்கள் பலர் விரும்பி வாங்குகின்றனர். இந்த வகையில், சினிமா நட்சத்திரங்களையும் டிஃபெண்டர் கார்கள் வெகுவாக ஈர்க்கின்றன. குறிப்பாக, பாலிவுட் பிரபலங்கள் பலரிடத்தில் டிஃபெண்டர் கார்கள் உள்ளன.
ஆனால், பாலிவுட் பாடகர்கள் யாரிடமும் டிஃபெண்டர் கார்கள் இதுவரையில் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த குறையை பிரபல பாலிவுட் பாடகர் நேஹா கக்கர் தீர்த்துள்ளார். பாலிவுட் திரைப்படங்களுக்கு பாடல்களை பாடுவது மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்துக் கொள்ளும் நேஹா கக்கர் வாங்கியிருப்பது விலையுயர்ந்த டிஃபெண்டர் எச்.எஸ்.இ கார் ஆகும்.

இந்தியாவில் இந்த டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.5 கோடி என்கிற அளவில் உள்ளது. சமீபத்திய தொலைக்காட்சி ரியால்டி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக கலந்துக் கொள்ள தனது புதிய டிஃபெண்டர் காரில் இருந்து நேஹா கக்கர் இறங்கி வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நேஹா கக்கரின் கணவர் ரோஹன் ப்ரீத் சிங்கையும் காணலாம்.
பாடகி நேஹா கக்கர் வாங்கியிருக்கும் டிஃபெண்டர் கார் ஆனது 110 வெர்சன் ஆகும். அதாவது, இந்த டிஃபெண்டர் கார் கொஞ்சம் அதிக நீளமாக இருக்கும். இது இல்லாமல், டிஃபெண்டர் 90 கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, டிஃபெண்டர் 110 காரின் எச்.எஸ்.இ பெட்ரோல் வேரியண்ட்டை நேஹா கக்கர் வாங்கியுள்ளார்.

சாண்டோரினி கருப்பு நிறத்தில் டிஃபெண்டர் 110 காரை இவர் வாங்கியுள்ளார். மேலும், கூடுதல் தொகையை செலுத்தி அளவில் பெரியதான 20-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் காரை நேஹா கக்கர் டெலிவிரி எடுத்துள்ளார். இந்த அலாய் சக்கரங்கள் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக உள்ளன. இந்தியாவில் டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ கார் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் என்பன அந்த என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். ஆனால், இதில் எந்த என்ஜின் உடன் இந்த டிஃபெண்டர் காரை பாடகி நேஹா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.19 கோடியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிஃபெண்டர் காரை வைத்திருந்தாலே அது தனி கெத்து தான். ஒரு பெரிய படையே தன்னுடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதன் காரணமாகவே, சினிமா பிரபலங்கள் டிஃபெண்டர் கார்களை போட்டி போட்டு வாங்குகின்றனர். ஆதலால், பாடகி நேஹா கக்கர் அவரது கம்பீரமான குரலுக்கு இணையாக ஒரு காரை வாங்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









