காருடன் போட்டோஷூட் நடத்திய இந்த 20 வயது பாடகி அவரது மகளா? பழைய காரையே பயன்படுத்தும் ஆச்சிரியம்!!
பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran)-ஐ உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். பிரபல மலையாள நடிகர் (Actor), இயக்குனர் (Director) என பன்முக திறமை கொண்டவர். இவரது அண்ணனான இந்திரஜித் சுகுமாரனும் நடிகர் ஆவார். அதனை காட்டிலும், இந்திரஜித் ஓர் பிரபலமான பின்னணி பாடகர் ஆவார். இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனா (Prarthana)-வும் மலையாள சினிமா உலகில் வளர்ந்துவரும் பின்னணி பாடகியாக விளங்குகிறார். இப்போது ஏன் இவர்களை பற்றி பார்க்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். பிரார்த்தனா இந்திரஜித் தனது பழைய ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) காரை கவர்ச்சிக்கரமான புதிய தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
காருடன் பிரார்த்தனா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன. ஏனெனில், அவரது ஃபோக்ஸ்வேகன் கார் அந்த அளவிற்கு சூப்பரான காராக மாற்றப்பட்டு உள்ளது. பிரார்த்தனா போன்ற சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் விலையுயர்ந்த கார்களில் உலா வருவதை தான் அதிகமாக பார்த்திருக்கிறோம்.

ஏற்கனவே வீட்டில் ஒன்றுக்கு 4 சொகுசு கார்கள் நின்றுக் கொண்டிருந்தாலும் புதியதாக ஒரு விலையுயர்ந்த காரை வாங்கி கவனத்தை ஈர்ப்பர். ஆனால், பிரார்த்தனா இந்திரஜித் வித்தியாசமானவராக விளங்குகிறார். 20 வயதான பிரார்த்தனா பெரும்பாலும் பயன்படுத்துவது ஒரு பழைய ஃபோக்ஸ்வேகன் போலோ (Polo) என்கிற ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் போலோ காரின் விற்பனையை நிறுத்தி வருடக்கணக்கில் ஆகிவிட்டது. இதனாலோ என்னவோ பிரார்த்தனா தனது பழைய ஃபோக்ஸ்வேகன் காரை புதிய தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், "கம்பீரமான மாற்றம்" என்கிற கேப்ஷன் உடன், பளபளக்கும் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட தனது ஃபோக்ஸ்வேகன் காருடன் எடுத்துக் கொண்ட படங்களை பிரார்த்தனா வெளியிட்டுள்ளார்.

இந்த இளம் மலையாள பின்னணி பாடகி வைத்திருப்பது, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஜிடி வேரியண்ட் ஆகும். பிரார்த்தனாவின் போலோ ஜிடி காரின் முன்பக்கத்தில் முரட்டுத்தனமான டிசைனில் ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, முன்பு இருந்த ஹெட்லைட் & டெயில்லைட்களை நீக்கி அவற்றிற்கு பதிலாக புதிய ஒன்றை பொருத்தி உள்ளனர்.
அத்துடன், காரின் பின்பக்கத்தில் ஜிடிஐ ஸ்பாய்லர் (GTI Spoiler) புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இதுதான், இந்த போலோ ஜிடி காருக்கு புதுமையான தோற்றத்தை வழங்கியுள்ளது என சொல்ல வேண்டும். இதுமட்டுமின்றி, பிரார்த்தனாவின் இந்த போலோ ஜிடி காரில் 16 இன்ச்சில் போர்டாகோ சக்கரங்கள் மற்றும் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் பொருத்திய பின்னர், காருக்கு திராவைட் கிரே நிறத்தில் பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. போலோ ஜிடி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது கார் ஆர்வலர்கள் பலரது ஃபேவரட் காராக உள்ளது. இருப்பினும், இதன் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் நிறுத்திவிட்டது. இந்த காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெள்ளை நிறத்தில் இருந்த பிரார்த்தனா இந்திரஜித்தின் இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் மொத்தமாக அடையாளமே தெரியாத அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இவரது காரில் பொருத்தப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளுள் பெரும்பாலானவை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ ஜிடி காருக்கென ஆப்ஷனலாக வழங்கக்கூடியது ஆகும். மற்றப்படி, காருக்கு உள்ளேயும், காரின் பெர்ஃபார்மன்ஸிலும் பிரார்த்தனா ஏதேனும் மாடிஃபிகேஷன்களை கொண்டுவந்திருக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
