இவ்ளோ காசு குடுத்து எலெக்ட்ரிக் கார் வாங்கனது அவரா! விலை மட்டும் எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடி போயிருவாரு!
பாலிவுட் (Bollywood) திரையுலகில் மிகவும் பிரபலமான பாடகர்களில் (Singer) ஒருவராக இருப்பவர் ஷான் (Shaan). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் (Mercedes Benz EQS 580 4Matic) ஆகும்.
இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விலை 1.62 கோடி ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.70 கோடி ரூபாய் வரை வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரை, பாடகர் ஷான் தனது குடும்பத்தினருடன் சென்று டெலிவரி எடுத்துள்ளார். பாடகர் ஷானின் மனைவி ராதிகா முகர்ஜி (Radhika Mukherji) மற்றும் மகன் சோஹம் முகர்ஜி (Soham Mukherji) ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரில், 107.8 kWh பேட்டரி (Battery) தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 857 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் எள் அளவிற்கும் சந்தேகமில்லை.

இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதும் கூட மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 31 நிமிடங்களில் இந்த பேட்டரியை, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இந்த எலெக்ட்ரிக் கார் செயல்திறன் என்ற விஷயத்திலும் கூட அசத்த கூடியதுதான். இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் நாங்கள் தெரிவிக்கிறோம்.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த எலெக்ட்ரிக் காருக்கு வெறும் 4.2 வினாடிகள் மட்டுமே தேவைப்படும். ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பின் இருக்கை பயணிகளுக்கு MBUX Tablet, 9 ஏர்பேக்குகள், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் என இந்த எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை.
பாடகர் ஷான் இந்த காரை டெலிவரி எடுத்த நிகழ்ச்சியை, டீலர்ஷிப் நிர்வாகம் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. ஷான் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மூலம் டீலர்ஷிப்பை அலங்கரித்திருந்தது இதற்கு ஒரு உதாரணம் ஆகும். அத்துடன் காரை டெலிவரி எடுப்பதற்கு முன்பாக ஷான் குடும்பத்தினர் பாரம்பரிய சடங்குகளையும் நடத்தி முடித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாடகர் ஷான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் கார், சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக நம்பலாம். இது சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் கார் என்பது, கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








