உள்ளே நுழைந்தால் மினி தியேட்டர் அளவுக்கு இருக்கும் காரை வாங்கிய பாடகர்! இவரை பார்த்து நிறைய பேர் வாங்க போறாங்க
பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் (Shankar Mahadevan), தனது புதிய சொகுசு காராக எம்ஜி எம்9 என்கிற பிரம்மாண்டமான சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அவரது இசையைப் போலவே, அவர் புதியதாக வாங்கியுள்ள இந்த கார் புதுமை, நேர்த்தியுடன் தொழில்நுட்பத்தின் சங்கமமாக விளங்குகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்த விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் பாடகர் சங்கர் மகாதேவனின் பன்முக ஆளுமையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியமும், நவீனமும், படைப்பாற்றலும், தனித்துவமும் இணைந்த ஒரு கலைப்படைப்புக்கு நிகரானது இந்த எம்ஜி வாகனம் ஆகும். எம்ஜி எம்9 காரின் உட்புற வடிவமைப்பு, ஆடம்பர அம்சங்கள் ஆகியவை பயண அனுபவத்தை மேம்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

கலை மற்றும் வசதி ஆகியவற்றை ஒருங்கே கொண்டு, சொகுசு மற்றும் அதிநவீன அம்சங்களை இந்த கார் மறுவரையறை செய்கிறது. 16 விதமாக சரிசெய்யக்கூடிய 'பிரெசிடென்ஷியல் இருக்கைகள்', எட்டு மசாஜ் மோட்கள், சூடேற்றும் மற்றும் குளிர்விக்கும் வசதிகள், அத்துடன் இரட்டை சன்ரூஃப் ஆகியவை இதில் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து காரின் வசதியையும் அழகியலையும் உருவாக்குகின்றன.
மேலும், கேபினை சுற்றிலும் விளக்குகள் (Ambient Lighting) மற்றும் கோனாக் பிரவுன் நிற லெதர் இருக்கைகள் ஒவ்வொரு பயணத்தையும் தனித்துவமாக்குகின்றன. இதன் இண்டெலிஜென்ட் ஆர்ம்ரெஸ்ட் கண்ட்ரோல்கள், பல ஸ்டோரேஜ் பகுதிகள் ஆகியவை பயணத்தை எளிதாக்குகின்றன. எம்ஜி எம்9 காரில் 13 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், சப்வூஃபர், ஆம்ப்ளிஃபையர் ஆகியவை ஒரு இசை நிகழ்ச்சிக்கு இணையான அனுபவத்தை வழங்குகின்றன.

பேர்ல் லஸ்ட்ரே ஒயிட், மெட்டல் பிளாக் மற்றும் கான்கிரீட் கிரே ஆகிய வண்ணங்களில் எம்ஜி எம்9 கிடைக்கிறது. இதன் சரிவக வடிவ கிரில், இரண்டாக பிரிக்கப்பட்ட LED ஹெட்லேம்ப்கள், நீர்வீழ்ச்சி ஸ்டைலில் டெயில்லைட்கள், 19-இன்ச் காண்டிசீல்TM டயர்கள் ஆகியவை வாகனத்திற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. எம்ஜி எம்9 ஆனது, அதி வலிமைமிக்க இரும்பு மூலம் உருவாக்கப்படுகிறது.
7 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) உள்ளிட்டவற்றை கொண்ட எம்ஜி எம்9 கார் யூரோ என்சிஏபி மற்றும் ஆசியன் என்சிஏபியில் 5-நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. 90kWh நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் பேட்டரி மூலம் இயக்கப்படும் எம்9, ஒருமுறை சார்ஜ் செய்தால் 548 கிமீ தூரம் வரை இயங்கக்கூடியது.

இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை 30% முதல் 80% வரை சார்ஜ் நிரப்ப வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 90kWh பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 245 PS சக்தி மற்றும் 350 NM டார்க் திறனை கொண்டது. இது அமைதியான, அதே சமயம் ஆற்றல் மிகுந்த பயண அனுபவத்தை வழங்குகிறது.
எம்ஜி எம்9 கார்கள் இந்தியாவில் 13 முக்கிய நகரங்களில் உள்ள 14 எம்ஜி செலெக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு எம்9 காரை பார்வையிட்டு முன்பதிவு செய்யலாம். சீன நிறுவனமான SAIC மோட்டார், இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) குழுமத்துடன் இணைந்து 2023-ஆம் ஆண்டு ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் SAIC மோட்டார் தனது வணிகத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டு நிறுவனம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த மதிப்புடைய வாகனங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி மோட்டாரின் கூட்டணிக்கு பிறகே எம்ஜி கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்க துவங்கியது. குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தது மற்றும் BaaS முறையை கொண்டுவந்தது என இதற்கு பல காரணங்களை சொல்லலாம். தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான சங்கர் மகாதேவன் போன்றோர் இந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரை வாங்குவது எம்ஜி கார்களின் விற்பனையை இந்தியாவில் மேலும் அதிகப்படுத்தும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









