29 வயதில் மரணம்... மறைந்த பாடகர் வாழ்ந்த வீட்டின் இன்றைய நிலை!! கார்களை பார்த்துக் கொள்ள கூட ஆள் இல்லை!
சித்து மூஸ்வாலா (Sidhu Moosewala), பிரபல பஞ்சாபி பாடகர் மற்றும் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெறுவதில் ஏற்பட்ட மோதலில் கடந்த 2022 மே மாதத்தில் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். அரசியலில் நுழைந்ததில் இருந்தே இவருக்கு மிரட்டல்களும், ஆபத்துகளும் இருந்துள்ளன. இதனால்தான் முன்னெச்சரிக்கையாக புல்லட் ப்ரூஃப் காரை சிந்து மூஸ்வாலா பயன்படுத்தி வந்தார். ஆனால், சம்பத்தின்போது தன்னிடம் இருந்த மஹிந்திரா தாரில் சென்றதினால், தாக்குதலில் இருந்து சித்து மூஸ்வாலாவால் தப்பிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
சித்து மூஸ்வாலா வைத்திருந்த புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பிரபலமான ஒன்றாகும். ஏனெனில், இந்தியாவில் ஃபார்ச்சூனர் காரை புல்லட் ப்ரூஃப் தரத்தில் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவே. சித்து மூஸ்வாலாவின் புல்லட் ப்ரூஃப் ஃபார்ச்சூனர் கார் தற்போது ரீ-ஸ்டோர் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கார் முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் ரஜ்னி சவுத்ரி என்பவர், பஞ்சாப் மாநிலம் மான்சா நகரத்திற்கு அருகே மூசா என்கிற கிராமத்தில் உள்ள மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு சித்துவின் பெற்றோர்களை சந்தித்த ரஜ்னி சவுத்ரி, சித்துவின் புல்லட் ப்ரூஃப் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ரீ-ஸ்டோர் செய்துக் கொடுக்க விரும்பியுள்ளார்.
இதனை சித்துவின் பெற்றோரிடம் கேட்க, அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். ஏனெனில், சித்து மூஸ்வாலா பயன்படுத்திய மற்ற கார்களுள் சிலவற்றை சித்துவின் பெற்றோர்கள் தாங்களாக ரீ-ஸ்டோர் செய்துள்ளனர். ஆனால், அந்த கார்கள் சிறந்த தரத்தில் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றித் தரப்படவில்லை. இதனால்தான், ரஜ்னி சவுத்ரி கேட்டவுடன் சித்துவின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.

இந்த புல்லட் ப்ரூஃப் ஃபார்ச்சூனர் காரை ரீ-ஸ்டோர் செய்வதற்காகவே ரஜ்னி சவுத்ரி 'தி லெஜண்ட் டீடெயிலர்ஸ்' என்கிற குழுவை உருவாக்கி வேலையை துவங்கியுள்ளார். சித்து மூஸ்வாலாவின் ஃபார்ச்சூனர் காரை ரீ-ஸ்டோர் செய்வதற்காக பிரஷர் வாட்டர், டிரை & வெட் வாக்யூம், பாலிஷிங் மெஷின்கள் உள்பட நிறைய பொருட்களை இந்த குழுவினர் புதியதாக வாங்கியுள்ளனர்.
முதலாவதாக, காரை பிரஷர் வாட்டரில் சுத்தமாக செய்துள்ளனர். இதற்காக வெவ்வேறு விதமான பிரஷ்களை பயன்படுத்தியதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். அதன்பின், காருக்குள் வாக்யூமை வைத்து சுத்தம் செய்துள்ளனர். காருக்குள் பேனல்கள் மற்றும் பட்டன்களுக்கு அடியில் சிக்கியிருந்த தூசி, துகள்களை அகற்றுவதற்காக பிரத்யேகமான க்ளீனரை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த முதற்கட்ட சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பிறகு, ரோட்டரி மெஷின்களை வைத்து கார் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின், காரின் வெளிப்புறம் பாலிஷ் செய்யப்பட்டது. ஃபார்ச்சூனர் காரின் பழைய பளபளக்கும் தன்மையை கொண்டுவருவதற்காக செராமிக் கோட்டிங்கை கொடுத்துள்ளனர். இந்த ஃபார்ச்சூனர் காரில் நிறைய பாகங்களுக்கு மீண்டும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஃபார்ச்சூனர் காரை ரீ-ஸ்டோர் செய்தது மட்டுமல்லாமல், சித்து மூஸ்வாலாவின் குடும்பத்துடன் மேற்கொண்ட உரையாடலையும் ரஜ்னி சவுத்ரி தனது வீடியோவில் காட்டி உள்ளார். மேலும், இறப்பதற்கு முன் சித்து மூஸ்வாலா கட்டிய புதிய வீடு மற்றும் பாடகராக அவர் தனது பயணத்தை துவங்கிய இடம் உள்ளிட்டவற்றையும் வீடியோவில் காட்டியுள்ளனர். சித்து மூஸ்வாலாவின் கேரேஜில் லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை விலையுயர்ந்த வாகனங்கள் இருந்தாலும், கொலை சம்பவத்தின்போது மஹிந்திரா தார் வாகனத்தை பயன்படுத்தியது தான் சித்து மூஸ்வாலாவின் தவறு ஆகும். மஹிந்திரா தார் பாதுகாப்பான வாகனம் தான், இருந்தாலும் துப்பாக்கி புல்லட்களை தாங்கும் அளவிற்கு தரமானது கிடையாது. ஃபார்ச்சூனர் காரின் உடலும் புல்லட்களை தாங்கிக்கொள்ள கூடியது கிடையாது. இருப்பினும், அதனை புல்லட் ப்ரூஃப் செய்துள்ளதால், அதனை சித்து மூஸ்வாலா பயன்படுத்தி இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









