உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

பிரபல பாடகர் ஒருவர் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் மிக பிரபலமான பாடகர்களில் ஒருவர் சோனு நிகம் (Sonu Nigam). இவரது பாடல்களை கேட்பது உற்சாகமான அனுபவத்தை தரக்கூடிய ஒன்று. பாடகர் மட்டுமல்லாது, இசை அமைப்பாளர், நடிகர் என சோனு நிகத்திற்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. பாடகர் சோனு நிகத்தை பற்றி இங்கே பேசி கொண்டிருப்பதற்கு காரணம் இருக்கிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

புத்தம் புதிய கியா கார்னிவல் (Kia Carnival) கார் ஒன்றை சோனு நிகம் தற்போது வாங்கியுள்ளார். இது சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மும்பையில் உள்ள ஒரு கியா டீலர்ஷிப்பில் கார்னிவல் காரை சோனு நிகம் டெலிவரி பெற்றுள்ளார். சோனு நிகத்திற்கு நெருக்கமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் கியா நிறுவனத்தின் விலை உயர்ந்த காராக கார்னிவல் திகழ்கிறது. கியா கார்னிவல் காரின் ஆரம்ப விலை 24.95 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 33.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் சோனு நிகம் கியா கார்னிவல் காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர் டாப் வேரியண்ட்டை வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் கார்னிவல் காரை 2021 மாடல் ஆண்டுக்காக மேம்படுத்தியுள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த 2021 கியா கார்னிவல் காரில், புதிய கியா லோகோ, சில்வர் ஸ்கிட் பிளேட், புதிய 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் கியா கார்னிவல் கார், பிரீமியம் ஹார்மன் கார்டன் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 10 வழிகளில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய டிரைவர் இருக்கை ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. கியா கார்னிவல் காரில், 2.2 லிட்டர், நான்கு-சிலிண்டர், விஜிடி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஸ்போர்ட்மேட்டிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

கியா கார்னிவல் கார் இந்திய சந்தையில் தற்போது வெகுவாக பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெரிய குடும்பத்தினர், அரசியல்வாதிகள் ஆகியோர் மத்தியில் கியா கார்னிவல் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விலை உயர்ந்த காராக இருந்தாலும், அதற்கு ஏற்ற விற்பனை எண்ணிக்கையை கியா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் கார்னிவல் கார் ஈட்டி தருகிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

கியா நிறுவனம் அடுத்ததாக புத்தம் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எம்பிவி கார் கியா கேரன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எம்பிவி கார் வரும் டிசம்பர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதை தொடர்ந்து 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கியா கேரன்ஸ் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறுகிய காலமே இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா கேரன்ஸ் எம்பிவி கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் கார்னிவல் தவிர, செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய 2 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டுமே எஸ்யூவி ரக கார்கள் ஆகும். செல்டோஸ் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. சொனெட் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல பாடகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த கார்கள் அனைத்திற்குமே இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் கியா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான கேரன்ஸ் காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலையில் வந்தால், கியா கேரன்ஸ் இந்திய சந்தையில் நிச்சயம் 'ஹிட்' அடிக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer sonu nigam buys kia carnival here are all the details
Story first published: Tuesday, November 30, 2021, 15:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X