ஏழே வருடங்களில் நான் யாருனு மொத்த சினிமாவுக்கும் காட்டிட்டாரு! 32 வயதிலேயே லம்போர்கினி கார் ஓனராகுவது ஈசி இல்ல

லம்போர்கினி (Lamborghini) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். லம்போர்கினி காரை குறைந்தது சாலையில் ஆவது நேரில் பார்த்துவிட வேண்டும் என நம்மில் நிறைய பேர் விரும்புவோம். அதுவே, பெரும் பணக்காரர்கள் லம்போர்கினி காரை வாங்க ஏங்குவர். ஆக மொத்தத்தில் நாம் எல்லாருமே லம்போர்கினி கார் பிரியர்களாவர். ஆனால், இந்தியாவில் லம்போர்கினி கார்களை பயன்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, லம்போர்கினி கார்களின் தாழ்வான உடலமைப்பாகும். பெரும்பாலான லம்போர்கினி கார்கள் தாழ்வான உடலமைப்புடன் உருவாக்கப்படுவதால், அவை நம் இந்திய சாலைகளின் தரத்திற்கு ஏற்றவை இல்லை.

சாலையின் பள்ளம், மேடுகளிலும், வேகத்தடைகளிலும் சில லம்போர்கினி கார்கள் சேதமடைந்த சம்பவங்களை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து 'உருஸ்' (Urus) கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்தியாவிலும் நிறைய பேர் லம்போர்கினி காரை வாங்க ஆரம்பித்தனர்.

stebin ben buys lamborghini urus

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமே லம்போர்கினி உருஸ் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், உருஸ் காரின் உடலமைப்பாகும். மற்ற லம்போர்கினி கார்களை போல் இல்லாமல், நிமிர்ந்த தோற்றம் கொண்டதாக உருஸ் உருவாக்கப்படுகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி (SUV) ரக கார், உருஸ் ஆகும்.

போதுமான அளவிற்கு உயரமான தோற்றம் கொண்டதாக உருஸ் உருவாக்கப்படுவதால், தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையே போதுமான இடைவெளி கிடைப்பது மட்டுமின்றி, காருக்கு உள்ளேயும் போதுமான இடவசதி கிடைக்கிறது. இதனால், நம் இந்தியாவிற்கு ஏற்ற லம்போர்கினி காரை வாங்க விரும்பும் பலரது தேர்வு உருஸ் எஸ்யூவி ஆக உள்ளது. இந்த வரிசையில், இந்திய அளவில் பிரபலமான பாடகர் ஒருவர் தற்போது உருஸ் காரை வாங்கி உள்ளார்.

stebin ben buys lamborghini urus

இவரது பெயர், ஸ்டெபின் பென் (Stebin Ben) ஆகும். மத்திய பிரதேசம் மாநில போபாலில் பிறந்தவரான 32 வயதான ஸ்டெபின் பென், ஓர் பிரபலமான இந்திய பாப் பாடகர் ஆவார். மக்கள் முன் நேரலை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தக்கூடியவராக விளங்கும் ஸ்டெபின் பென், தனது மெல்லிசை குரல் மூலமாக ரசிகர்கள் பலரால் அறியப்படுகிறார்.

2017ஆம் ஆண்டில் மும்பைக்கு இடம்பெயர்ந்த ஸ்டெபின் பென்னின் சினிமா வாழ்க்கை 2018ஆம் ஆண்டில் இருந்தே பிக்-அப் ஆக துவங்கி விட்டது. முதல் படமே நடிகர் சல்மான் கானின் 'ரேஸ் 3' திரைப்படமாக கிடைத்ததன் மூலம் ஸ்டெபின் பென் விரைவாகவே பாலிவுட் (Bollywood) சினிமா துறையில் கவனத்தை பெற ஆரம்பித்தார்.

பெங்காலி மொழியில் ஒரேயொரு பாடலை தவிர்த்து, இந்தி மொழியை தாண்டி வேறெந்த மொழியிலும் ஸ்டெபின் பென்னின் பாடல்கள் இதுவரையில் இருந்தது இல்லை. ஷ்ரேயா கோஷல், சின்மயி போன்ற பிரபலமான பாடகிகள் உடன் இணைந்து பாடல்களை பாடியுள்ள ஸ்டெபின் பென் புதியதாக வாங்கிய லம்போர்கினி உருஸ் கார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லம்போர்கினி உருஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த லம்போர்கினி கார் தற்சமயம் எஸ் மற்றும் எஸ்.இ என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.18 கோடி மற்றும் ரூ.4.57 கோடி ஆகும். இதில், உருஸ் எஸ்.இ வேரியண்ட் ஆனது பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ளவை காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய காரை வாங்கியிருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் பாடகர் ஸ்டெபின் பென் அடைந்திருக்கும் உயரத்தை அறிய முடிகிறது. லம்போர்கினி கார்களுக்கே உண்டான மஞ்சள் நிறத்தில் உருஸ் காரை இந்த பாடகர் வாங்கியிருப்பது கவனத்தை ஈர்க்க கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 5, 2025, 15:59 [IST]
English summary
Singer stebin ben buys lamborghini urus suv car in yellow colour
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+