Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 12 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடுக்காட்டில் யானையிடம் சிக்கி கொண்ட பிரபல நடிகர்... புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதால் தப்பினார்... வீடியோ...
பிரபல நடிகர் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாம் கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும் தினமும் காட்டு யானை எதிரே வரப்போவதில்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அது நமக்கு பயத்தை ஏற்படுத்தி விடலாம். பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த பயத்தை அனுபவித்தது போல் தெரிகிறது. ஆம், வன பகுதியில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது யானை ஒன்று குறுக்கே வந்துள்ளது.

அதன் உருவத்தை வைத்து பார்க்கையில், காருக்குள் இருந்த அனைவரும் நிச்சயம் பயந்திருப்பார்கள் என்பது போலதான் தெரிகிறது. ஆனால் காருக்குள் இருந்தபடியே விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் அங்கு நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளனர். காட்டு யானையை நேருக்கு நேராக எதிர்கொண்டபோது, அவர்கள் எதற்காகவும் காரை விட்டு கீழே இறங்கவே இல்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!

அந்த வனப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதை வீடியோவில் உணர முடிகிறது. விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற சிகப்பு கலர் கார், மண் சாலையின் மைய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதை போல் தெரிகிறது. ஆனால் என்ன கார் என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.

அனேகமாக இது புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியாக இருக்கலாம். சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி கார்தான் அது. இதற்கிடையே காட்டு யானையை பார்த்த உடனேயே அவர்கள் காரை நிறுத்தி விட்டனர். பின்னர் காருக்கு மிகவும் நெருக்கமாக வந்த யானை, சிறிது நேரம் நோட்டமிட்டு விட்டு, வந்த வழியிலேயே திரும்பி சென்றது.

ஆனால் காட்டு யானை பாதுகாப்பான தொலைவில் சென்று மட்டும்தான் நின்று கொண்டது. காருக்கு வழி விடவில்லை. அத்துடன் இந்த காரால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை காட்டு யானை உடனடியாக உணர்ந்து கொண்டது. இதனால் மீண்டும் காருக்கு முன்னால் வந்து நின்றது. அந்த காரை தாண்டி செல்வதற்கு யானை வழியை தேடியது போல தெரிகிறது.

மண் சாலையின் மைய பகுதியில் கார் நின்று கொண்டிருந்த காரணத்தால், பக்கவாட்டில் இடம் இருப்பதை யானையால் உணர முடியவில்லை. எனினும் பக்கவாட்டில் போதுமான இடம் இருப்பதை சற்று நேரத்தில் யானை உணர்ந்து கொண்டது. இதன்பின் அந்த வழியாக யானை காரை கடந்து, தன்னுடைய வேலையை பார்த்து கொண்டு சென்று விட்டது.

அதன்பின்னர்தான் காருக்குள் இருந்த அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு சூழலில், விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி காரை விட்டு கீழே இறங்கவில்லை. அத்துடன் காரை நகர்த்தவும் இல்லை. எதுவும் தவறாக நடக்காது என்ற உறுதியை இது யானைக்கு வழங்கியிருக்கும். எனவே யானை அமைதியாக சென்றிருக்கலாம்.

ஆனால் ஹாரன் அடிப்பது, ஆக்ஸலரேட்டரை உர்... உர்... என உறும வைப்பது போன்ற சேட்டைகளை நாம் செய்தால், அது யானைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும். எனவே தன்னை பாதுகாத்து கொள்ளும் நோக்கில், யானை நம்மை தாக்க தொடங்கலாம். எனவே வனப்பகுதிகளில் வாகனங்களில் செல்லும் சமயங்களில் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் இருங்கள்.

இந்த சம்பவத்தை எடுத்து கொண்டால் கூட, விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் மகத்தான பொறுமையை காட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலரோ, வன விலங்குகள் வழி விட்டு விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் வாகனங்களை முன்னோக்கி செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் வன விலங்குகளுக்கு இது பயத்தை ஏற்படுத்தி விடலாம்.

இதன் காரணமாக அவை வாகனங்களை தாக்க தொடங்கி விடும். யானைகள் போன்ற விலங்குகள் மிகவும் வலிமையானவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அவற்றால் கார்களை மிக எளிதாக தாக்க முடியும். வன விலங்குகளை எந்த வழியிலும் தொல்லை செய்யாமல் இருப்பதுதான், அவற்றை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி. அத்துடன் எந்தவிதமான சப்தங்களையும் நாம் எழுப்ப கூடாது.
நமது திடீர் நடவடிக்கைகளோ அல்லது சப்தமோ வன விலங்குகளுக்கு கோபத்தையோ அல்லது பயத்தையோ ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காடு என்பது வன விலங்குகளுக்கு சொந்தமானது. நாம்தான் வன விலங்குகளின் இருப்பிடத்திற்கு செல்கிறோம் என்பதை மனதில் வைத்து பொறுமையாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டால் அவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.