எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பைக்குகளில் பழைய சிங்கிள் சீட் மற்றும் புதிய ஸ்பிளிட் சீட் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பைக்குகளின் மிக முக்கியமான பாகங்களில் இருக்கையும் (Seat) ஒன்று. குறிப்பாக பைக் ஓட்டுபவருக்கு சௌகரியமான பயணத்தை வழங்குவதில் இருக்கை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆரம்பத்தில் அனைத்து பைக்குகளும் 'சிங்கிள் சீட்' (Single Seat) உடன்தான் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் நாளடைவில் பைக்குகளின் டிசைன் தொழில்நுட்பம் வளர வளர, 'ஸ்பிளிட் சீட்' (Split Seat) என்ற புதிய குழந்தை பிறந்தது. இந்த இரண்டு இருக்கைகளும் ஒன்றுக்கொன்று எப்படி வேறுபட்டவை? என்பதை இந்த செய்தி தொகுப்பு விரிவாக அலசுகிறது. நீங்கள் புதிய பைக்கை வாங்குவதாக இருந்தால் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சாதாரண கம்யூட்டர் ரக பைக்குகள் (Commuter Bike) மற்றும் அட்வென்ஜர் ரக பைக்குகளில் (Adventure Bike) பெரும்பாலும் சிங்கிள் சீட்தான் வழங்கப்படுகிறது. பைக் ஓட்டும்போது ரைடருக்கு தாராளமான இடவசதியை சிங்கிள் சீட் வழங்குகிறது. அத்துடன் சிங்கிள் சீட்டை கழற்றி மாட்டுவது என்பது மிகவும் எளிமையான வேலை.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன் மூலம் இருக்கைக்கு அடியில் இருக்கும் இடவசதியை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் சிங்கிள் சீட் சேதம் அடைந்தாலும் எளிதாக மாற்றி கொள்ளலாம். ஏனெனில் சிங்கிள் சீட்டின் விலை மிகவும் குறைவுதான். ஆனால் சிங்கிள் சீட்டின் டிசைன் கவர்ச்சிகரமாக இருக்குமா? என்றால் நிச்சயமாக சந்தேகம்தான்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதற்காக சிங்கிள் சீட்டின் டிசைன் நன்றாக இருக்காது என்று நாங்கள் சொல்லவில்லை. அவை மிகவும் பழைய டிசைன் என்று சொல்கிறோம். அதேபோல் அதிக ஆக்ஸலரேஷன் கொடுக்கும்போதோ அல்லது திடீரென பிரேக் பிடிக்கும்போதோ பைக்கை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவதும் அதிகம் நகர்வது போன்ற சூழல் உருவாகும்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இது நல்லதல்ல. குறிப்பாக நகர பகுதிகளில் பைக்கை ஓட்டி கொண்டிருக்கும்போதோ அல்லது தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போதோ இது நல்ல விஷயம் கிடையாது. இதுபோல் சிங்கிள் சீட்டில் ஒரு சில நன்மைகளும், அதே நேரத்தில் ஒரு சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆனால் ஸ்பிளிட் சீட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஸ்பிளிட் சீட்டின் மிக முக்கியமான அம்சமே டிசைன்தான். பைக்கை கவர்ச்சிகரமாக காட்டுவதில் ஸ்பிளிட் சீட் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஸ்பிளிட் சீட் பைக்கை நிச்சயம் ஸ்போர்ட்டியாக காட்டும். எனவே ஸ்பிளிட் சீட் தற்போது இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய அம்சமாக திகழ்கிறது. ஸ்பிளிட் சீட் பைக்கை கவர்ச்சிகரமாக காட்டுகிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்கின்றனர்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதற்கு அடுத்தபடியாக சௌகரியம்தான் ஸ்பிளிட் சீட்டின் இரண்டாவது சிறப்பம்சம். ஆம், உண்மையில் ஸ்பிளிட் சீட்கள் மிகவும் சௌகரியமானவை. பைக்கை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து சௌகரியமாக பயணம் செய்யலாம். அதாவது கடினமான ஆக்ஸலரேஷனின்போது, பின்னால் அமர்ந்திருப்பவரின் இருக்கைக்கு ரைடர் செல்ல மாட்டார்.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் திடீரென பிரேக் பிடிக்கும்போது, பின்னால் அமர்ந்திருப்பவர் சரியாக அமர்ந்திருந்தால், ரைடரின் இருக்கைக்கு 'ஜம்ப்' ஆக மாட்டார். எனவே தொல்லைகள் இல்லாத சௌகரியமான பயணத்தை வழங்குவதில் ஸ்பிளிட் சீட் முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் 'பிராக்டிக்கல்' என்ற அம்சத்திலும் ஸ்பிளிட் சீட் சிறப்பானது.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஸ்பிளிட் சீட்டாக இருந்தால், பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, முன்னால் உள்ள சாலையின் நல்ல 'வியூ' கிடைக்கும். இது உண்மையில் சிறப்பான விஷயம். இதை வார்த்தைகளில் விவரிப்பதை விட, ஸ்பிளிட் சீட்டில் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும்போதுதான் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். இப்படி ஸ்பிளிட் சீட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மற்றபடி ஸ்பிளிட் சீட்டில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை. இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். பொதுவாக பார்த்தால் இன்றைய காலகட்டத்தில், சிங்கிள் சீட்டை விட ஸ்பிளிட் சீட்தான் சிறந்தவையாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிங்கிள் சீட்டை தேர்வு செய்வதா? அல்லது ஸ்பிளிட் சீட்டை தேர்வு செய்வதா? என்பது அவரவர் தேவை மற்றும் விருப்பங்களை பொறுத்தது.

எப்பவுமே 'ஸ்பிளிட் சீட்' இருக்கற பைக்கைதான் வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுதவிர பைக்கை தேர்வு செய்யும்போது, இருக்கையின் குஷனிங், நீளம் மற்றும் அகலம் ஆகிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு செயல்பட்டால், உங்களால் சரியான இருக்கையை தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் பிரச்னைகள் இல்லாத சௌகரியமான பயணத்தை நீங்கள் பெறலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Single seat vs split seat here s everything you need to know
Story first published: Thursday, November 4, 2021, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X