சிராஜுக்கு பரிசாக இவ்வளவு விலையுயர்ந்த வாகனமா? இதை அவர் எதிர்பார்க்கவே மாட்டாரு!! ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களை அள்ளி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு மஹிந்திரா நிறுவனம் புத்தம் புதிய தார் எஸ்யூவி வாகனத்தை பரிசாக வழங்கவுள்ளதாக பரவிய செய்திக்கு, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

6 அணிகள் போட்டியிட்ட 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்த முறை 50 ஓவர்களாக நடத்தப்பட்டது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் திரளான ரசிகர்களின் முன்னிலையில் இறுதி போட்டியை எதிர்கொண்டன. ஆனால் இந்த போட்டி எதிர்பார்த்தை விட மிக வேகமாக நிறைவடைந்தது விட்டது.

siraj presented with thar already

ஏனெனில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 16 ஓவர்களுக்கு உள்ளாகவே வெறும் 50 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன்பின், 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர் பேட்ஸ்மேன்கள் 6 ஓவர்களில் இலக்கை எட்டிவிட்டனர். இந்த போட்டியில் இந்திய அணியின் எளிதான வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆவார்.

ஒரே ஓவரில் 4 விக்கெட்களை எடுத்து அசத்திய சிராஜ் இந்த இறுதிப் போட்டியில் 7 ஓவர்களை போட்டு வெறும் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை அள்ளினார். இந்தியாவின் வெற்றிக்கு இந்த அளவிற்கு காரணமாக விளங்கிய முகமது சிராஜுக்கு மஹிந்திரா நிறுவனம் தார் வாகனத்தை பரிசாக வழங்கலாம் என தகவல்கள் வெளியாகின.

siraj presented with thar already

ஏனெனில், கடந்த சில வருடங்களாக விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மஹிந்திரா சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட, உலக செஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் இறுதிப் போட்டி வரையில் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி400 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் பரிசாக வழங்கப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

இதன் காரணமாகவே, ஆசிய கோப்பையை வெல்வதற்கு காரணமாக விளங்கிய முகமது சிராஜுக்கும் தார் பரிசாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் இதற்கு முன் எதிரணிக்காக இதயம் பூர்வமாக அழுத்ததாக நினைவில்லை... நாம் அவர்கள் மீது ஒரு அமானுஷ்ய சக்தியை கட்டவிழ்த்துவிட்டது போல் இருந்தது... @முகமதுசிராஜ் நீங்கள் ஒரு மார்வல் அவெஞ்சர்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சிராஜுக்கு தார் பரிசாக வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, "அதற்கு முன்பாக, அதை செய்துவிட்டேன்" என கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால், மஹிந்திரா தார் வாகனத்தை ஏற்கனவே சிராஜுக்கு வழங்கிவிட்டேன் என்பதாகும். ஆம்... மஹிந்திரா சார்பில் முகமது சிராஜுக்கு ஏற்கனவே தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் வழங்கப்பட்டுவிட்டது.

siraj presented with thar already

எப்போது என்று உங்களில் சிலருக்கு நினைவில்லாமல் போயிருக்கலாம். கடந்த 2021இல், கொரோனா வைரஸ் பரவல் என்ற அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரில் சில பல சறுக்கல்கள் இந்திய அணிக்கு ஏற்பட்டாலும், அந்த தொடரை இந்திய அணி வென்றது.

ஆஸ்திரேலியாவில் நீண்ட வருடங்களுக்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய 6 இளம் வீரர்களுக்கு தாரை மஹிதிரா பரிசாக வழங்கியது. அதில் முகமது சிராஜும் ஒருவர் ஆவார். இதற்கு அப்போதே சிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருந்தார். அப்போது, நம் தமிழ்நாட்டு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கும் தார் பரிசாக வழங்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகமது சிராஜுக்கு பரிசாக எந்த வாகனத்தையும் வழங்க போவதில்லையா என பலரும் கேள்விக் கேட்க, மஹிந்திரா நிறுவனம் இதற்கு ஏற்கனவே ஒரு பதிலை வைத்துள்ளது. திறமையான இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்கவிக்க எப்போதும் மஹிந்திரா தவறியதில்லை என்பதற்கு இது மிக சிறந்த உதாரணம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 18, 2023, 22:56 [IST]
English summary
Siraj presented with thar suv already says mahindra
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X