இப்படி ஒரு அக்கா கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்! தம்பி பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ்
தனது தம்பியின் நீண்ட நாள் ஆசையான சொந்தமாக பைக் வேண்டும் வாங்க வேண்டும் என்ற தம்பியின் ஆசையை அக்கா நிறைவேற்றியுள்ளார். இதை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்த குடும்பத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
நாம் அனைவருக்கும் நிச்சயமாக ஏதோ ஒரு ஆசை இருக்கும். கண்டிப்பாக நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பைக் வாங்க வேண்டும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்திருப்போம். அந்த ஆசை நிறைவேற முடியாமல் இருக்கும் நமக்கு போதுமான பொருளாதார வசதி கிடைக்காமல் இருந்திருக்கும். இதனால் இந்த ஆசை நிறைவேறாத ஆசையாகவே இருந்திருக்கும்.

ஆனால் நாம் வளர்ந்து வேலைக்கு சென்ற பிறகு சொந்தமாக சம்பாதித்து நாம் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்வோம். இப்படியாகத்தான் சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் ஆசைகளை நிறைவேற்றி உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் ஷர்மி என்ற பெயரைக் கொண்ட பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பதிவிட்ட அவர் குட்டி கதையையும் சொல்லி உள்ளார்.
அந்த கதையின் படி அக்காவும், தம்பியும் நீண்ட நாட்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அப்பொழுது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தம்பிக்கு என்ன வேண்டும் என அக்கா கேட்டுள்ளார். அப்பொழுது தம்பி கேட்கும் விஷயங்களை எல்லாம் அக்காவால் வாங்கித் தர முடியாத அளவுக்கு பொருளாதார சூழ்நிலை குடும்பத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் வளர்ந்து சம்பாதித்த பிறகு ஒரு முறை தம்பியிடம் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என கேட்டபோது தம்பி எதார்த்தமாக ஒரு பைக் ஒன்று வாங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த முறை தம்பியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்ற காத்திருந்த அக்கா கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து தம்பிக்கு பிறந்தநாள் பரிசாக சொந்தமாக பைக் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். தம்பிக்கு அவருக்கு பிடித்த கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 200 பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார்.
இதை அவர் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தான் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கதையையும் அவர் அந்த இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் வெளியிட்டுள்ளார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்தது. இதையடுத்து தம்பி தனது தாயாரை முதலில் பைக்கில் ஏற்றி ஒரு ரவுண்டு சென்று வந்தார்.

இந்த பதிவு பலரை நிகழ்ச்சி அடைய வைத்துள்ளது. நம் வாழ்நாளில் எப்படியாவது ஒரு வாகனத்தை வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நாம் இருப்போம். இந்த கனவு நினைவாகும்போது அது நம் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும். நம் கனவு நினைவாக அதைவிட வேறு என்ன விஷயம் பெரிதாக இருந்து விடப்போகிறது.
இந்த சம்பவத்தில் அக்கா தம்பிக்கு பரிசளித்த கேடிஎம் 200 டியூக் பைக் ரூபாய் 1.99 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் 199.5சிசி இன்ஜினை கொண்டதாகவும் இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.
இன்று இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் பெறும் கனவு பைக்காக இருக்கிறது. இந்த பைக்கின் வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. இந்த பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் லுக் மற்றும் ஹேண்டிலிங் எல்லாம் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாகவே இளைஞர்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கை விரும்பிய பல இளைஞர்கள் இன்று இந்த பைக்கை விரும்புகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக வாகனம் வாங்கும் கனவுடன் பல குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்து வாகனம் வாங்கும் போது அவர்களுக்கு அது நெகிழ்ச்சியான தருணமாக இருக்கும். வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்த சம்பவம் இப்படியான ஒரு சம்பவமாக தான் இருக்கிறது. இது போன்ற பலர் வளர்ந்து தங்கள் வளர்ச்சியை காட்டும் விதமாக தங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









