சிவகார்த்திகேயனின் அக்காவை எத்தனை பேர் பார்த்திருக்கீர்கள்? குடும்பமாக சேர்ந்து வாங்கிய விலையுயர்ந்த கார்!!
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), இவருக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. இன்றைய கால சிறு பிள்ளைகளை கேட்டால் கூட இவரை பற்றி சொல்லும். அந்த அளவிற்கு கோலிவுட்டில் கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த அமரன் திரைப்படம் வழக்கமான ரசிகர்களையும் தாண்டி இராணுவ அதிகாரிகள் வரையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலமாக மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் புதியதாக விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். குடும்பத்துடன் காரை அவர் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயனிடம் நிச்சயமாக பல்வேறு சொகுசு கார்கள் இருக்கும். ஆனால், அவற்றை பற்றிய விபரங்கள் அதிகமாக இல்லை. முன்னணி நடிகராக வளர வளர நடிகர் சிவகார்த்திகேயன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை கொஞ்சம் மறைத்து வைப்பதுபோல் இருந்தது. ஆனால், அந்த பார்வையை எல்லாம் பொய்யாக்கும் வகையில் தனது அக்காவுக்காக வாங்கியிருக்கும் புதிய மினி (MINI) கார் உடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த நடிகர் சிவகார்த்திகேயனின் எக்ஸ் பதிவில், "எனது மிகப்பெரும் உந்துதலான என் அருமை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குழந்தை பெற்ற பிறகு எம்பிபிஎஸ் படித்தது முதல் 38 வயதில் தங்கப்பதக்கத்துடன் எம்டி பட்டம் பெறுவது வரை. இப்போது 42 வயதில் FRCPஐ அடைவது வரை, எல்லா முரண்பாடுகளையும் தாண்டிவிட்டீர்கள். அப்பா உண்மையிலேயே பெருமைப்படுவார்.
மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அன்புள்ள அத்தான், எப்போதும் அவளுடன் நின்றதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இதில் FRCP என இவர் குறிப்பிட்டு இருப்பது என்னவென்றால், இங்கிலாந்தின் இலண்டனில் மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரி ஒன்று உள்ளது. உலகளவிலான மருத்து பல்கலைக்கழக வரிசையில் 7வது இடத்தில் உள்ள இந்த இலண்டன் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களை FRCP என அழைப்பர்.

அந்த பயிற்சியையும் நடிகர் சிவகார்த்திக்கேயனின் அக்கா கௌரி மனோஹரி முடித்துள்ளார். அதையெல்லாம் சேர்த்து கொண்டாடும் விதமாகவே, அக்காவின் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பித்துள்ளார். இவர் பரிசாக வழங்கியிருப்பது, மினி கூப்பர் (Cooper) கார் ஆகும். இந்தியாவில் மினி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் 4 கார்களுள் ஒன்றாக கூப்பர் உள்ளது.
பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமாக மினி விளங்குகிறது. நிறுவனத்தின் பெயருக்கேற்ப இதில் உருவாக்கப்படும் கார்களும் அளவில் சிறியவையாக உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள மினி கூப்பர் காரும் சவுகரியமாக 4 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையிலான அளவில் சிறிய கார் ஆகும். அதுமட்டுமின்றி, இந்த காரில் 3 கதவுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
ஆனால், விலையோ ரூ.44.90 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். எஸ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் மினி கூப்பர் காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ரேசிங் பச்சை, பிளாஸிங் நீலம், மிட்நைட் கருப்பு, ஐசி சன்ஷைன் நீலம், இண்டிகோ சன்செட் நீலம், ஓசன் வேவ் பச்சை, மெல்டிங் சில்வர், சில்லி ரெட், சன்னி சைடு மஞ்சள், நானுக் வெள்ளை என 10 விதமான கலர் ஆப்ஷன்களில் மினி கூப்பர் கிடைக்கிறது. இதில், இண்டிகோ சன்செட் நீல நிறத்தில் இந்த காரை நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ் தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள படத்தில், அவரது மனைவி உள்பட அக்கா, மாமா மற்றும் அவர்களது குழந்தைகளை பார்க்க முடிகிறது. அக்காவின் வீட்டில் 4 பேர் இருப்பதாலோ என்னவோ 4 பேர் பயணிக்கக்கூடிய மினி காரை சிவகார்த்திகேயன் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த காரின் அளவு வேண்டுமாயின் சிறியதாக இருக்கலாமே தவிர்த்து, ஆற்றலில் எந்தவொரு குறையும் கிடையாது.


Click it and Unblock the Notifications








