ரத்தன் டாடா என்கிற ஜாம்பவான் இந்தியால பிறக்காம போயிருந்தா நாம இந்த கார்கள எல்லாம் பாத்தே இருந்திருக்க மாட்டோம்

இந்திய தொழில்துறை உலகின் ஜாம்பவானான ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை (அக்டோபர் 9) அன்று இரவு இந்த உலகைவிட்டு மறைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னுடைய 86 ஆவது வயதிலேயே அவர் இந்த உலகை விட்டு சென்றார். இவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை என ஒட்டுமொத்த உலகமும் இரங்கல் தெரிவித்தது. குறிப்பாக, இந்திய மக்கள் பலர் இவரின் மறைவை ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்தினர்.

அந்த அளவிற்கே ரத்தன் டாடா இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஒப்பற்ற பணிகளை ஆற்றியிருக்கின்றார். அவரின் மக்கள் நல பணிகளை சொல்லால் குறிப்பிட்டுவிட முடியாது. எண்ணிலடங்கா சேவைகளையே அவர் ஆற்றியிருக்கின்றார். மேலும், இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமிதமடையச் செய்யக் கூடிய காரியங்கள் பலவற்றையும் அந்த மனிதர் செய்திருக்கின்றார்.

Cars launched under ratan tata s leadership

மிக முக்கியமாக ரத்தன் டாடா எனும் ஓர் நபர் மட்டும் இல்லை என்றால் இந்தியா கண்ட மிக முக்கியமான கார் மாடல்களை இந்தியா பார்த்தே இருந்திருக்காது. அப்படி என்னென்ன உலகம் போற்றக் கூடிய கார்களை அவர் இந்தியாக் கொண்டு வந்தார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா குழுமம் (Tata Group), ரத்தன் டாடாவின் தலைமையில் இயங்கிய வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள் பலவற்றை செய்தது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மாபெரும் வளர்ச்சியைப் பாதையை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் டெல்கோ (Telco) என்கிற பெயரில் இந்த நிறுவனம் டிரக்குகளை மட்டுமே உற்பத்தி செய்துக் கொண்டிருந்தது.

இந்த பணியை அது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உடன் இணைந்தே பணியை மேற்கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 1945 ஆம் ஆண்டுகளிலேயே இந்த பணியில் டெல்கோ ஈடுபட்டு வந்தது. இந்த நிலையிலேயே டாடா நிறுவனம் பயணிகள் வாகன உற்பத்தியில் கால்தடத்தைப் பதித்தது. டாடா மோட்டார்ஸ் எனும் புதிய முகத்துடனேயே அது இந்த பணியை மேற்கொண்டது.

1991 ஆம் ஆண்டிலேயே இந்த பணிகளை அது தொடங்கியது. நிறுவனம் டாடா சியாரா (Tata Sierra) காரையே முதல் ஆளாக களத்தில் இறக்கியது. 1991 ஆம் ஆண்டிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதுமட்டுமில்லைங்க, அடுத்தடுத்து என தரமான கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

அந்தவகையில், டாடா எஸ்டேட் (Tata Estate) கார் மாடலை 1992லும், இந்தியர்களின் மிகவும் பிரியமான கார் மாடலான சுமோ (Sumo)வை 1994 ஆம் ஆண்டிலும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாகவே தரமான தயாரிப்பாக சஃபாரி (Safari) கார் மாடலை 1998 இல் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த கார் மாடலை மட்டுமல்லிங்க அதே ஆண்டில்தான் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் மாடலான இன்டிகா (Indica)வும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் வெற்றி நடைப் போட்ட டாடா கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போதும், இந்த காருக்கு இந்தியாவில் ஃபேன்கள் இருக்கின்றனர்.

இந்த கார்கள் அனைத்தும் ரத்தன் டாடாவின் தலைமையின்கீழே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும். இதுமட்டுமில்லைங்க, டாடா மோட்டார்ஸைத் தொடர்ந்து வேறொரு கார் உற்பத்தி நிறுவனத்தையும் தன்னுடையதாக மாற்றிக் கொண்டார் ரத்தன் டாடா. ஜாகுவார் (Jaquar) மற்றும் லேண்ட் ரோவர் (Land Rover) எனும் மாபெரும் நிறுவனங்களையே தன்னுடைய அசத்தலான நிர்வாக திறனால் வளைத்துப் போட்டார்.

அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford)-விடம் இருந்தே இந்த கார் பிராண்டை ரத்தன் டாடா கையகப்படுத்தினார். 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கே அவர் அந்த கார் நிறுவனத்தினார் என்பது கவனிக்கத்தகுந்தது. இது நிறுவனம் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க கையகப்படுத்தல் ஆகும்.

இதுமட்டுமில்லைங்க ஏழைகளுக்கான கார் மாடலான நானோ (Nano)வையும் பெரும் போராட்டாங்களுக்கு மத்தியில் அவர் விற்பனைக்குக் கொண்டு வந்தார். ஒரு லட்ச ரூபாக்கும் குறைவான விலையிலேயே அவர் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்தார். இது சாத்தியமே இல்லாத ஒன்று என மற்ற நிறுவனங்கள் அனைத்தும் டாடா மோட்டார்ஸை விமர்சிக்க, சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்தினார் ரத்தன் டாடா.

அதேவேளையில், இந்த காரை விற்பனை செய்ததில் டாடா மோட்டார்ஸுக்கு மிகப் பெரிய நஷ்டம் என்றே கூறப்பட்டது. இருப்பினும், இந்திய ஏழைகள் பலனடைய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக ரத்தன் டாடா தொடர்ச்சியாக அந்த காரை விற்பனைக்கு வழங்கினார். ஆனால், போதிய வரவேற்புக் கிடைக்காத காரணத்தினால் டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலை பின் வாங்கிக் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா எனும் ஒரு நபர் மட்டும் இந்தியாவில் பிறக்கவில்லை என்றால் இந்தியாவும், இந்தியர்களும் இந்த கார் மாடல்களில் ஒன்றை பார்த்திருக்க மாட்டார்கள். எனவே என்றும் நீங்கா இடத்தை அனைவரின் மனத்திலும் ரத்தன் டாடாவும், அவரால் உழைப்பால் கொண்டு வரப்பட்ட கார் மாடல்களும் பிடித்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 12, 2024, 11:00 [IST]
English summary
Six iconic cars that defined ratan tata s leadership at tata motors
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+