போரை விட பெரிய ஆபத்து! நடக்க போற பயங்கரத்தை காரின் பின்னால் எழுதி வைத்த உரிமையாளர்!

இந்திய சாலைகளில் பயணம் செய்யும்போது, வாகனங்களின் பின்னால் வித்தியாசமான வாசகங்களை நீங்கள் பார்க்கலாம். இதில், சில வாசகங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆவது வாடிக்கையாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஒரு வாசகம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரிஷவ் கோயல் என்பவர் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஒரு வீடியோ (Video) ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த சமயத்தில், இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதை போல் தெரிகிறது. அவர் தன்னுடைய காரின் உள்ளே இருந்து இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

Skoda Kushaq

இந்த வீடியோவில், நாம் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) கார் ஒன்றை பார்க்கலாம். இதன் பின் பக்க கண்ணாடியில், டிஜிட்டல் போர்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் போர்டில் தோன்றிய வாசகம்தான் சமூக வலை தளங்களில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அது ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்த வாசகம் ஆகும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு: தயவு செய்து இடைவெளி விட்டு பயணம் செய்யுங்கள். நீங்கள் என்னுடைய காரின் பின் பகுதியில் மோதி விட்டால், என்னுடைய மனைவி என்னை அடிப்பார். இதுதான் அந்த டிஜிட்டல் திரையில் தோன்றும் வாசகம் ஆகும்.

Skoda Kushaq Digital Board

இதற்கு நெட்டிசன்கள் பலரும், வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வாசகம் வேடிக்கையாக தோன்றினாலும், இந்திய சாலைகளில் இந்த பிரச்னை இருக்கவே செய்கிறது. அதாவது நீங்கள் என்னதான் கவனமாக வாகனங்களை ஓட்டினாலும் கூட, ஒரு சிலர் அலட்சியமாக வந்து மோதி விடுகின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து நெரிசல்கள் ஊர்ந்து செல்லும் சமயங்களில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ளும் சம்பவங்கள், இந்திய சாலைகளில் அதிகமாக நடைபெறுகின்றன. அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஸ்கோடா குஷாக் காரின் உரிமையாளர், இப்படி வேடிக்கையான மெசேஜை டிஜிட்டல் போர்டில் ஒளிர விட்டுள்ளார்.

இந்த வைரல் வீடியோ அனேகமாக ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் ஸ்கோடா குஷாக் காரில், ஹரியானா மாநில பதிவு எண்ணை பார்க்க முடிகிறது. ஹரியானா மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த வாகனங்களின் பின் பகுதிகளிலும், கடந்த காலங்களில் இது போன்ற ஏராளமான வித்தியாசமான வாசகங்களை நாம் பார்த்துள்ளோம்.

'பார்த்து வா பங்காளி... மொத்தமும் கடன்' என்பது போன்ற வாசகங்கள் இதற்கு ஒரு உதாரணம். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் பார்க்கும் ஸ்கோடா குஷாக் கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் 10.99-19.01 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Price) ஸ்கோடா குஷாக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்கள் மோதி கொள்வதால், சாலைகளில் ஏராளமான மோதல்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம். இதில், ஒரு சில மோதல்கள், பெரிய பிரச்னையாக மாறி விடுகின்றன. ஆனால் இந்த ஸ்கோடா குஷாக் காரின் உரிமையாளர், வேடிக்கையான ஒரு மெசேஜ் மூலம், மோதல்களை தடுக்க முயற்சி செய்கிறார் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2025, 18:40 [IST]
English summary
Skoda kushaq owners funny message in rear windshield viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+