இன்னும் ஷோரூமுக்கு கூட போகல... அதுக்குள்ள இப்படி பண்றீங்களேப்பா - லாரியில் கொண்டுப்போயா விடுவது?

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் கைலாக் (Kylaq) ஆகும். இந்த புதிய ஸ்கோடா கார் கஸ்டமர்களின் கைகளுக்கு கூட இன்னும் சென்று சேராத நிலையில் அதற்குள்ளாக முதல் கைலாக் கார் விபத்தில் சிக்கி உள்ளது. அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விபத்தில் லாரி ஒன்றுடன் கைலாக் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது. இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் குஷாக் (Kushaq) என்கிற எஸ்யூவி காரை ஸ்கோடா அறிமுகம் செய்த நிலையில், கடந்த 2024 டிசம்பரில் கைலாக் காரை மார்க்கெட்டில் களமிறக்கியது.

skoda kylaq meets first accident

2021ஆம் ஆண்டில் குஷாக்கிற்கு கொடுத்ததை போலவே, தற்போது கைலாக் கார் விஷயத்திலும் ஸ்கோடா நிறுவனம் தீவிரமாக உள்ளது. ரூ.7.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைலாக் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இந்த ஜனவரி மாதத்திற்குள் கைலாக் கார்கள் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்பட்டு, முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போல கைலாக் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், டெலிவிரிகள் பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில், ஸ்கோடா கைலாக் கார் ஒன்று ஷோரூமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கியுள்ளது.

skoda kylaq meets first accident

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பெட்ரோல் பங்க்கில் இருந்து இந்த குறிப்பிட்ட கைலாக் காரை வெளியே கொண்டுவந்த போது, அந்த வழியாக வேகமாக சென்ற லாரி உடன் லேசாக உரசியுள்ளது. உரசல் லேசானதுதான் என்றாலும், இந்த மோதலில் கைலாக் காரின் பக்கவாட்டு பகுதி அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய சேதாரங்களை சந்தித்துள்ளது.

காரின் பக்கவாட்டு பகுதியில் டொக்குகள் விழுந்ததுடன், லாரியில் இருந்த கூர்மையான பொருட்களினால் காரின் வலதுப்பக்கத்தில் கதவு பகுதியில் நிறைய கீறல்கள் ஏற்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. நல்லவேளையாக, உடனடியாக இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டதால், பெரிய சேதாரங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த விபத்தில் எவருக்கும் எந்த காயமும் இல்லை.

skoda kylaq meets first accident

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Bharat NCAP Crash Test)-இல் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி கார் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு கைலாக் கார் 30.88 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மோதலில் வாகன ஓட்டிகள் இருவரும் துரிதமாக செயல்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், ஸ்கோடா கைலாக் கார் லாரிக்கு அடியில் சிக்கி பலத்த சேதாரமாகி இருக்க கூடும். இருப்பினும், இப்போதும் இந்த கைலாக் காரில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சரிச்செய்வதற்கு அதிக பணம் செலவாகும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2025, 12:45 [IST]
English summary
Skoda kylaq meets first accident after launch deliveries starts soon
மேலும்... #skoda #Skoda Kylaq #car accident #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X