கழுதைகள் கொண்டு ஸ்கோடா காரை இழுத்துச்சென்றதால் பரபரப்பு

ஸ்கோடா நிறுவனத்தை கண்டிக்கும் விதமாக ஒரு ஆக்டேவியா கார் உரிமையாளர் வினோத செயலை செய்துள்ளார். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் ஸ்கோடா செடன் கார்களுக்கு பெயர்போனதாக விளங்குகிறது . ஸ்கோடா கார்கள் சொகுசு மற்றும் ஆற்றல் மிக்கவை என்பதோடு ஸ்டைலிங்கிலும் சிறந்து விளங்குகின்றன. விலை மிக்க ஸ்கோடா ஆக்டேவியா காரின் உரிமையாளர் ஒருவர் அதனை கழுதைகள் கொண்டு இழுக்க வைத்துள்ளார். எதற்காக என்பதனை தெரிந்துகொள்வோம்.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஸ்கோடா ஆக்டேவியாவின் சொந்தக்காரர் ஒருவருக்கு, தனது கார் அடிக்கடி பழுது ஏற்பட்டு நின்றுவிடும் பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பல முறை ஸ்கோடா சர்வீஸ் செண்டருக்கு சென்று பழுது நீக்கினாலும் இப்பிரச்சனை அவருக்கு தொடர்ந்தே இருந்து வந்துள்ளது.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

ஸ்கோடா நிறுவன சர்வீஸ் செண்டரிலேயே இப்பிரச்சனைக்கு தீர்வு காண இயலாததால், பொறுமையிழந்த அவர் இது குறித்து ஸ்கோடாவின் டீலரிடமும், ஸ்கோடா மண்டல அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டுள்ளார்.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

ஆனால் பொருளை விற்றதும் கைகழுவி விடும் வர்த்தக மனோபாவத்துடன் கார் நிறுவனம் இவரது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

இந்நிலையில், மீண்டும் இப்பிரச்சனை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயினும் மீண்டும் மீண்டும் அதே சர்வீஸ் செண்டருக்கு செல்வதால் பலன் இல்லை என்பதால், வெறுப்படைந்த அவர் தனது ஸ்கோடா காரை கழுதைகள் மூலமாக டோவ் செய்து, லூதியானா நகரின் மிகவும் ஜனநெருக்கடியான சாலைகளில் இழுக்கச்செய்து ஸ்கோடா நிறுவனம் மீதான தன் வெறுப்பை காட்டியுள்ளார்.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

ஸ்கோடா நிறுவனம் ரேபிட், யெட்டி, ஆக்டேவியா மற்றும்ச் சூப்பர்ப் என சில சிறந்த கார்களை விற்பனை செய்துவந்தாலும், சர்வீஸை பொருத்த வரையிலும் பிந்தங்கியே உள்ளது.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

மேலும் அதிகபட்ச சர்வீஸ் செலவு வைப்பதாலும், குறைந்த நம்பகத்தன்மையாலும் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற தவறிவிட்டது ஸ்கோடா.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

ஆயினும், வருங்காலத்தில் இதனை சரிசெய்ய தீர்மானித்துள்ளது ஸ்கோடா. அதன் டீலர்ஷிப் எண்ணிக்கையை உயர்த்த ரூ.100 கோடியை முதலீடு செய்யபோவதாக கூறியுள்ளது ஸ்கோடா நிறுவனம். மேலும், வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தெரியப்படுத்த ‘மை ஸ்கோடா' என்ற செயலியையும் உருவாக்கி வருகிறது.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

பஞ்சாபில் நடந்த சம்பவம் மட்டுமே முதல் முறையாக நடந்தது அல்ல. இதற்கு முன்னர் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இதே போன்ற பிரச்சனை காரணமாக தனது ஜாகுவார் காரை கழுதைகளை வைத்து இழுத்துச் சென்றார்.

கழுதையை வைத்து போராட்டம் நடத்திய ஸ்கோடா கார் உரிமையாளர்

இதோடு முடிந்துவிடவில்லை வதோதராவில் ஒருவர் தனது மெர்சிடிஸ் இ-கிளாஸ் வாகனம் தொடர்ந்து சந்தித்து வந்த பிரச்சனையால், இதே போல கழுதைகளை கொண்டு கட்டி இழுத்தார்.

இப்படி கழுதைகள் கொண்டு இழுத்துச் செல்வதால் மட்டுமே பிரச்ச்னைகளுக்கு விடை காண முடியாது, வெளிநாடுகளில் உள்ளது போன்ற கடுமையான சட்டங்கள் இங்கும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு கிட்டும்.

புதிய 2017 ஸ்கோடா ரேபிட் காரின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2017, 19:07 [IST]
English summary
Frustrated Skoda Octavia owner gets donkeys to pull his car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+