ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் கோர விபத்தில் சிக்கியதில், ஓட்டல் அதிபர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் மூலமாக அனைத்து கார் ஓட்டுனர்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இந்த செய்தியில் க

By Saravana Rajan

திருவனந்தபுரத்தில் ஸ்கோடா ஆக்டேவியா வஆர்எஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், 21 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த விபத்து மூலமாக உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபரின் மகன் ஆதர்ஷ்[21]. கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 10 மணியளவில் தனது புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு, தனது தோழிகள் மூவருடன் ரவுண்ட் சென்றுள்ளார்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

இரவு 10.45 மணியளவில் திருவனந்தபுரம் ராஜ்பவன் சாலையில் அந்த கார் சென்றபோது, அங்கிருந்த சாலை சந்திப்பில் ஆட்டோரிக்ஷா ஒன்று யூ- டர்ன் அடிக்க குறுக்கே திரும்பி இருக்கிறது. அப்போது, அதிவேகத்தில் சென்ற ஆதர்ஷ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

ஆட்டோரிக்ஷா மீது இடித்துத் தள்ளிய அந்த கார் அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற ஆதர்ஷ் மற்றும் அவரது தோழிகள் மூவரும் படுகாயமடைந்தனர். ஆட்டோரிக்ஷா ஓட்டுனரும் காயமடைந்தார்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த ஆதர்ஷ் மற்றும் அவரது தோழிகள், ஆட்டோரிக்ஷா ஓட்டுனரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆதர்ஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தோழிகளும், ஆட்டோ ஓட்டுனரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

ஸ்கோடா கார்கள் வலுவான கட்டமைப்புக்கு பெயர் பெற்றவை. ஆனால், இந்த விபத்தில் ஆக்டேவியா ஆர்எஸ் கார் மிக கடுமையாக சேதமடைந்தது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

ஆதர்ஷ் வாங்கிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 8 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எந்த பக்கத்தில் மோதினாலும், பயணிகளை காப்பதற்கான ஏர்பேக்குகள் உள்ளன. பிரேக் பவரை தேவையான அளவு சக்கரங்களுக்கு சரிவிகிதத்தில் பிரித்து அனுப்பும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

அதுமட்டுமின்றி, அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அவசர சமயத்தில் பயத்தில் பிரேக் பிடிக்கும்போது, தேவையான அளவில் பிரேக் பவரை செலுத்தி காரை உடனடியாக நிறுத்துவதற்கான பிரேக் அசிஸ்ட் நுட்பமும் இந்த மாடலில் இருக்கிறது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

கார் தரைப்பிடிப்பை இழந்து வழுக்கிச் செல்வதை தவிர்ப்பதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த காரில் உள்ளது. இத்தனை இருந்தும், ஒன்றுகூட ஆதர்ஷ் உயிரை காப்பாற்றாதது துரதிருஷ்டம்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

இந்த கார் ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்ற மாடலும் என்பதையும் நினைவுகூற வேண்டிய விஷயம். ஆனால், இத்தனை விஷயங்களும் ஆதர்ஷ் விஷயத்தில் அர்த்தமற்றதாக மாறி இருக்கிறது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

ஆதர்ஷ் அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றதே, கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதிலிருந்து, எத்தனை பாதுகாப்பு விஷயங்கள் இருந்தாலும், அதிவேகத்தில் காரை ஓட்டுவது உயிரையை பறித்துவிடும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

குறிப்பாக, நகர்ப்புறத்தில் கார் ஓட்டுபவர்கள் சீரான வேகத்தில் செல்வதே, விபத்துக்களை தவிர்க்க சிறந்த வழியாக இருக்கும். இரவு நேரத்தில் காலியாக இருக்கும் சாலைகளில் அதிவேகத்தில் செல்வது விவேகமான செயலாகவும் இருக்காது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

நம் காரில்தான் ஏகப்பட்ட பாதுகாப்பு விஷயங்கள் இருக்கிறதே, எப்படி வேண்டுமானாலும் என்று தாறுமாறாகவும், வேகமாகவும் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் இருக்கும். அதிக சாலை சந்திப்புகள் உள்ள நகரப்புற சாலைகளில் ஓட்டும்போது மிகுந்த விழிப்புடன் செல்வதும், நிதான வேகத்தில் செல்வதும் அவசியம்.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

கடந்த செப்டம்பர் 1ந் தேதி ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் என்ற சக்திவாய்ந்த செடான் ரக கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட உடனே, இந்த காருக்கு முன்பதிவு வேகமாக முடிந்தது. முதல் லாட்டில் ஒதுக்கப்பட்ட 250 கார்களுக்கும் முன்பதிவு முடிந்தது.

இப்படி ஓட்டினா எத்துனை ஏர்பேக்குகள் இருந்தாலும் புண்ணியமில்லை!

இந்த புத்தம் புதிய காரை போட்டி போட்டு வாங்கியவர்களில் ஆதர்ஷ் தந்தையும் ஒருவர். ஆனால், ஆசைப்பட்டு வாங்கிய காரும், மகனையும் அவர் ஒரு மாதத்திலேயே இழந்து தவிப்பது பெரும் துயரம்தான். இரவு நேரங்களில் பிள்ளைகளிடம் காரை கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Tamil Car and Bike Fans Like Us On Facebook

Via- Bunnypunia

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's First Skoda Octavia RS Crash — Brutal Accident Kills One, Leaves 3 Injured
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X