டெலிவரி எடுக்கும் போதே வழுக்கிய கார்! ஜஸ்ட் மிஸில் தப்பிய சம்பவம்! வீடியோ செம வைரல்!
புதிய காரை டெலிவரி எடுக்கும் போதே கார் ரேம்பிலிருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கி பார்த்தது. ஆனால் இந்த காரில் இருந்த அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக இந்த வாகனம் பெரிய அளவில் விபத்தில் சிக்காமல் தப்பித்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிரவுண்ட் கிளியரன்ஸ் வாகனத்திற்கு எவ்வளவு முக்கியம் என பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒருவருக்கு கார் வாங்குவது அவரது வாழ்நாள் கனவாக இருக்கிறது. அதுவும் காரை டெலிவரி எடுக்கும் நாளை நம் நாளில் மறக்கவே முடியாது. அந்த நாளில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் மிக முக்கியமான தருணமாகவே இருக்கும். வாகன விற்பனை டீலர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த நாளை ஒரு ஸ்பெஷல் நாளாக உணர வைக்க பல ஸ்பெஷல் ஏற்பாடுகளை எல்லாம் செய்வார்கள். ஆனால் இது சில நேரம் சொதப்பி மறக்க வேண்டிய நாளாக கூட மாறிவிடும்.

இப்படியாக சமீபத்தில் ஒரு கார் டெலிவரியின் போது கடைசி நேரத்தில் ஒரு சொதப்பல் நடந்துள்ளது. ஆனால் வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருந்ததால் அந்த வாகனம் எந்த விதமான சேதமும் இல்லாமல் தப்பியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தீபக் கார் வேர்ல்டு என்ற யூடியூப் பக்கத்தில் பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஸ்கோடா ஸ்லாவியா கார் டெலிவரிஎடுக்கப்பட்டுள்ளது. இதில் உரிமையாளருக்கு புதிய வெள்ளை நிற ஸ்லாவியா காரை டம்மி சாவியை வாங்கினார். பின்னர் கேராமேன் காரை சுற்றி காட்டுகிறது. பின்னர் உரிமையாளர் வாகனத்தின் சீட்டில் அமர்ந்து டீலர் ஷிப்பில் இருந்து காரை வெளியே எடுத்தார். இந்த ஷோரூமில் இருந்து வெளியே வர சருக்கு போன்ற அமைப்பு இருக்கிறது. அதன் நடுவே படிகள் உள்ளன. இவர் சருக்கு பகுதியில் காரின் டயர்கள் வருமாறு காரை வெளியில் எடுக்க வேண்டும். இந்த சருக்கு சுலபமானதாக தான் இருக்கிறது.

ஆனால் இவர் காரை வெளியில் எடுக்கும் போது எதிர்பாராக விதமாக திருப்பிவிட்டார். இதனால் முன்பக்க வீல் இடது பக்கமாக திரும்பியுள்ளது. ஷோரூம் வெளியே உள்ள சிலர் இவர் காரை வெளியே எடுக்க உதவி செய்தாலும் இவர் கார் டயர் திரும்பியதை உணராமல் காரை நகர்த்தினார். இதனால் டயர் சருக்கு பகுதியிலிருந்து படியில் இறங்கியது. அதிஷ்டவசமாக இந்த கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காரின் அடி பகுதியில் எந்த விதமான அடியும் படவில்லை.
இதுவே கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக கொண்ட காராக இருந்திருந்தால் காரின் அடிபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். காரை டெலிவரி எடுக்கும் போதே இப்படியாக பிரச்சனை ஏற்படுத்திருக்கும். இந்தநாள் அவர் வாழ்வில் மறக்க முடியாத மோசமான நாளாக அமைந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்ததால் இந்த வாகனம் பெரிய அளவில் சேதமாகவில்லை.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அவர்களது முதல் நாள் டெலிவரி குறித்த கதைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முதல் நாள் டெலிவரியே மோசமான பல கதைகள் குறித்தும் பேசி வருகின்றனர். நீங்கள் வாகனம் டெலிவரி எடுக்கும்போது மனதில் ஒரு விதமான பதற்றம் இருக்கும். முதலில் கார் வாங்குபவர்களுக்கு இப்படியான பிரச்சனை இருக்கும். இந்த தருணத்தில் ஒரு நிமிடம் நிதானமாக இருக்க வேண்டும்.
டிரை்வ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை வாங்கும் போது டெலிவரி சமயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை மக்கள் செண்டிமென்டாக எடுத்து கொள்வார்கள். அந்த தருணத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி பெற்ற ஒரு கழிப்பு, ஆனந்தம் என பல விஷயங்கள் நம் மனதில் இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை ஒரு நிமிடம் மறந்து ஒரு மூச்சு இழுத்துவிட்டு கவனத்தை காரில் வைத்து பயணித்தாலே பெரிய பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








