ஸ்டீயரிங் வீலில் டிரம்ஸ்... சொந்த தாளத்துடன் கார் ஓட்டலாம்!
பொதுவாகவே பாட்டுக் கேட்டுக் கொண்டு கார் ஓட்டும்போது ஸ்டீயரிங் வீலில் தாளம் போடுவது பலருக்கு வழக்கம். சரி, அடுத்தவர் போட்ட தாளத்துக்கு எத்தனை நாளுக்குத்தான் ஒத்து போடுவது. எனவே, சொந்தமாக தாளம் போட்டபடி கார் ஓட்டும் வகையிலான புதிய ஸ்டீயரிங் வீலை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய டிரம்ஸ் ஸ்டீயரிங் வீல் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காசு கொடுத்தவுடன் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் வாங்கிவிட முடியாது. ஏன், என்பது குறித்தும், டிரம்ஸ் ஸ்டீயரிங் வீலின் கூடுதல் தகவல்களுக்கும் ஸ்லடைருக்கு வாருங்கள்.

ஸ்டீயரிங் வீல் கவர்
இந்த ஸ்டீயரிங் வீல் கவர் போன்றே இருக்கிறது. இந்த ஸ்டீயரிங் வீல் கவரை வாங்கி உங்களது காரின் ஸ்டீயரிங் வீலில் பொருத்திக் கொண்டால் போதும். போடு தாளம் போடு

எளிதாக கற்றுக் கொள்ளலாம்
இந்த ஸ்டீயரிங் வீல் கவரின் இருபுறத்திலும் 8 விதமான கலர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலரில் வைத்து தாளம் தட்டும்போது ஒவ்வொரு டிரம் பீட் ஒலி வெளிப்படும்.

கார் ஸ்பீக்கருடன் இணைப்பு
காரில் இருக்கும் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இந்த ஸ்டீயரிங் வீல் டிரம்ஸ் சாதனைத்தை எளிதாக இணைத்துக் கொள்ளலாம். மேலும், காரில் இருக்கும் மியூசிக் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டு அதில் வரும் பாடலுக்கு உங்களது டிரம் பீட்டை சேர்ந்து ஒலிக்கச் செய்வதற்கான வசதியும் இருக்கிறது.

டிரான்ஸ்மீட்டர்
இந்த ஸ்டீயரிங் வீலில் இருக்கும் சிறிய எஃப்எம் டிரான்ஸ்மீட்டர் மூலம் டிரம்ஸ் சாதனத்திலிருந்து ஒலி, மியூசிக் சிஸ்டத்துக்கு கடத்தப்படுகிறது.

ஆன்லைனில் பகிரலாம்
உங்களது தாளத்தை ஆன்லைனில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

விளக்கப் படம்
எந்த இடத்தில் தட்டினால் எந்த தாளம் வெளிப்படும் என்பதை காட்டும் விளக்கப்படம்.

ஐபோனுடன் இணைக்கலாம்
ஐபோன், ஐபேட் சாதனங்களுடனும் இந்த ஸ்டீயரிங் வீல் டிரம்ஸை இணைக்க முடியும்.

ஆனால், ஒரு சிக்கல்
இந்த சாதனம் கிக் ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் பொருளை வாங்குவதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அது என்ன? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

விரும்பினால் நிதி கொடுக்கலாம்
புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பவர் அதனை தயாரிக்க போதுமான நிதி இல்லாதபோது, கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்வர். அந்த பொருளை வணிக ரீதியில் உற்பத்தி செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் வாங்க விருப்பமுள்ளவர்கள் போதுமான நிதியை அளிக்க வேண்டும். அப்படி போதுமான நிதி சேரும்பட்சத்தில் அந்த பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பணம் கொடுத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

இதே நிலைதான் டிரம்ஸுக்கும்
மேற்கண்ட அதே பார்முலாவுடன் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் இந்த ஸ்டீயரிங் வீல் டிரம்ஸ் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது. ரூ.8,058ஐ கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் செலுத்தினால், ஒரு ஸ்டீயரிங் வீல் டிரம்ஸை பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,00,000 டாலர் தொகை 30 நாட்களுக்குள் சேர்ந்தால் மட்டுமே இது வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்படும். இல்லையென்றால், உங்களது பணம் திரும்ப வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
ஸ்டீயரிங் வீல் டிரம்ஸில் தாளக்கட்டை வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications








