உலகின் குட்டி ரயிலாக அவதாரம் எடுத்த ஸ்மார்ட் கார்!!
ஸ்மார்ட் காரை உலகின் மிக குட்டி ரயிலாக மாற்றி அசத்தியிருக்கின்றனர் இங்கிலாந்தை சேர்ந்த ரயில் துறை பொறியாளர்கள்.
ஸ்மார்ட் ஃபார்ரயில் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த குட்டி ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கார் மாடல்
ஸ்மார்ட் ஃபார்ஃபோர் காரை தண்டவாளத்தில் இயக்கும் விதத்தில் மாறுதல்களை செய்துள்ளனர்.

வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட் ஃபார்ரயில் மாடலை வடிவமைக்க 6 மாதங்கள் பிடித்ததாக வடிவமைப்பு பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெவியான சக்கரங்கள்
இந்த கார் தண்டவாளத்தில் நிலைத்தன்மையுடன் செல்வதற்கு ஏதுவாக 22 இன்ச் விட்டமுடைய சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றும் 80 கிலோ எடை கொண்டது.

ஸ்டீயரிங் கிடையாது
ரயில் தண்டவாளத்தில் இயக்குவதற்காக இந்த காரில் ஸ்டீயரிங் சிஸ்டத்தை கழற்றிவிட்டனர்.

சோதனை
புளுபெல் என்ற தனியார் ரயில்வே நிர்வாகத்தின் வழித்தடத்தில் இந்த ரயில் கார் சமீபத்தில் 16.1 கிமீ இயக்கப்பட்டது.

பயணிகள்
இந்த ரயில் காரில் ஓட்டுனர் உரிமம் வைத்திருந்த சில பயணிகளையும் பயணித்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பயிற்சி பெற்ற ரயில் ஓட்டுனர் ஒருவரும் உடனிருந்தாராம்.


Click it and Unblock the Notifications