இந்த ஒரு விஷயம் வந்தா போதும், வண்டி எங்கேயுமே பஞ்சராகி நிக்காது! எப்படி தெரியுமா?
இன்று வாகனங்களில் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவங்கள் மார்கெட்டை பிடிக்க ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை வாகனங்களில் புகுத்தி மார்கெட் தேவைகளுக்கு ஏற்ப வாகனத்தை தயாரித்து வருகின்றனர். மற்ற பல இடங்களில் தொழிற்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் தற்போது வாகன டயர்களில் பெரிய அளவில்தொழிற்நுட்பங்கள் இல்லாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் வாகன டயர்களில் சிப்களை பொருத்தும் தொழிற்நுட்பம் பிரபலமாக போகிறது.
ஸ்மார்ட் எம்பெடட் டயர் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த தொழிற்நுட்பம் எதிர்காலத்தில் வாகன பயன்பாட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யப்போகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் உதவப்போகிறது. தற்போது உள்ள பல பிரச்சனைகளை இந்த தொழிற்நுட்பம் களையும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழிற்நுட்பத்தில் வாகன டயர்களில் சென்சார் சிப்புகள் பொருத்தப்படும்.

இப்படியாக பொருத்தப்படும் சென்சார்கள் டயரின் பிரஷர், டயர் திரெட்டின் ஆழம், டயரின் வெப்ப அளவு, சாலை கண்டிஷன்கள் மற்றும் வாகனத்தில் எடை மற்றும் லோடு ஆகியவற்றை ரியல் டைமில் வாகன ஓட்டிகளால் அறியமுடியும். அதிக வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் வாகனங்களின் டயர் கண்டிஷன்களை ரியல் டைமில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பார்க்க முடியும்.
இந்த ஸ்மார்ட் டயர்களை வாகனங்களில் பொருத்துவன் மூலம் ஒரு வாகனத்தின் எடுக்கும் போது வாகனத்தின் டயரின் அருகில் ஏதேனும் தடை இரக்கிறதா என்பதை பார்க்க முடியும். இதனால் வாகனம் எடுக்கும் போது வாகனத்தின் டயருக்கு அடியில் நாய், பூனை போன் விலங்குள் படுத்திருந்தாலும், கல் போன்ற தடை இருந்தாலும் டிரைவர் சீட்டில் இருந்த படியே கண்காணிக்க முடியும்.

மேலும் வாகனம் பயணிக்கும் போது சாலையின் கண்டிஷன்களையும் கண்காணிக்க முடியும். சாலை ஸ்லிப்பரியாக இருக்கிறதா? அல்லது மணல் போன்ற அமைப்பில் இருக்கிறதா? வாகனம் ஆஃப்ரோடில் பயணிக்கும் போது சகதி, பாறை உள்ளிட்டஎந்த விதமான இடத்தில் பயணிக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல மற்ற விஷயங்களையும் மாற்ற முடியும்.
இது மட்டுமல்ல இந்த ஸ்மார்ட் டயர்கள் வாகனத்தின் மைலேஜை அதிகரிக்கவும் உதவும், வாகனத்தின் டயர் பிரஷர் குறைந்தால் அது குறித்து எச்சரிக்கை அளிப்பது. அந்த நேரத்தில் தேய்மானம் அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அதை சரி செய்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த சிக்னல்கள் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டயர்கள் சாதாரண டயர்களை விட அதிக காலம் உழைக்கும் வகையில் உருவாக்க முடியும். இந்த சிக்னல்கள் வாகன டயரின் ஆயுளையும் அதிகரிக்கும்.இது போக டயரின் கண்டிஷனை பொருத்து பிரேக்கிங் திறனையும் மேம்படுத்த உதவும், அதிக தேய்மானம் அடைத்த டயர்களுக்கு அதிக பிரேக்கிங் வழங்க வேண்டும் அல்லது சாலையின் கண்டிஷன்களை பொருத்து பிரேக்கிங் திறனை மேம்படுத்த உதவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் டயர்களில் ஸ்மார்ட் தன்மையைகொண்டு வருவது எதிர்காலத்தில் இந்த டயர் உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் இது சிறிய ரக பயணிகள் வாகனங்களை விட பெரிய கனரக வாகனங்களுக்கு பெரிய அளவில் உதவியாகவும் அதே நேரம் பணத்தை சேமிக்கும் விஷயமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









