ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்மார்ட் குட்டி விமானம்!
ஸ்மார்ட்போனுக்கான சாதனங்களை உருவாக்கித் தருவதில் பிரபலமான ஜெர்மனியை சேர்ந்த டோபி ரிச் என்ற நிறுவனம் ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தும் வசதி கொண்ட உலகின் முதல் குட்டி விமானத்தை தயாரித்துள்ளது. பொம்மை சைஸில் இருந்தாலும், இது நவீன வசதிகளுடன் இயங்குவதால் ஸ்மார்ட்- ப்ளேன் என்று பெயரிட்டுள்ளது.
மிக எளிதாக இயக்கும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் ப்ளேன் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு நுட்பங்களை மேம்படுத்தினால், எதிர்காலத்தில் வர்த்தகத் துறையில் மிகுந்த பயனுள்ள போக்குவரத்து சாதனமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இலகு எடை
இலகு எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்- ப்ளேன் 200 அடி உயரம் வரை பறக்கும். உறுதிமிக்க மீட்சித்தன்மை அதிகம் கொண்ட பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி ஆற்றல்
பேட்டரி ஆற்றலில் இயங்கும் இந்த ஸ்மார்ட்- ப்ளேன் 15 நிமிடங்கள் வரை வானில் பறக்கும். பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

புளூடூத் இணைப்பு
இந்த ஸ்மார்ட்- ப்ளேன் மற்றும் ஸ்மார்ட்போனை புளூடூத் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த பொம்மை விமானத்தை திருப்புவது, மேலே எழுப்புவது, தரை இறக்குவது என அனைத்தையும் ஸ்மார்ட்போனின் அசைவுகளின் மூலமே கட்டுப்படுத்தலாம். ஒரே ஒரு கையை வைத்துக்கொண்டு இந்த குட்டி விமானத்தை எளிதாக இயக்க முடியும்.

ஆப்பிள், ஆன்ட்ராய்டு...
ஆன்ட்ராய்டு வி4.43 இயங்கு தளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன் 4எஸ், ஐந்தாம் தலைமுறை ஐபாட் டச் மற்றும் மூன்றாம் தலைமுறைக்கு மேலான ஐபாட் உள்ளிட்ட சாதனங்களின் புளூடூத் மூலம் இந்த குட்டி விமானத்தை இயக்க முடியும்.

ஆட்டோ பைலட்
இந்த ஸ்மார்ட் விமானத்தில் ஆட்டோ பைலட் வசதியும் உள்ளது. ஸ்மார்போனையும், இந்த விமானத்தையும் புளுடூத் மூலம் ஒரு சில வினாடிகளில் இணைத்துவிடலாம். விமானத்துக்கு அருகாமையில் போனை வைத்து புளுடூத் மூலம் இணைத்துவிடலாம்.

விலை
இந்த குட்டி விமானம் 49 டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








