டிராஃபிக்கில் ஆமை வேகத்தில் சென்ற பைக்! ஸ்மார்ட் வாட்ச்க்கே ஏற்பட்ட குழப்பம்! வைரலாகும் வீடியோ
பைக்கில் போகிறவரை சைக்கிள் போவதாக ஸ்மார்ட் வாட்ச் ஒன்று காட்டிய டிவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூருவில் உள்ள மோசமான ட்ராஃபிக்கை குறிக்கும் விதமாக இந்த டிவீட் இருப்பதால் பலர் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் என்பது நீண்ட நாட்களாக அதிக அளவில் இருந்து வருகிறது. சுமார் பத்து கிலோமீட்டர் பயணிக்கவே ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியது இருப்பதாக பெங்களூர் வாசிகள் பலர் வேதனைப்பட்டு வருகின்றனர். அதிக ஜன நெருக்கடி காரணமாக இந்த பிரச்சனை பெங்களூருவில் நிலவி வருகிறது.

மக்கள் பலர் சொந்தமாக வாகனம் வைத்திருப்பதால் அந்த வாகனத்தையே பயன்படுத்த விரும்புகின்றனர், பொது போக்குவரத்து பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இதனால் சாலைகளில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இது போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் அதிக நெருக்கடியுடன் இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் பெங்களூருவில் உள்ள டிராபிக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து இது குறித்து விமர்சனங்களை செய்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இது குறித்த விவாதம் துவங்கியுள்ளது.
அந்த டிவிட்டின் படி இந்த ட்வீட்டை பதிவு செய்த கவால் ஓப்ரா என்பவர் பெங்களூர் டிராபிக்கில் பைக் டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அவரது ஸ்மார்ட் வாட்ச் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும் வெளிப்புறத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. இதற்கான ஒர்க் அவுட் விபரங்களையும் சேகரித்தது.
பொதுவாக ஸ்மார்ட் வாட்ச் ஒருவர் அணிந்திருக்கும் போது அவரது உடல் அசைவுகளை கண்காணித்து அவர் என்ன செய்கிறார் என்பதை கணித்து விடும். குறிப்பிட்ட சம்பவத்தில் இந்த வாட்ச் அணிந்தவர் பெங்களூரில் உள்ள அதிகமான டிராபிக் நிறைந்த பகுதியில் பைக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்தார்.
அதை தவறாக புரிந்து கொண்ட ஸ்மார்ட் வாட்ச். தவறான தகவலை காட்டியுள்ளது. இதை அவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூர் நகரை பொறுத்தவரை டிராபிக்கிற்கு பஞ்சமே இருக்காது.
சாலையில் டிராபிக் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் சாலை விதிகளை மீறுவது பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இந்த பிரச்சனை பெரும் தலைவலியாக இருக்கிறது இதற்கு அரசு பல்வேறு நம்பிக்கை எடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கு தீர்வு அளிக்க வேண்டும் என்றால் மக்கள் மனநிலை பொது போக்குவரத்தை நோக்கி மாற வேண்டும். பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தினால் தான் சாலையில் போக்குவரத்து குறையும். இதனால் வாகனங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும்.போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெருநகரங்கள் எல்லாம் அரசு திட்டமிடுவது போல பல நிறுவனங்கள் ஒரே நகரில் இருப்பதால் உருவாகிறது. இதனால் அரசு முடிந்த அளவிற்கு தங்கள் நிர்வாகத்தை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால் மக்கள் கூட்டம் ஒரே நகரில் குவிவதை குறைக்க முடியும் இதனால் போக்குவரத்து பெருமளவு குறையும்


Click it and Unblock the Notifications








