ஃப்ளைட்ல சிகரெட் பிடிக்க முடியுமா? எது, விமான பணி பெண்களே அத பத்த வச்சிவிடுவாங்கள?.. இது எப்போங்க?..
பாதுகாப்பு காரணமாக பேருந்து, ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் புகைப்பிடிப்பது தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, விமானத்தில் சிகரெட் பிடிப்பது மிகப் பெரிய குற்ற செயலாகக் கருதப்படுகின்றது. மேலும், புகைப்பிடிப்பதைக் கண்டறிவதற்கு என சில பிரத்யேக கருவிகள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
அவை, யாரேனும் திருட்டுத் தனமாக புகைப்பிடித்தால் எச்சரிக்கைச் செய்யும். இருப்பினும், ஒரு சிலர் தடைகளை மீறி புகைப்பிடித்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில்கூட இண்டிகோ விமானத்தின் கழிப்றையில் மறைந்து புகைப்பிடித்ததாகக் கூறி ஓர் இளம் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த பெண் ஐஸ்வர்யா ராய் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் ஃபேமஸ் விளாக்கர் ஆவார். மிகக் கடுமையான தண்டனை பெண் விளாக்கருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்ககள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் அரங்கேறி இருக்கின்றன. அதேவளையில், ஒரு காலத்தில் விமானத்தில் புகைப்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஏன், விமானத்தில் புகைப்பிடிக்க ஊக்குவித்தலும் செய்யப்பட்டது. 1980களின் பிற்பகுதி வரை இது நடைமுறையில் இருந்தது. இதற்கு பின்னரே புகைப்பிடத்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வரை விமான பணிப் பெண்கள் மற்றும் உதவியாளர்கள் பயணிகளுக்கு தேவை எனில் சிகரெட்டை பற்ற வைக்கும் செய்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையிலேயே காலபோக்கில் விமானத்தில் புகைப்பிடத்தலுக்கு தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை அமலுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்டன. விமானத்தில் மட்டுமல்ல பொதுவெளியிலும் புகைப்பிடித்தல் கூடாது என உலக நாடுகள் பலவற்றில் விதிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சரி விமானத்துல சிகரெட் பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட அந்த காலம் எப்படி இருந்துச்சு என உங்களுக்கு தெரியுமா? இது பற்றிய தகவலையும், புகைப்பிடித்தலுக்கு பின்னால் இருக்கும் தடை பற்றிய தகவலையும் பார்க்கலாம், வாங்க.
புகைப்பிடிப்பவர்களுக்கு அது பொற்காலம்
உண்மையில் சிகரெட்டை விரும்பிப் பிடிப்பவர்களுக்கு அது பொற்காலமாக கருதப்பட்டது. மேலும், அது மிகவும் விசித்திரமானதாகவும் இருந்தது. சிகரெட் சாம்பளைத் தட்டுவது தொடங்கி அனைத்திலும் சிரமமாக இருந்தாலும், அவர்கள் அதனை அதிகளவில் எஞ்ஜாய் செய்திருக்கின்றனர். குறிப்பாக, வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தில் புகைப்பிடித்தது வித்தியாசமான அனுபவத்தை வழங்கியதாக அந்த கால கட்டத்தில் விமானத்தில் பயணிக்கும்போது சிகரெட்டைப் பிடித்தவர்கள் கூறுகின்றனர்.
ஏன் தடை?
விமானத்தின் கேபின் பகுதி மரம் மற்றும் துணிகளால் ஆனது. அவை விரைவில் தீயிற்கு இரையாகிவிடலாம். இதுவும் சிகரெட் தடைக்கு ஓர் மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகின்றது. இதுதவிர, அடைக்கப்பட்ட இடத்தில் புகைப்பதனால் பிற பயணிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் இரும்பல் போன்ற சிக்கல்களை அது ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த காரணத்திற்காகவும் விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், கேன்சர் போன்ற கொடிய வியாதிகளை புகைத்தல் ஏற்படும். இந்த வியாதி மற்றவர்களை பாதித்துவிடக் கூடாது என்கிற பொது நலனும் சிகரெட் தடைக்கு பின்னால் இருக்கின்றது. கடந்த காலத்தில் விமானங்களில் புகைப்பிடப்பதற்கு தனி பகுதிகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இருந்தபோதிலும் விமானம் முழுவதும் சிகரெட் புகை நாற்றம் வீசி இருக்கின்றது.
குறிப்பாக, லக்கேஜ், புகைப்பவரின் உடை மற்றும் தலை முடிகளில் இருந்து புகைநாற்றம் அதிகம் வீசி இருக்கின்றது. ஆகையால், இந்த முறையும் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் உள்நாட்டு விமானங்களில் மட்டுமே புகைப்பிடித்தல் தடை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. 1990களில் சர்வதேச விமானங்களிலும் புகைப்பிடத்தல் தடை செய்யப்பட்டது. மீறி புகைப்பிடிக்கும் பயணிகளுக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டது. எஃப்ஏ (FAA)வின் விதிகளின் அடிப்படையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சிகரெட் பிடிப்பதை தவிர்க்க முடியாதவர்கள் இத செய்யலாம்
புகைப்பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்கள் வெளிநாடுகளில் மட்டுமல்ல நம்ம ஊரிலும் அதிகமாக இருக்கின்றனர். இந்த மாதிரியானோர் தங்களையும், தங்களது வாய்களையும் பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, வாயில் சிவிங்கம் போட்டு மென்றுக் கொண்டு இருக்கலாம். அல்லது, இனிப்பு (மிட்டாய்களை) வாயில் திணித்துக் கொள்ளலாம்.
இதன் வாயிலாக புகைப்பிடிப்பதை தூண்டும் உணர்வுகளை தவிர்க்க முடியும். இதேபோல், நிகோட்டின் வகை இனிப்புகள் விற்பனையில் இருக்கின்றன. இவை புகைப்பிடிக்கும் உணர்வை தவிர்க்க செய்யும். இதுதவிர, புகைப்பழக்கத்தை விட வைப்பதற்கும் இந்த இனிப்புகள் உதவும். இவற்றை விமான பயணத்தின்போது கை வசம் வைத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications