ஒரு காலத்துல ஜெயலலிதா மாதிரி இரும்பு மனுஷி! ஆனா இப்ப ஆள் அட்ரஸே இல்லாம சாதாரண கார்ல போயிட்டு இருக்காங்க!
இந்திய அரசியலில் ஒரு சில தோல்விகள் எப்போதும் மக்களால் மறக்கப்படாது. கடந்த 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக (DMK) வேட்பாளர் சீனிவாசன் என்பவரிடம், விருதுநகர் (Virudhunagar) தொகுதியில் காமராஜரே (Kamaraj) தோற்று போனார். காமராஜரின் இந்த அதிர்ச்சி தோல்வியை தமிழ்நாடு இன்றளவும் மறக்கவில்லை.
அதேபோல் கடந்த 1996ம் ஆண்டு பர்கூர் (Bargur) தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Jayalalitha) சந்தித்த தோல்வியும் கூட அதிர்ச்சிகரமான ஒன்றுதான். திமுக வேட்பாளர் சுகவனத்திடம் (Sugavanam) ஜெயலலிதா தோல்வியை சந்தித்தார். இந்த அதிர்ச்சி தோல்விகள், தமிழ்நாட்டு அரசியலில் மறக்க முடியாதவை.

அதேபோல் தேசிய அரசியலிலும் மறக்க முடியாத அதிர்ச்சி தோல்வி ஒன்று உள்ளது. அது பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் (Smriti Irani), காங்கிரஸ் (Congress) கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி (Rahul Gandhi) சந்தித்த தோல்வி ஆகும். கடந்த 2019ம் ஆண்டு அமேதி (Amethi) தொகுதியில் இந்த அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது.
ராகுல் காந்தியையே தோற்கடித்த காரணத்தால், ஸ்மிருதி இரானி தேசிய அளவில் கவனம் பெற்றார். அத்துடன் அவர் மத்திய அரசின் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார்.

இம்முறை அவரை வீழ்த்தியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிஷோரி லால் ஷர்மா (Kishori Lal Sharma) ஆவார். இந்த தோல்வியை அடுத்து, ஸ்மிருதி இரானி மீதான ஊடக கவனம் குறைந்தது. தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதே பலருக்கும் தெரியவில்லை.
இந்த சூழலில் ஸ்மிருதி இரானியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் மிகவும் எளிமையான எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரில் ஸ்மிருதி இரானி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 14.25 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 5 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை ஆகும். அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை 17.50 லட்ச ரூபாய் ஆகவும், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை அதே 17.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளன.
மறுபக்கம் எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் வெர்ஷனின் ஆரம்ப விலை 22.40 லட்ச ரூபாய் ஆகவும், எம்ஜி ஹெக்டர் ஸ்னோஸ்ட்ரோம் வெர்ஷனின் ஆரம்ப விலை அதே 22.40 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளன. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களுக்கு எல்லாம் எம்ஜி ஹெக்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. ஹெக்டர்தான் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் ஆகும்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் எம்ஜி ஹெக்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் (India's First Internet Car) என்ற பெருமையுடன் களமிறங்கிய எம்ஜி ஹெக்டர் காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் பிரபலமான மனிதர்களை பொறுத்தவரையில் எம்ஜி ஹெக்டர் எளிமையான கார்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இருப்பினும் நிறைய பிரபலங்கள் எம்ஜி ஹெக்டர் காரை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர். இதற்கு நடிகையும், அரசியல்வாதியுமான ஹேம மாலினி (Hema Malini) ஒரு நல்ல உதாரணம்.
இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் காரை முதன் முதலில் வாங்கிய பிரபலங்களில் ஹேம மாலினி முக்கியமானவர். அதேபோல் பாலிவுட் திரையுலகின் மற்றொரு நடிகையான பலக் திவாரியிடமும் (Palak Tiwari) கூட எம்ஜி ஹெக்டர் கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








