சாதாரண மாருதி காரை வாங்க அவங்க ஷோரூமுக்கே வந்தாங்களா! இந்த வீடியோ மட்டும் இல்லனா யாரும் நம்பியிருக்க மாட்டாங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis). மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை 5.84 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.06 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த காரை மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Social Media Influencer) ஒருவர் தற்போது வாங்கியுள்ளார்.
அவர் சினேகா பாபு (Sneha Babu) ஆவார். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்பதை கடந்து, நடிகை என்ற முகமும் இவருக்கு உண்டு. கேரளாவை சேர்ந்த இவர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இவர் மாருதி சுஸுகி இக்னிஸ் காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகை சினேகா பாபு வாங்கியுள்ள மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 83 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய வெர்ஷன்களுமே ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஓரளவிற்கு விலை குறைவான கார் என்றாலும் கூட, ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான வசதிகளாக உள்ளன. டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி இக்னிஸ் போட்டியிட்டு வருகிறது.
அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களான வேகன் ஆர் (Wagon R) மற்றும் செலிரியோ (Celerio) போன்ற கார்களுக்கு மாற்றாகவும், மாருதி சுஸுகி இக்னிஸ் காரை பரிசீலனை செய்யலாம். மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் பூட் ஸ்பேஸ் அளவு 260 லிட்டர்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இக்னிஸ் எளிமையான காராக இருந்தாலும், பிரபலங்கள் பலரும் விரும்ப கூடிய கார்களில் ஒன்றாக உள்ளது. பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஜதீன் அகுஜா (Jatin Ahuja) கூட, மாருதி சுஸுகி இக்னிஸ் காரை வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








