கார் வாங்க வந்தவங்களை ஆள பாத்து எடை போட கூடாது! உண்மையிலேயே இது அவங்கதானா! 'ஸ்டன்' ஆன ஷோரூம் ஊழியர்கள்!

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் எல்லாம், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் 'மாஸ் மார்க்கெட்' கார்களை வாங்குவது என்பது அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அரிதான நிகழ்வு ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. ஆம், நடிகை சினேகா ஸ்ரீகுமார் (Sneha Sreekumar) தற்போது, 'மாஸ் மார்க்கெட்' கார் ஒன்றை வாங்கியுள்ளார். நடிகை சினேகா ஸ்ரீகுமார் வாங்கியிருப்பது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) கார் ஆகும்.

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று. சரி, சினேகா ஸ்ரீகுமார் யார்? என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு வரலாம். அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். இவர் கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் ஆவார்.

Sneha Sreekumar Buys Toyota Urban Cruiser Hyryder

நடிகை என்பதை கடந்து, நடன கலைஞர் என்ற முகமும் இவருக்கு உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மோகினியாட்டம், கதகளி, குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில், சினேகா ஸ்ரீகுமார் நிபுணத்துவம் பெற்றவர். கேரள மாநிலத்தில் உள்ள ஒரு டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு குடும்பத்துடன் நேரடியாக வந்து, அவர் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை டெலிவரி எடுத்துள்ளார். இது ஷோரூம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

அந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. அவர் வாங்கியுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டுள்ளது.

Toyota Urban Cruiser Hyryder

9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆம்பியண்ட் லைட்டிங், பேடில் ஷிஃப்டர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் என இந்த காரில் ஏகப்பட்ட வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட வசதிகள் எல்லாம், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஆரம்ப விலை 11.14 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாய் ஆகவும் இருந்து வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஹோண்டா எலவேட் (Honda Elevate) ஆகிய கார்களுக்கு எல்லாம், இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 12:12 [IST]
English summary
Sneha sreekumar buys toyota urban cruiser hyryder viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+