சொந்த உபயோகத்துக்காக குட்டி விமானம் வாங்கிய கால்பந்து சூப்பர்ஸ்டார் ரொனால்டோ!
சொந்த உபயோகத்துக்காக குட்டி விமானம் வாங்கிய கால்பந்து சூப்பர்ஸ்டார் ரொனால்டோ!
உலகின் பணக்கார கால்பந்து வீரர் என்ற பெருமைக்குரிய போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ செல்வ செழிப்பில் மிதந்து வருகிறார். ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். உலகின் பெரும் பணக்கார விளையாட்டு வீரர் என்ற பெருமை மட்டுமின்றி, உலகின் அதிக தானதர்மங்கள் செய்யும் விளையாட்டு வீரர்களில் முதன்மையானவர் என்ற பெருமையும் அவருக்கு சமீபத்தில் கிடைத்திருக்கிறது.
கால்பந்து விளையாட்டை தவிர்த்து, விளம்பர படங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார் ரொனால்டோ. மேலும், அவரது வாழ்க்கையை வைத்தே ஒரு திரைப்படமும் தயாரிகியிருக்கிறது. இதனால், அவருக்கு பணமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், அதிக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், சொந்தமாக ஓர் விமானத்தையே அவர் சமீபத்தில் வாங்கியிருக்கிறார். ட்வீட்டர் மூலமாக இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது விமானம் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விமான மாடல்
கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200 என்ற அந்த விமானத்தில் நவீன வசதிகளுடன் கட்டமைத்து வாங்கியிருக்கிறார். இந்த விமானத்திற்கு ஐஏஐ கேலக்ஸி என்ற இன்னொரு பெயரும் உண்டு. இஸ்ரேல் ஏர்கிராஃப்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது.

இருக்கை வசதி
இந்த விமானத்தில் 8 முதல் 10 பேர் வரை பயணிக்க முடியும். மிக சொகுசான இருக்கைகளுடன் இந்த விமானத்தின் உட்புறம் பல்வேறு வசதிகளை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த விமானம் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல். இந்த விமானத்தில் பிராட் அட் விட்னி கனடா பிடபிள்யூ306ஏ என்ற இரட்டை எஞ்சின்களை கொண்டது.

அதிகபட்ச வேகம்
கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200 விமானம் மணிக்கு அதிகபட்சமாக 900 கிமீ வேகத்தில் பறக்கும்.

பயண தூரம்
ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பியிருக்கும் பட்சத்தில், 6,300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதர வசதிகள்
இந்த விமானத்தில் மிக மிக சொகுசான இருக்கைகள் இருக்கின்றன. தவிர்த்து, எலக்ட்ரிக் மைக்ரோஓவன், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் பைலட்டுகள், பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பொதுவான ரெஸ்ட் ரூம் உள்ளது.

விலை மதிப்பு
இந்த விமானத்தை 20.5 மில்லியன் டாலர்கள் விலை கொடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

01. உலகின் காஸ்ட்லி பிரைவேட் ஜெட்...
02. உலகின் காஸ்ட்ரி டாப் 10 பிரைவேட் ஜெட்டுகள்...


Click it and Unblock the Notifications








