ஷோரூம்ல பூஜை எல்லாம் போட்டு 85 லட்ச ரூபா காரை வாங்கனது அவங்களா! மாடர்ன் பொண்ணுணு நெனச்சா வேற மாதிரி இருக்காங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon). தற்போதைய நிலையில் 71.65 லட்ச ரூபாய் என்ற விலையில் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 85 லட்ச ருபாய் வரும். ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரில் பொருத்தப்பட்டிருப்பது, சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும்.
இந்த 4 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 268 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை நிறைய பேர் வைத்துள்ளனர். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாகும்.

இதில், பாலிவுட் நடிகர்களான (Hrithik Roshan) மற்றும் சஞ்சய் மிஸ்ரா (Sanjay Mishra) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இது ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற முரட்டுத்தனமான மற்றும் கம்பீரமான கார் ஆகும். இதன் காரணமாகவே ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை பிரபலங்கள் ஆர்வமாக வாங்குகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலம் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை வாங்கியுள்ளார். அவர் மெஹ்ரீன் காந்தி (Mehreen Gandhi) ஆவார். இவர் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களில் (Social Media Influencer) ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் நிறைய பேரிடம் காணப்படுகிறது. இதில் மெஹ்ரீன் காந்தி தற்போது தனது ஜீப் வ்ராங்லர் ரூபிகான் கனவை நிறைவேற்றி கொண்டுள்ளார். பொதுவாக கனவு வாகனங்களை வாங்கும்போது, ஏற்படும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அப்படியான ஒரு அனுபவம் மெஹ்ரீன் காந்திக்கு தற்போது கிடைத்துள்ளது. ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை மெஹ்ரீன் காந்தி டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் மெஹ்ரீன் காந்தி மிகவும் உற்சாகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
அவர் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் கூட, ஹிந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய் உடைத்து, பூஜைகளை எல்லாம் செய்து ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை டெலிவரி எடுத்துள்ளார். மெஹ்ரீன் காந்தி மிகவும் தீவிரமான கார் ஆர்வலர் ஆவார். எனவேதான் ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை அவர் தேர்வு செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் விலை மிகவும் அதிகம். எனவே அதை விட விலை குறைவான கார்களை, குறிப்பாக மஹிந்திரா தார் போன்ற கார்களை, ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை போல் மாடிஃபிகேஷன் செய்து, நிறைய பேர் தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு காரை வாங்கியுள்ள மெஹ்ரீன் காந்திக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








