சினிமா ஸ்டார்களின் வாரிசுகளுடன் அதிகமா சுற்றும் யார் இந்த ஒர்ரி? 1.5 கோடி ரூபா பென்ஸ் காருக்கு ஓனர்!!
பாலிவுட் சினிமா (Bollywood Cinema) வட்டாரத்தில் திரைப்படங்களில் நடிக்காமலேயே பலர் பிரபலமாக உள்ளனர். அதாவது, சினிமா துறை உடன் நேரடியாக தொடர்பில் இல்லாமல், சினிமா பிரபலங்கள் உடன் சுற்றுவதன் மூலமாகவும், திரைப்படங்களை விமர்சனம் செய்வதன் மூலமாகவும் பிரபலமானவர்கள் பாலிவுட் வட்டாரத்தில் மட்டுமே பலர் உள்ளனர். இது இரண்டையும் செய்யக்கூடியவர், ஒர்ரி (Orry) எனப்படும் ஓர்ஹான் அவத்ரமணி (Orhan Awatramani) ஆவார். சமூக வலைத்தளங்களில் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் கவனத்தை பெற ஆரம்பித்தவர், பாலிவுட் பிரபலங்களின் மகன், மகள்கள் உடன் சுற்ற ஆரம்பித்தார்.
அவர்களுடன் லேட் நைட் பார்டிக்கு செல்வது, வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதன் மூலம் மேலும் இணையத்தில் பிரபலமாகினார். இவை மட்டுமின்றி, புகைப்படங்களுக்கு ஒர்ரி கொடுக்கும் தனித்துவமான போஸ் அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. இந்தியாவிலேயே போட்டோவுக்கு இவர் கொடுப்பது போன்றதான போஸை வேறு யாரும் கொடுக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஒர்ரி எனப்படும் ஓர்ஹான் அவத்ரமணிக்கு பிங்க் நிறம் என்றாலே மிகவும் பிடிக்கும். இதனாலேயே பெரும்பாலும் பிங்க் நிற உடைகளை அணியும் பழக்கம் கொண்டவரான இவர், தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (Mercedes-Benz G-Class) காரை பளிச்சிடும் பிங்க் நிறத்தில் வைத்துள்ளார். பெரியதாக யாரும் பிங்க் நிறத்தில் வாகனத்தை வைத்திருக்க மாட்டார்கள் என்பதால், இவரது ஜி-கிளாஸ் வாகனம் மட்டும் எப்போதுமே சாலையில் தனித்து தெரிகிறது.
ஆடை விஷயத்தில் பலரது கேலி கிண்டல்களுக்கு உள்ளானவரான ஒர்ரி, பிங்க் நிற கோட் உடைக்கு கொஞ்சமும் பொருந்தாத அடர் பச்சை நிறத்தில் பனியனை அணிவது, அதற்கு நேரெதிரான நிறத்தில் ஷூ அணிவது என ஃபேஷனில் அதிக ஈடுப்பாடு கொண்டவர் போல் காட்டிக் கொண்டு அடிக்கடி பல்ப் வாங்க கூடியவர். ஆனால், தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் காரை அற்புதமாக பிங்க் நிறத்திற்கு மாற்றி பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு காரணம், காரை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற யோசனை மட்டும்தான் அவரது ஆகும். காருக்கு பிங்க் நிற பெயிண்ட்டை நிச்சயமாக மெக்கானிக்குகள் தான் வழங்கி இருப்பர். இந்த பிங்க் நிற ஜி-கிளாஸ் காரில் ஒர்ரி ஏறி செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
முன்னணி பாலிவுட் நடிகராக இல்லாவிடினும், இவரது பாதுகாவலர்களாக சிலர் நன்கு கட்டுமஸ்தான உடலுடன் இருப்பதை வீடியோவில் காணலாம். சமூக வலைத்தள பிரபலம் ஒர்ரியிடம் இருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் காரின் ஜி350டி (G 350d) என்கிற டீசல் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை.
அதாவது, ஒர்ரி பயன்படுத்தி வருவது பழைய தலைமுறை ஜி-கிளாஸ் கார் ஆகும். தற்சமயம் இதற்கு பதிலாக, ஜி400டி வேரியண்ட் ஜி-கிளாஸில் விற்பனை செய்யப்படுகிறது. ஜி-கிளாஸ் ஜி350டி வேரியண்ட் விற்பனையில் இருந்த சமயத்தில் அதன் விலை ஏறக்குறைய ரூ.1.5 கோடியாக இருந்தது. ஜி350டி வேரியண்ட்டில் 3 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.
அதிகப்பட்சமாக 285 பிஎஸ் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது. மேலும், இந்த எஸ்யூவி காரில் 3 டிஃப்ரென்ஷியல் லாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுவதால், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற காராக விளங்குகிறது. இந்த காரை ஷோரூமில் இருந்து ஒர்ரி வாங்கும்போது வெள்ளை நிறத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, பிங்க் நிறமானது பெண்களுக்கு பிடித்த நிறமாக கருதப்படுகிறது. இதனாலேயே இத்தகைய நிறத்தில் ஜி-கிளாஸ் காரை இவர் வைத்திருப்பது விசித்திரமானதாக பார்க்கப்படுகிறது. பாலிவுட் சினிமா பிரபலங்கள் பரவலாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 என்கிற இதனை காட்டிலும் விலைமிக்க ஜி-வேகன் காரை பயன்படுத்தும் நிலையில், ஒர்ரி தனது ஸ்டேட்டஸுக்கு ஏற்ப சற்று விலை குறைவான ஜி-கிளாஸ் காரை பயன்படுத்துகிறார்.


Click it and Unblock the Notifications








