கெறங்கடிச்சுட்டாங்க! அரை குறை ட்ரெஸ்ஸில் பைக் ஓட்டீட்டு வந்தது அவரா! வீடியோவை உத்து உத்து பாக்கும் இளசுகள்!
சமூக வலை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள கால கட்டம் இது. யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, ஆபத்தான காரியங்களை பலர் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கில் 2 இளம்பெண்கள் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் இருவரும் 'மாடர்ன்' ஆக உடையணிந்துள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அதாவது ஹெல்மெட் (Helmet) போன்ற பாதுகாப்பு கவசங்கள் எதையும் அவர்கள் அணியவில்லை. இது மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் சற்றும் உணரவில்லை. போதாக்குறைக்கு நகர சாலையில் வேகமாக வேறு அவர்கள் பைக்கை ஓட்டியுள்ளனர்.
மேலும் பைக்கை ஓட்டிய பெண் இடையில் ஒரு கையை விட்டு துப்பாக்கியால் சுடுவது போல் சேட்டைகளை வேறு செய்கிறார். உண்மையில் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஓட்டுவது சவாலானது. அதன் அதிக எடையும், சக்தி வாய்ந்த இன்ஜினும்தான் இதற்கு காரணம். அப்படிப்பட்ட ஒரு பைக்கை பெண்கள் ஓட்டுவது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

ஆனால் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு இவர்கள் பைக்கை ஓட்டியிருக்கலாம். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. பைக்கை ஓட்டிய பெண் 'ஹை ஹீல்ஸ்' அணிந்துள்ளார். 'ஹை ஹீல்ஸ்' அணிந்து கொண்டு ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டுவது சவாலான ஒரு விஷயம்.
இது அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி, சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும். மறுபக்கம் பின்னால் அமர்ந்துள்ள பெண், செருப்பே அணியவில்லை. வெறும் காலுடன் பயணம் செய்கிறார். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்க நேரிட்டால், இது பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். காலுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், கடுமையான காயங்களை சந்திக்க நேரிடலாம்.
ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல், வைரல் வீடியோவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பெண்கள் இப்படி நடந்து கொண்டுள்ளனர். பைக்கை ஓட்டிய பெண், சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ளவர் (Social Media Influencer) என கூறப்படுகிறது. அவரது பெயர் கன்னு மீனா (Kannu Meena) என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராம் தளத்தில் அவரது பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் எதிர்பார்த்தபடியே இந்த வீடியோ வைரல் ஆகி விட்டது. ஆனால் இது ஆபத்தானது என்பதை அவர்கள் உணர வேண்டும். நேரம் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற நிகழ்வுகளை காவல் துறை அதிகாரிகள் கண்டும் காணதது போல் விட்டு விட்டால், மற்றவர்கள் மத்தியில் நிச்சயம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அதாவது மற்றவர்களும் இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட பெண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








