ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

பைக்கில் பயணிக்கும்போது, ஹெல்மெட்டை தவறாக கையாண்ட சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த உருக்கமான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

போலீஸை பார்த்தால் மட்டும்...

பைக்கில் பயணிக்கும்போது, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதே இல்லை. ஒரு சிலர் பைக்கில் பயணிக்கும்போது ஹெல்மெட்டை உடன் எடுத்து செல்வார்கள். ஆனால் அணிய மாட்டார்கள். எங்கேயாவது தூரத்தில் போலீஸ் நிற்பதை பார்த்தால் மட்டும் அவசர அவசரமாக எடுத்து ஹெல்மெட்டை அணிந்து கொள்வார்கள்.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

நாமும் ஒருவராக இருக்கலாம்

ஒரு சிலர் தங்கள் பைக்கின் கண்ணாடிகளில் ஹெல்மெட்டை தொங்க விட்டு கொண்டு பயணிப்பார்கள். வேறு ஒரு சிலரோ தங்களின் முழங்கையில் ஹெல்மெட்டை மாட்டி கொண்டு பைக்கையும் ஓட்டி செல்வார்கள். இப்படி வித்தியாச வித்தியாசமாக ஹெல்மெட்டை கையாள்பவர்களை நாம் சாலையில் பல முறை சந்தித்திருக்கலாம். அல்லது நாமும் அதில் ஒருவராக கூட இருக்கலாம்.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

ஹெல்மெட் அவசியம்

ஆனால் இவை எல்லாம் முற்றிலும் தவறான செயல்கள். பைக்கை இயக்கும்போது கண்டிப்பாக தலையில் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகளையும் மீறி, ஹெல்மெட்டை தவறாக கையாண்டதால், சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது உயிரை இழந்த சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

சாப்ட்வேர் இன்ஜினியர்

பெங்களூரு மாநகரின் ஹெப்பல் பகுதியை சேர்ந்தவர் நிதின் கணபதி. 33 வயதாகும் இவர், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் கே.டி.எம். டியூக் பைக்கில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெல்மெட்டை தலையில் அணியாமல் கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

பரிதாப பலி

பனஸ்வாடி பகுதியில் உள்ள 100 அடி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. சிறிது தூரம் தாறுமாறாக ஓடிய பைக், அங்கிருந்த ஒரு மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. அங்கிருந்த மக்கள் உடனடியாக நிதின் கணபதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே நிதின் கணபதி உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

விபத்துக்கு காரணம் என்ன?

அதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பைக்கை இயக்கியதே விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள்

இந்தியாவில் சாலை விபத்து குறித்த புள்ளி விபரங்கள் நம்மை மிரள வைப்பதாக உள்ளன. இந்தியாவில் தினசரி 2,000க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடக்கின்றன. ஒவ்வொரு 4 நிமிடத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது சாலை விபத்து காரணமாக உயிரிழக்கிறார். இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் 16 குழந்தைகள் விபத்தில் சிக்கி மாண்டு வருகின்றனர்.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

பைக் ஓட்டிகள் அதிகம்

சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 30 சதவீதம் பேர் பைக் ஓட்டிகள். சாலை விபத்துக்களால் அதிக காயம் மற்றும் உயிர் பலி நிகழும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இப்படியான சூழலில் ஹெல்மெட்டை தவறாக கையாண்டதால், சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நம்மை அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது.

 ஹெல்மெட்டை கையில் வைத்து கொண்டு பயணித்ததால் விபத்து-சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

இதை செய்யலாமே...!

எனவே எந்த வகையான பைக்கை ஓட்டினாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். ஹெல்மெட் மற்றும் பைக்கில், நமது ரத்த வகை, உறவினர் மற்றும் நண்பர்களின் விபரங்கள் குறித்த தகவல்களை பிரிண்ட் செய்து ஒட்டலாம். ஒரு வேளை நாம் விபத்தில் சிக்கி விட்டால், உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க இது உதவி செய்யும்.

Source: TOI

Note: Images are only for representative/symbolic purpose.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Software Engineer Rides Motorcycle With Helmet In Hand; Dies After Crashing Into Electric Pole. read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X