அவரோட தங்கச்சியா இது! உல்லாச கப்பல் மாதிரியான காரை வாங்கி போட்றுக்காங்க! விலையை கேட்டா மயக்கமே வந்துரும்!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். GLE 300d, GLE 400d மற்றும் GLE 450 என மொத்தம் 3 வெர்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

இந்த காரின் GLE 300d வெர்ஷனில், 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 241 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Soha Ali Khan Mercedes-Benz GLE SUV

அதே நேரத்தில் இந்த காரின் GLE 400d வெர்ஷனில், 3.0 லிட்டர் இன்லைன் 6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 326 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் GLE 450 வெர்ஷனில், 3.0 லிட்டர் இன்லைன் 6 டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 362 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Soha Ali Khan Mercedes-Benz GLE

பாலிவுட் திரையுலக பிரபலங்களான கங்கனா ரனாவத், பர்ஹான் அக்தர், பொம்மன் இராணி மற்றும் நேஹா ஷர்மா உள்ளிட்டோரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் இருக்கிறது. இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த மற்றொரு பிரபலமும் தற்போது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரை வாங்கியுள்ளார்.

அவர் பிரபல பாலிவுட் நடிகையான சோஹா அலி கான் (Soha Ali Khan) ஆவார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான சயில் அலி கானின் (Saif Ali Khan) தங்கை ஆவார். தனது 45வது பிறந்த நாளை முன்னிட்டு, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரை சோஹா அலி கான் வாங்கியுள்ளார்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரின் ஆரம்ப விலை (Price) 91 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.08 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இந்த காரின் எந்த வேரியண்ட்டை சோஹா அலி கான் வாங்கியுள்ளார்? என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி காரானது, பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள மாடல்களில் ஒன்று ஆகும். எனவே சோஹா அலி கான் இந்த காரை வாங்கியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

Article Published On: Thursday, October 5, 2023, 23:52 [IST]
English summary
Soha ali khan buys mercedes benz gle all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+