காற்றில் உள்ள CO2-வ எரிபொருளா மாற்றும் கருவி.. இந்த கருவிய இயக்க சூரிய ஒளியே போதும்.. ஓசில வண்டிய ஓட்டலாம்!!

இந்த ஒட்டுமொத்த உலகமும் நிலையான எரிபொருள் (Sustainable Fuel)-ஐக் கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தமாதிரியான காலகட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிலர் வளிமண்டலத்தில் இருந்து வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதற்கான ஓர் எந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்கள் உருவாக்கி இருக்கும் அந்த கருவி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை (Carbon Dioxide) உறிஞ்சு, அதில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.

அதவாது, காற்றில் கலந்து இருக்கும் ஆக்சிஜனைத் தண்ணீராக உருவாக்கும் கருவியை போல இந்த எந்திரம் வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருளை உருவாக்கும். இப்போது இந்த கருவியில் 'சோலார் சின்கேஸ்' எனும் வாயுவை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கி இருக்கின்றனர். இதையே வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளாக மாற்றி வருகின்றனர்.

Cambridge researchers create solar-driven co2 fuel device

இதற்கான பணியிலேயே ஆராய்ச்சியாளர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த எந்திரம் இயங்க மின்சார ஆற்றலே போதுமானது. அந்த மின்சார ஆற்றலையும் அது சோலாரில் இருந்தே பெற்றுக் கொள்ளும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் தயார் செய்திருக்கின்றனர். அதாவது, தனக்கு தேவையான மின்சாரத்தை தானே சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் அந்த கருவியை அவர்கள் வடிவமைத்து இருக்கின்றனர்.

எனவே இந்த கருவியை வாங்கிவிட்டால் எரிபொருளை பூஜ்ஜியம் செலவில் தயாரித்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, நம்முடைய பயணத்தை இந்த கருவியால் முழுக்க முழுக்க ஓசியில் மேற்கொள்ள முடியதாக மாற்றிக் கொள்ள முடியும். அதேபோல், இந்த கருவி பயன்பாட்டிற்கு வரும் எனில் ஆயில் துறையில் அது மிகப் பெரிய புரட்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி பெரும்பாலான வாகனங்கள் கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் - டீசலையே நம்பி இருக்கின்றன. விமானங்களும் புதைபடிவ எரிபொருளையே நம்பியிருக்கின்றன. இவை எப்போது வேண்டுமானாலும் வற்றி போகலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இந்த மாதிரியான சூழலிலேயே நிரந்தரமான எரிபொருளை தரும் விதமாக கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருளை உருவாக்கும் எந்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் தயார் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இது கச்சா எண்ணெய்யை இந்த உலகம் நம்பி இருப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் என நம்பப்படுகின்றது. சோலாரில் இயங்கும் கருவியில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் மூலம் கார்களை மட்டுமல்ல விமானங்களையும் இயக்கிக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல சில மருந்து பொருட்களையும் இதன் வாயிலாக தயாரித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

ஆகையால், இந்த கருவி ஓர் வரபிரசாதமாக அமைய போகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. குறிப்பாக, இந்த கருவி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதனால் அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவும் குறையக் கூடும். இதனால் புவி வெப்ப மயமாதலையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், காற்றில் கார்பன் டை ஆக்சைடு சற்றும் பஞ்சமில்லாத சூழலே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கருவி இரவு நேரங்களில் காற்றை தனக்குள் உறிஞ்சும் பணிகளை மேற்கொள்ளும். அத்துடன், காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை தனியாக பிரித்தெடுத்து, சாதாரண காற்றை மட்டுமே வெளியேற்றும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்பாஞ்சுகள் தண்ணீரை உறிஞ்சுவதை போல, இந்த கருவி இரவு முழுக்க செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடை மட்டும் உறிஞ்சும். இவ்வாறு இரவு முழுக்க சேகரிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடில், பகலில் சூரியன் வெளியே வந்ததும் அதன் ஒளியால் கார்பன் டை ஆக்சைடை சேர்த்து வைத்திருக்கும் இடம் சூடேற்றப்படும்.

இந்த நிலையிலேயே ஓர் வேதிவினை அந்த களனில் ஏற்பட்டு 'சோலார் சின்கேஸ்' எனும் வாயு உருவாகின்றது. இந்த சின்கேஸையே வாகனங்களை இயக்கக் கூடிய எரிபொருளாக மாற்றி வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது கார், விமானம் என பலதரப்பட்ட வாகனங்களை இயக்கப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெகு விரைவில் இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே வாகன ஆர்வலர்கள் பலர் இந்த கருவியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எப்போது இந்த கருவி பயன்பாட்டிற்கு வரும், இதன் வாயிலாக மிகப் பெரிய அளவில் ஆயில் உற்பத்தி செய்யப்படும் என்பது பற்றிய விபரங்கள் துள்ளியமாக வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 5:00 [IST]
English summary
Solar powered device converts atmospheric co2 into sustainable fuel at cambridge
மேலும்... #alternate fuel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+