இந்த கார்கள் வந்திருந்தால் டாடா தலையெழுத்து மாறியிருக்குமோ?

By Saravana

இந்திய மார்க்கெட்டில் பல புதுமையான கான்செப்ட்டுகளை தந்து பலரின் கவனத்தை டாடா மோட்டார்ஸ் ஈர்த்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் நானோ கார் முதல் அழுத்தம் கூட்டப்பட்ட காற்றில் இயங்கும் கார் என வகை வகையான கான்செப்ட் மாடல்கள் மூலமாக ஆட்டோமொபைல் துறையை அவ்வப்போது திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

இவற்றில் பெரும்பாலான கார்கள் தயாரிப்பு நிலை வரை வந்து, விற்பனைக்கு கொண்டு செல்லப்படாமல் முழுக்கு போடப்பட்டிருக்கிறது. இந்த கார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தால், அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தில் நிச்சயம் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கும் என்று கருதலாம். அதில், சில கார் மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

01. டாடா நானோ டீசல்

01. டாடா நானோ டீசல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாடா நானோ காரின் டீசல் மாடலை தயாரிக்கும் முயற்சியை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டது. லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தகவல்கள் வெளியானதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 முழுக்கு

முழுக்கு

பாஷ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நானோ காருக்கான புதிய டீசல் எஞ்சினை உருவாக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டது. ஆனால், அந்த திட்டத்தை டாடா கைவிட்டது. டாடா நானோ காரின் டீசல் மாடல் வந்திருந்தால், நிச்சயம் அது இந்தியாவின் மிக குறைவான விலை டீசல் கார் என்பதுடன், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இரண்டு வகை மார்க்கெட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருக்கிறது.

02. டாடா ஸெனான் டஃப் டிரக்

02. டாடா ஸெனான் டஃப் டிரக்

டாடா ஸெனான் பிக்கப் டிரக் அடிப்படையில் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் ஆஸ்திரேலியாவில் கட்டமைக்கப்பட்ட இந்த கான்செப்ட் பிக்கப் டிரக் தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்து பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு டாடா தயாரிப்பு என்ற பெயரில் நாம் கூட செய்தி வெளியிட்டிருந்தோம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த ஸெனான் டஃப் பிக்கப் டிரக்கில், 20 இன்ச் அலாய் வீல்கள், ஆஃப்ரோடு டயர்கள், எல்இடி ஆஃப்ரோடு விளக்குகள், ஸ்நோர்கெல், ஸ்கிட் பிளேட், இழுவை கொக்கிகள் என பல்வேறு ஆஃப்ரோடுக்கு தேவையான சமாச்சாரங்கள் இடம்பெற்றிருந்தன.

ஸெனான் தொடர்ச்சி...

ஸெனான் தொடர்ச்சி...

148 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் டைகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. 5ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த மாடலும் கான்செப்ட் நிலையுடன் தனது ஆயுளை முடித்துக் கொண்டது. இது நிச்சயம் தனி நபர் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறக்கூடியதாகவும், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கும்.

 03. டாடா இன்டிகோ அட்வென்ட்

03. டாடா இன்டிகோ அட்வென்ட்

கடந்த 2004ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா இன்டிகோ அட்வென்ட் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. முரட்டுத்தனமான எஸ்யூவி மாடல்களுக்கு பதிலாக, குடும்பத்தினருக்கு ஏற்ற எஸ்டேட் ரக கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. நம் நாட்டில் விற்பனையில் இருந்த டாடா மரினா காரின் அடிப்படையிலான மாடல்தான் இது.

இதுவும் வரவில்லை

இதுவும் வரவில்லை

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பொருட்கள் வைப்பதற்கான அதிக இடவசதி, ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் போன்ற அம்சங்களுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களும் இருந்தன. ஆனால், ஐரோப்பா உள்பட எந்தவொரு நாட்டிலும் இந்த கார் விற்பனைக்கு வரவில்லை.

 04. வாயுவில் இயங்கும் கார்

04. வாயுவில் இயங்கும் கார்

மாற்று எரிபொருள் கார்களை வடிவமைக்கும் நோக்கத்தில் அழுத்தம் கூட்டப்பட்ட வாயுவில் இயங்கும் இரண்டு கான்செப்ட் கார்களை சில ஆண்டுகளுக்கு முன் டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்காக, வடிவமைக்கப்பட்ட பிரத்யேக எஞ்சினை ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ.,யுடன் சேர்ந்து தயாரித்தது.

ஆவல்

ஆவல்

பெரும் ஆவலைத் தூண்டிய இந்த காற்றில் இயங்கும் காரின் வடிவமைப்புப் பணிகள் சில ஆண்டுகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டமும் சத்தமின்றி கிடப்பில் இருக்கிறது. இந்த காற்று காரும் நிச்சயம் எதிர்கால வாகன தொழில்நுட்பத்தில் புரட்சியை படைக்கும் என்று நம்பலாம்.

05. குட்டி டாடா சஃபாரி

05. குட்டி டாடா சஃபாரி

ஐரோப்பாவுக்காக 3 கதவுகள் கொண்ட டாடா சஃபாரி எஸ்யூவி கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதுவும் இல்லை

இதுவும் இல்லை

சாதாரண சஃபாரி எஸ்யூவியைவிட 200 மிமீ குறைவான வீல் பேஸ் கொண்ட இந்த எஸ்யூவி மாடல் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல், இந்த எஸ்யூவி திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தால், நிச்சயம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்று கருதலாம்.

06. டாடா மெகாபிக்ஸல்

06. டாடா மெகாபிக்ஸல்

டாடா நானோ காரின் அடிப்படையில் ஐரோப்பிய மார்க்கெட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல் இது. 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இடவசதியுடன் நகர்ப்புறத்துக்கான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சி

தொடர்ச்சி

நானோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலா என்று சொல்லும் அளவுக்கு மிக கவர்ச்சியான டிசைன், தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருந்த இந்த காரும் தயாரிப்புக்கு செல்லவில்லை என்பது ஏமாற்றமான விஷயமே.

07. டாடா Pr1ma

07. டாடா Pr1ma

கடந்த 2009ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனாவால் டிசைன் செய்யப்பட்ட பிரிமியம் செடான் கார்.

செக்மென்ட்

செக்மென்ட்

டொயோட்டா கரொல்லா, ஹோண்டா சிவிக் செடான் கார்களுக்கு இணையான செக்மென்ட்டில் நிலைநிறுத்தக்கூடிய அம்சங்களை பெற்றிருந்தது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த செடான் கார் 2.7 மீட்டர் நீளமுடையது. மிக சிரப்பான டிசைன் அம்சங்களை கொண்டிருந்த இந் காரும் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இழப்பு

இழப்பு

டாடா நானோ டீசல், வாயுவில் இயங்கும் கார், பிரிமியம் செடான் கார் என பலதரப்பட்ட கான்செப்ட் கார்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருந்தாலும், அவை உற்பத்திக்கு வந்திருந்தால், அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு இவை கூடுதல் வலு சேர்த்திருக்கும் என்றால் மிகையில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Exciting Tata Concept Cars which never made it to production.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X