ஏர் இந்தியா இயக்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கொச்சியிலிருந்து துபாய் நகருக்கு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொச்சியிலிருந்து துபாய் சென்ற அந்த முதல் விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணிப்பது என்பது புதிய சுகானுபவத்தை வழங்கும் என்பதால் சமூக வலைதளங்களில் பயணிகளும், இதன் ரசிகர்களும் பெரும் வரவேற்பை கொடுத்தனர். இந்த நிலையில், இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

போட்டியாளர்

போட்டியாளர்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமான மாடலாக விளங்கும் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு போட்டியாக களமிறக்கப்பட்டது. இதனால், ஏர்பஸ் ஏ380 மார்க்கெட்டை தடாலாடியாக ஆட்டம் காண வைத்தது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.

புதிய வழித்தடத்தில்...

புதிய வழித்தடத்தில்...

ஏற்கனவே, டெல்லி- துபாய் இடையே ஒரு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் சேவையில் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது கொச்சி- துபாய் வழித்தடத்தில் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தினஅ 22வது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். கடந்த நவம்பர் மாதம் போயிங் நிறுவனத்தின் சார்லஸ்டன் ஆலையிலிருந்து டெலிவிரி கொடுக்கப்பட்டது.

பாரம்பரிய உடை

பாரம்பரிய உடை

கொச்சியிலிருந்து துபாய் சென்ற முதல் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் பணியாற்றிய ஏர் இந்தியா ஊழியர்கள் சீருடையை தவிர்த்து, அனைவரும் பாரம்பரிய உடையில் பயணிகளை வரவேற்று, சேவை புரிந்தனர்.

பெயரில் சுவாரஸ்யம்

பெயரில் சுவாரஸ்யம்

போயிங் 737,747,767,777 வரிசையில் இந்த விமானமானது 787 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த விமானத்திற்கு முதலில் 7E7 என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆனால், சீனர்கள் 8ம் எண்ணை ராசியாக கருதுவதால், இந்த விமானத்தின் முக்கிய மார்க்கெட் சீனா என்பதால், 787 என்று மாற்றினர். எதிர்பார்த்தபடியே, அங்கிருந்துதான் எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்தன.

இலகு எடை

இலகு எடை

இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இதன் ரகத்தில் மிக இலகுவான எடையுடன், அதிக உறுதியான கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

இலகு எடை கொண்டிருப்பதால், இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். இதன்மூலமாக, கட்டணத்தை மிக சரியாக நிர்ணயிக்க விமான நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது.

இறக்கை அமைப்பு

இறக்கை அமைப்பு

இந்த விமானத்தின் இறக்கை அமைப்பு மேக்ஸிப்ளக்ஸ் புதிய தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டது. இதன்மூலமாக, சுழற் காற்று உள்ளிட்ட காற்றினால் ஏற்படும் அபாயகரமான பகுதிகளை எளிதாக கடக்கும். குறைவான அதிர்வுகளை தருவதால் சொகுசான பயண அனுபவத்தை பயணிகள் பெற முடியும்.

 மற்றொரு வசதி

மற்றொரு வசதி

இதன் விசேஷ இறக்கை அமைப்பு காரணமாக, இந்த விமானத்தின் கண்ணாடி ஜன்னல் மிக பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மிக விசாலமாக வெளியுலகை கண்டு ரசிப்பதற்கான வாய்ப்பை இந்த ஜன்னல்கள் வழங்குகின்றன. வேறு எந்த விமானத்திலும் இந்தளவுக்கு விசாலமான கண்ணாடி ஜன்னலை பார்க்க இயலாதாம்.

வெப்பநிலை கட்டுப்பாடு

வெப்பநிலை கட்டுப்பாடு

வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு உட்புறத்தில் வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளும் விசேஷ க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இதனால், எந்த சூழலிலும் மிக சிறப்பான வெப்ப நிலை கட்டுப்பாட்டு நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதனால், பயணிகள் உடல் நலம் பாதிக்கப்படாமல் காத்துக் கொள்ள உதவும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

முதல் வகுப்பு, சாதாரண வகுப்பு என பல்வேறு இருக்கை வசதி கொண்ட மாடல்களில் பயன்பாட்டுக்கு தக்கவாறு, விமான சேவை நிறுவனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் டெலிவிரி கொடுக்கப்படுகிறது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 242 முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

எடை

எடை

இந்த விமானம் 1,17,617 கிலோ எடை கொண்டது. இந்த விமானமானது 60 மீட்டர் நீளமும், 57 மீட்டர் அகலவும், 17 மீட்டர் உயரமும் உடையது. இந்த விமானத்தில் 23 லட்சம் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உதிரிபாகங்கள் பெறப்பட்டு, அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் அல்லது ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 1000 ஆகிய எஞ்சின்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 15,130 கிமீ தூரம் வரை பறக்கும். மணிக்கு 954 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டது.

இங்கேயுமா...

இங்கேயுமா...

கார், இருசக்கர வாகனங்களில் பிரச்னை எழுந்தால் திரும்ப அழைத்து சரி செய்து தருவது போன்று, இந்த ட்ரீம்லைனர் விமானங்களில் பேட்டரி பிரச்னை எழுந்தது. இதனை, போயிங் நிறுவனம் திரும்ப அழைத்து சரிசெய்து கொடுத்து வருகிறது. இதனால், கொஞ்சம் ஆர்டர்களையும் இழந்தது போயிங் நிறுவனம்.

ஆர்டர்கள், டெலிவிரி விபரம்

ஆர்டர்கள், டெலிவிரி விபரம்

இதுவரை 1,200 ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. 500 விமானங்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் 27 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை ஆர்டர் செய்தது. அனைத்து விமானங்களும் டெலிவிரி பெறப்பட்டுவிட்டன. இதுதவிர, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 10 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் உள்ளன.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 3, 2017, 18:08 [IST]
English summary
Some Facts About Boeing 787 Dreamliner Aircraft.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+