தமிழக அரசுக்கு சொந்தமான விமானமும், அதன் சுவாரஸ்ய விஷயங்களும்... !!

Written By:

தமிழக கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அரசு பொறுப்பிலிருக்கும் வி.வி.ஐ.பி.,கள் பயன்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு சொந்தமாக விமானமும், ஹெலிகாப்டரும் உள்ளது. இந்த விஷயம் பலருக்கும் தெரியாது.

ஏனெனில், அந்த விமானமும், ஹெலிகாப்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் இருப்பதே வெளியில் தெரியாததற்கு காரணம். இயற்கை பேரிடர் காலங்களிலும், தலைநகரிலிருந்து தொலை தூரத்தில் இருக்கும் மக்களை நேரடியாகவும், விரைவாகவும் சந்திப்பதற்கு ஏதுவாகவும் வாங்கப்பட்ட இந்த விமானமும், ஹெலிகாப்டரும், அந்த நோக்கம் பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி, விமான நிலையத்தில் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சொந்த விமானம்

சொந்த விமானம்

மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லிக்கு செல்ல பயன்படும் நோக்கில், கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக தமிழக அரசுக்கு சொந்தமாக விமானம் வாங்கப்பட்டது. மாநில வாணிப கழகத்தின் மூலமாகஅப்போதும் ஜெயலலிதாதான் முதல்வராக பதவி வகித்தார்.

விமான மாடல்

விமான மாடல்

அமெரிக்க தயாரிப்பான செஸ்னா சிட்டேஷன் என்ற விமான மாடலைத்தான் தமிழக அரசு வாங்கியது. இந்த விமானம் 8 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. அதுதவிர, இரண்டு விமானிகளும், ஒரு பராமரிப்பு பொறியாளரும் இந்த விமானத்தை இயக்க தேவைப்படுவர்.

 விமானத்தின் விலை

விமானத்தின் விலை

அப்போது ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்த விமானத்தை தமிழக அரசு வாங்கியது. ஆனால், இந்த விமானம் அதிக அளவில் பயன்படுத்தப்படாதுதான் அவலமான நிலை.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

இந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஆனால், அதிகம் பயன்படுத்தப்படாவிட்டாலும், இந்த விமானத்திற்கான பார்க்கிங் கட்டணம், பைலட் சம்பளம், பராமரிப்பு பொறியாளர்களுக்கான சம்பளம் என பல லட்சங்கள் மாதந்தோறும் அரசு பொதுத்துறை செலவழித்து வருகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த விமானம் இரட்டை எஞ்சின் கொண்டது. வி.வி.ஐ.பி.,களின் பாதுகாப்பு கருதி, இரட்டை எஞ்சின் கொண்டதாக வாங்கப்பட்டது. அதாவது, அவரச காலங்களில் ஒரு எஞ்சின் பழுது ஏற்பட்டாலும், மற்றொரு எஞ்சின் மூலமாக இயங்கும்.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 796 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,650 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 45 நிமிடங்கள் பறப்பதற்கு ரிசர்வ் எரிபொருள் இருப்பு வசதி உள்ளது. தமிழகத்திலிருந்து தொலைதூர இடங்களுக்கு செல்வதற்கு பயன்படும். அடுத்து ஹெலிகாப்டர் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 அடுத்து ஹெலிகாப்டர்...

அடுத்து ஹெலிகாப்டர்...

1981ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் முதல் ஹெலிகாப்டர் தமிழக அரசுக்கு வாங்கப்பட்டது. 1990ம் ஆண்டு அந்த ஹெலிகாப்டரை மேற்கு வங்க அரசிடம் தமிழக அரசு விற்றுவிட்டது. அதன்பிறகு, விமானம் வாங்கப்பட்ட அதே 1995ம் ஆண்டில் ஹெலிகாப்டர் ஒன்றையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அரசு வாங்கியது. அந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.19 கோடி. அந்த ஹெலிகாப்டர் 10 ஆண்டுகள் கழித்து விற்பனை செய்யப்பட்டு, 2006ம் ஆண்டில் புதிய ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

 ஹெலிகாப்டர் மாடல்

ஹெலிகாப்டர் மாடல்

பெல் 412 என்ற ஹெலிகாப்டர் மாடலையே தற்போது தமிழக அரசு வைத்துள்ளது. இதுவும் அமெரிக்க தயாரிப்புதான். விமானத்தைப் போலவே, இந்த ஹெலிகாப்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இப்போதைய நிலை.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

உலக அளவில் அதிக பயன்பாட்டில் இருக்கும் நம்பகமான ஹெலிகாப்டர் மாடல். ஒன்று அல்லது இரண்டு விமானிகள் இயக்குவர். அதிகபட்சமாக 13 பேர் வரை பயணிக்க முடியும். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

செஸ்னா சிட்டேஷன் விமானத்தில் உள்ளது போன்றே, இந்த ஹெலிகாப்டரிலும் பிராட் அணட் ஒயிட்னி நிறுவனத்தின் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 3,000 கிலோ எடையை சுமந்து கொண்டு மேல் எழும்பி பறப்பதற்கான உந்து சக்தியை வழங்கும்.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 259 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 980 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்காக, தமிழக அரசின் சார்பில் பல மாவட்டங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருக்கிறது.

விமானிகள்

விமானிகள்

தமிழக அரசுக்கு சொந்தமான விமானம் மற்றும் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான பைலட்டுகள் இந்திய விமானப்படையிலிருந்துதான் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு விசேஷ பயிற்சியும் கொடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

 எல்லா சரி...

எல்லா சரி...

மக்களை எளிதாக சந்திப்பதற்கும், அரசுமுறை பயணங்களை விரைவாக முடிப்பதற்குமான சிறந்த நோக்கிலேயே இந்த விமானமும், ஹெலிகாப்டரும் வாங்கப்பட்டிருக்கின்றன. இது நல்ல விஷயம்தான். கோடிகளை கொட்டி பராமரிக்கப்படும் இந்த விமானமும், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுவது மிக குறைவு என்பதுதான் பலரின் ஆதங்கமாக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷன்!

முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷன்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Facts About TamilNadu Goverment Planes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark