எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிவேகமானது நம்ம தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்தான்!

Written By:

ராஜ்தானி வகை அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தியாவின் அதிவேகமான ரயிலாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கருதப்படுகிறது.

தமிழக தலைநகர் சென்னையிலிருந்து தேசிய தலைநகர் புதுடெல்லி வரை இயக்கப்படும் இந்த ரயில் குறைந்த நிறுத்தங்களுடன், அதிவேகத்தில் இரு நகரங்களையும் இணைக்கும் ரயிலாகவும் இருக்கிறது. இந்த ரயில் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

 தினசரி சேவை

தினசரி சேவை

ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று சேவைகளை தரும் ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து டெல்லியை விரைவாக கடந்ததால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. இதையடுத்து, 1982ம் ஆண்டு வாரத்திற்கு நான்கு சேவைகள் வழங்கும் ரயிலாகவும், 1988ல் தினசரி ரயிலாகவும் மாற்றப்பட்டது.

பெயர்

பெயர்

நாட்டிலேயே ஒரு மாநிலத்தின் பெயரில் இயக்கப்படும் ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு. பிற அனைத்து ரயில்களும் நகரங்களின் பெயரில் அல்லது தலைவர்களின் பெயரில் இயக்கப்படுகிறது.

அதிவேக ரயில்

அதிவேக ரயில்

ராஜ்தானி வகை அல்லாத ரயில்களில் இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படுகிறது. ஆம், இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.

சராசரி வேகம்

சராசரி வேகம்

இந்த ரயில் சென்னை- புதுடெல்லி இடையே 11 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது. இதில், டிரைவர்கள் மாறுவதற்காகவும், தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் பல்ஹர்சா சந்திப்பில் நிறுத்தப்படுகிறது.

பயண நேரம்

பயண நேரம்

தற்போது சென்னை- டெல்லி இடையிலான 2,182 கிமீ தூரத்தை 33 மணி 5 நிமிடங்களில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கடக்கிறது. இதனால், ஆந்திரா, கர்நாடாக, கேரளா போன்ற தென் மாநிலத்தவர்களும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணிக்கவே விரும்புகின்றனர். இதனால், பிற தென் இந்திய நகரங்களிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு எப்போதுமே கூடுதல் வரவேற்பு இருந்து வருகிறது.

இதிலும் பெருமை

இதிலும் பெருமை

ராஜ்தானி மற்றும் துரந்தோ வகை அல்லாத ரயில்களில் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அதிக தூரம் பயணிக்கும் ரயில்களில் ஒன்று. அதாவது, சென்னை- விஜயவாடா இடையிலான 431 கிமீ தூரத்திற்கு இடையில் எங்கும் நிற்காமல் செல்கிறது. கோட்டா- வதோதரா இடையிலான 528 கிமீ தூரத்தை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ ரயில்கள் இடைநில்லாமல் கடக்கின்றன.

அதிவேகத்தால் விபத்து

அதிவேகத்தால் விபத்து

இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் என்ற பெருமைக்குரிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், தனது வேகத்தின் காரணமாக பல விபத்துக்களிலும் சிக்கியிருக்கிறது. 1981ம் ஆண்டு ஆந்திர மாநிலம், அசிஃபாபாத் ரோடு சந்திப்பு அருகே நடந்த விபத்தில் 14 பேர் இறந்தனர். இதையடுத்து, ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திணறிய எஞ்சின்

திணறிய எஞ்சின்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இருந்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. 18 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டபோது, இட்டர்சி நகருக்கு அருகேயுள்ள மலைப்பாங்கான வழித்தடங்களில் இதன் ரயில் எஞ்சின் திணறியது. இதனால், 2 முதல் 3 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் ரயில்வே அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ், இந்த வழித்தடத்தில் இரண்டு ரயில் எஞ்சின்களை வைத்து ரயிலை இயக்க அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பெட்டிகள் எண்ணிக்கை

பெட்டிகள் எண்ணிக்கை

இட்டர்சி வழித்தடத்தில் இரண்டு ரயில் எஞ்சின் வைத்து இயக்கத் துவங்கியதும், பெட்டிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 24 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில், 6 ஏசி பெட்டிகள், 13 படுக்கை வகுப்பு பெட்டிகள் அடங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவின் அதிவேக சாதாரண வகை எக்ஸ்பிரஸ் ரயிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் WAP- 4 மின்சார எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு அல்லது ராயபுரம் லோகோ ஷெட்டிலிருந்து இந்த ரயில் எஞ்சின் பெறப்படுகிறது.

WAP-4 எஞ்சின்

WAP-4 எஞ்சின்

WAP-4 மின்சார ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 26 பெட்டிகள் வரை இழுத்துச் செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்

இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்

Source: Wikipedia 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Fun Facts About Tamilnadu Express Train.
Story first published: Friday, April 15, 2016, 11:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark