திமுக தலைவர் கருணாநிதிக்கு தயாரான பிரச்சார வேன் - முக்கிய விஷயங்கள்!

Written By:

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் தலைவர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். மேலும், அவர்கள் பயணிப்பதற்காக சொகுசு வசதிகள் கொண்ட பிரச்சார வேன்கள் தயாராகிவிட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்காக தயாரான டெம்போ டிராவலர் பிரச்சார வேன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டதுடன், பின்னர், அந்த வேனில் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறிது தூரம் பயணித்து அந்த வேன் வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.

இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்காக தயாராகி இருக்கும் டெம்போ டிராவலர் வேனின் வசதிகள் மற்றும் இதர தகவல்களை எமது ஒன் இந்தியா தமிழ் செய்தித் தொகுப்பில் விரிவாக படித்திருப்பீர்கள். தற்போது இந்த வேனின் மாடல் விபரம், முக்கிய தொழில்நுட்ப விஷயங்களையும், விலை உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

டெம்போ டிராவலர் குடும்ப வரிசையில் சொகுசு மாடலாக விற்பனை செய்யப்படும் டெம்போ டிராவலர் ராயல் என்ற மாடல்தான் திமுக தலைவர் கருணாநிதிக்கான பிரச்சார வாகனமாக மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய மாடல்

புதிய மாடல்

கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில்தான் இந்த புதிய டெம்போ டிராவலர் ராயல் வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை உடனே முன்பதிவு செய்து பெற்று, கூடுதல் வசதிகளுடன் மாற்றங்களை செய்து டெலிவிரி பெற்றுள்ளனர்.

வால்வோவுக்கு போட்டி

வால்வோவுக்கு போட்டி

விரைவான, சொகுசான போக்குவரத்து சாதனமாகவும், வால்வோ பஸ்களைவிட எரிபொருள் சிக்கனம் மிக்க சொகுசு மினி பஸ் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, இட நெருக்கடியான நகரங்களிலும் பஸ்சைவிட இதனை எளிதாக இயக்க முடியும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

டெம்போ டிராவலர் ராயல் வேனில் ஓட்டுனரை சேர்த்து 16 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரச்சார வேனில் அனைத்து இருக்கைகளும் கழற்றப்பட்டு, சக்கர நாற்காலியை வைப்பதற்கு ஏதுவாக இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடன் பயணிப்பவர்களுக்காக சொகுசான சில ருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பெரிய ஜன்னல்கள்

பெரிய ஜன்னல்கள்

இந்த பிரச்சார வேன் பிற சாதாரண ரக டெம்போ டிராவலர் வேன்களைவிட 1,000மிமீ.,க்கும் அதிக நீளமானது. 6,770மிமீ நீளம், 2,225மிமீ அகலம் மற்றும் 2,670மிமீ உயரம் கொண்டது. இதன் வீல் பேஸ் 4,020 மிமீ ஆகும். இந்த வேன் 190மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. மேலும், வெளிப்புறத்தை தெளிவாக பார்ப்பதற்கும், உள்ளே அமர்ந்திருப்பவர்களை எளிதாக காணும் விதத்திலும் மிக விசாலமான ஜன்னல் கண்ணாடிகள் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த டெம்போ டிராவலர் வேனில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2,149சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 129 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மிக மென்மையான கியர் மாற்றம், அதிர்வுகள் குறைவான எஞ்சின் போன்றவை இதன் பலம்.

 உறுதியான பாடி பேனல்கள்

உறுதியான பாடி பேனல்கள்

இந்த வேனில் மிக உறுதியான பாடி பேனல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரோபோ மூலமாக வெல்டிங் செய்யப்படுவதால், மிக உயரிய கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. அத்துடன், இது மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்படும் வாகனம்.

ஏர் சஸ்பென்ஷன்

ஏர் சஸ்பென்ஷன்

இந்த டெம்போ டிராவலர் வேனில் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தை பெற முடியும். அதேபோன்று, கையாளுமையும் சிறப்பாக இருக்கும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

சொகுசு வசதிகளில் மட்டுமல்லாது, பாதுகாப்பிலும் சிறப்பானது. இந்த வேனில் சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பமும், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்டி ரோல் பாரும் உள்ளது. முன்புறம், பின்புறத்தில் 4 பிஸ்டன்கள் கொண்ட வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

 எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

இதன் ரகத்தை சேர்ந்த பிற வாகனங்களைவிட 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும். இந்த பிரச்சார வேனில் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, தங்கு தடையில்லாத பிரச்சார பயணத்தை வழங்கும்.

விலை விபரம்

விலை விபரம்

புதிய டெம்போ டிராவலர் ராயல் வேன் ரூ.14 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கஸ்டமைசேஷன் செலவு உள்பட ரூ.23 லட்சம் மதிப்பில் இந்த பிரச்சார வேன் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

சக்கர நாற்காலியை ஏற்றி இறக்குவதற்கான வசதி, தாராள இடவசதி, இரவில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக கூடுதலாக வேனை சுற்றிலும் மின் விளக்குகள், மைக் செட், ஸ்பீக்கர்கள், ரெஸ்ட் ரூம், குளிர்சாதன வசதி என பல்வேறு சொகுசு வசதிகளுடன் இந்த வேன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

கோவையில் தயாரானது

கோவையில் தயாரானது

இந்த தேர்தல் பிரச்சார வாகனத்தை கோவையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது. இதே நிறுவனத்தில் வேறு சில அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் விருப்பத்திற்கு தக்கவாறான வசதிகளுடன் பிரச்சார வாகனங்கள் தயாராகி வருகின்றன.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த தலைவர் கருணாநிதியின் கார்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DMK Chief Karunanithi Hi tech Campaign Van Details.
Story first published: Thursday, March 31, 2016, 12:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark