இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பற்றி புதிய தகவல்கள் வெளியானது

Written By:

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தில் புல்லட் ரயில் குறித்த பேச்சும் எழுவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையி்ல், அடுத்த வாரம் ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது மும்பை- ஆமதாபாத் இடையிலான முதல் புல்லட் ரயில் திட்டம் பற்றி மீண்டும் பேச்சு அடிபட துவங்கியிருக்கிறது.

இந்தநிலையில், இன்னும் ஏழே ஆண்டுகளில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயங்கத் தொடங்கும் என மத்திய போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் கதவும் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் திட்டத்துக்கான முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஜப்பான் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட இருக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் பற்றி இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பணிகள் துவக்கம்?

பணிகள் துவக்கம்?

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2018ம் ஆண்டு துவக்கத்தில் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதிலிருந்து சரியாக 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு முதல் புல்லட் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

உயர்த்தப்பட்ட வழித்தடம்

உயர்த்தப்பட்ட வழித்தடம்

புல்லட் ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலமாக, ரயில் பாதையின் இருபுறத்திலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் அவசியம் இருக்காது. அத்துடன் கால்நடைகள், பொதுமக்களின் குறுக்கீடுகளால் விபத்து அபாயமும் தவிர்க்கப்படும்.

 முதலீடு அதிகரிப்பு

முதலீடு அதிகரிப்பு

கடந்த ஆண்டு இந்த திட்டத்தை ரூ.98,000 கோடி முதலீட்டில் செயல்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், கூடுதலாக ரூ.10,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆதாரம்

நிதி ஆதாரம்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி இந்த திட்டத்திற்கு 81 சதவீத நிதியை கடனாக வழங்க உள்ளது. 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் கெடுவுடன் 01 சதவீத வட்டியுடன் இந்த கடனை அந்த அமைப்பு கொடுக்கிறது. மீதமுள்ள தொகையை மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களும், ரயில்வே துறையும் செய்ய உள்ளன.

இந்திய பாகங்கள்

இந்திய பாகங்கள்

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 20 சதவீத பாகங்கள் மட்டுமே ஜப்பானிலிருந்து பெறப்படும்.

வேகம்

வேகம்

உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதால், மணிக்கு 300 கிமீ முதல் 350 கிமீ வேகம் வரை இந்தியாவின் புல்லட் ரயில் செல்லும்.

பயண நேரம்

பயண நேரம்

மும்பை- ஆமதாபாத் இடையிலான 505 கிமீ தூரத்தை வெறும் 2 மணிநேரத்தில் புல்லட் ரயில் கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள்

முதலில் நாசிக் வழியாக புல்லட் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், செலவு கூடுதலாகும் என்பதால், நாசிக் தவிர்க்கப்படுகிறது. மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் தானே, வீரர், சூரத், பாருச் மற்றும் வதோதரா ஆகிய ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

மும்பை ரயில் நிலையம்

மும்பை ரயில் நிலையம்

மும்பையில், பந்த்ரா- குர்லா காம்ப்ளெக்சில் புல்லட் ரயிலுக்கான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையம் பூமிக்கு கீழே மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

கட்டணம்

கட்டணம்

தற்போது மும்பை- ஆமதாபாத் இடையில் ரூ.1,855 என்பது அதிகபட்ச ரயில் கட்டணமாக உள்ளது. அதேநேரத்தில், புல்லட் ரயிலுக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான குறைந்தபட்ச விமானப் பயணக் கட்டணம் ரூ2,250 என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Mumbai-Ahmedabad corridor will be the country's first bullet train project. Here is all you need to know about the same.
Story first published: Thursday, February 18, 2016, 10:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark