இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

வர்த்ககம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு மிக வலுவான போக்குவரத்து கட்டமைப்பு அவசியமாகி உள்ளது. இதற்கு தக்கவாறு போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு உலகின் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளை இணைக்கும் வகையில் ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் செல்லும் ஆசிய நெடுஞ்சாலைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஐ.நா சபையின் தொலைநோக்குத் திட்டம்

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அளவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியை கருத்தில்கொண்டு சாலைப் போக்குவரத்து கட்டமைப்பை வலுவாக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முக்கியத்துவம் கொடுத்தது. அந்த வகையில், கடந்த 1959ம் ஆண்டு ஆசிய நெடுஞ்சாலை திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை மூலமாக துவங்கப்பட்டது. 1960 -70களில் முதல் கட்டமாக நடந்த ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்தன. ஆனால், அதன்பிறகு நிதி உதவி நிறுத்தப்பட்டதால், தொய்வு ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு

1992ம் ஆண்டு ஆசிய தரை வழி போக்குவரத்து கட்டமைப்பு அமைப்பின் 48வது அமர்வின்போது, இந்த சாலை திட்டம் மீண்டும் சூடுபிடித்தது. இதைத்தொடர்ந்து, 2003ம் ஆண்டு இந்த திட்டம் முறைப்படி துவங்கப்பட்டது. 32 ஆசிய நாடுகள் இணைந்து ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு திட்டத்தை உருவாக்கின. இதில், ஆசிய நாடுகளை இணைக்கும் வகையில், 55 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, ஆசிய நெடுஞ்சாலை வரிசை எண் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டதுடன், மேம்பாட்டு மற்றும் விரிவாக்கப் பணிகள் நடந்தன. அண்மை காலத்தில் பல புதிய வழித்தடங்களும் சேர்க்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலைகள்

இதில், இந்தியாவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, அதனை பிற நாடுகளுடனான நெடுஞ்சாலைகளுடன் இணைப்பு தரும் வகையில், ஆசிய நெடுஞ்சாலைகளாக குறிப்பிடப்படுகின்றன. அதில் இந்தியாவில் குறிப்பிடப்படும் ஆசிய நெடுஞ்சாலைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை எண் 42

சீனாவின் கன்ஸு மாகாணத்தில் உள்ள லான்ஸோ என்ற இடத்தில் துவங்கி இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்ஹி என்ற இடத்தில் முடிகிறது. எவரெஸ்ட் மலைமுகட்டுக்கு மிக அருகாமையில் செல்லும் ஆசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்தில் உள்ள லசா மற்றும் நேபாளத் தலைநகர் காத்மாண்ட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை 3,754 கிமீ நீளம் கொண்டது.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை எண் 43

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் துவங்கி, இலங்கையிலுள்ள மதரா என்ற இடத்தில் இந்த ஆசிய நெடுஞ்சாலை முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையின் மிக முக்கிய சுவாரஸ்யம் என்னவெனில், மதுராவில் இருந்து குவாலியர், நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், மதுரை, ராமேஸ்வரம் வரை சாலை மார்க்கமாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலமாக இலங்கையிலுள்ள தலைமன்னார் வரை செல்லும் வகையில் குறிப்பிடப்படுகிறது. தலைமன்னார், அனுராதபுரம், தம்புலா, குருனிகலா, கண்டி, கொழும்பு, காலே வழியாக மதராவில் முடிகிறது. இந்த சாலை 3,042 கிமீ தூரம் நீளம் கொண்டது.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை 45

ஆசிய நெடுஞ்சாலை எண் 45 என்பது கொல்கத்தாவில் இருந்து சென்னையை இணைக்கும் வகையில் குறிப்பிடப்படுகிறது. இந்த சாலை 2,116 கிமீ நீளம் கொண்டது. ஒடிஷா, ஆந்திரா வழியாக சென்னையை இணைக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலைதான் இந்த ஆசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கர்நாடக மாநிலம் பெங்களூர் நகர் வரை இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை 46

ஆசிய நெடுஞ்சாலை 46 என்பது கிரேட் ஈஸ்டர்ன் ஹைவே என்று குறிப்பிடப்படுகிறது. 1967 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையானது குஜராத்தில் உள்ள ஹசிரா துறைமுக நகரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை இணைக்கிறது. மேற்குவங்கம், ஜார்கண்ட், ஓடிஷா, சட்டீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இந்திய மாநிலங்கள் இந்த ஆசிய நெடுஞ்சாலையின் மூலமாக இணைப்பு பெறுகின்றன.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை எண் 47

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரை இணைக்கிறது. இந்த சாலை 2,057 கிமீ நீளம் கொண்டது. துலு, தனே, மும்பை, பெல்காம் நகரங்களுக்கு இந்த சாலை மிக முக்கிய தரை வழி போக்குவரத்தை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசிய நெடுஞ்சாலை எண் 48

பூடான் நாட்டின் புயன்ட்ஷோலிங் என்ற இடத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சங்கரபந்தா என்ற இடம் வரை நீள்கிறது. இது 90 கிமீ நீளத்திற்கு இரு நாடுகளை இணைக்கும் ஆசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையில் சில பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவில் அதிகம்

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஆசிய நெடுஞ்சாலைகள் மூலமாக இணைப்பு பெறுகின்றன. ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு இந்தியாவில்தான் அதிக தூரம் கொண்டதாக அமைந்துள்ளது. இந்தியாவில் 27,987 கிமீ தூரத்திற்கு ஆசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு உள்ளது. அதேநேரத்தில், இந்த சாலைகள் பல தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய கட்டமைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து, சீனாவில் 25,579 கிமீ தூரத்திற்கு ஆசிய நெடுஞ்சாலைகள் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
ஆசிய நெடுஞ்சாலை, இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலை கட்டமைப்பு
Story first published: Thursday, August 13, 2020, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X