மாருதி கார் ஆலைகள் மற்றும் தயாரிப்பு முறை பற்றிய சுவையான தகவல்கள்!

By Saravana

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இன்றைக்கு நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 48 சதவீத பங்களிப்பை கைவசம் வைத்திருக்கிறது. வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சளைக்காமல் இன்றைக்கும் தனது மார்க்கெட் பங்களிப்பை கெடியாக வைத்துள்ளது.

ஹரியானா மாநிலம், குர்கான் மற்றும் மானேசர் ஆகிய தொழில்நகரங்களில் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் மாருதி நிறுவனம் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. முதல் கார் வாங்க நினைக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸ் மாருதி தான். இந்த நிலையில், மாருதி கார் ஆலைகள் மற்றும் தயாரிப்பு முறைகள் பற்றிய சில சுவையான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 துவக்கம்

துவக்கம்

1983ம் ஆண்டு குர்கானில் ஆலை அமைத்து கார் உற்பத்தியை மாருதி துவங்கியது. இதைத்தொடர்ந்து, தேவையை கருதி மானேசரில் புதிய ஆலையை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இது மட்டுமின்றி, குஜராத்தில் புதிய ஆலையை மாருதி கார் நிறுவனத்துக்காக, அதன் தாய் நிறுவனமான சுஸுகி அமைக்க உள்ளது. வரும் 2017ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் மாருதி கார் உற்பத்தி துவங்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.

 கார் உற்பத்தி(குர்கான்)

கார் உற்பத்தி(குர்கான்)

டெல்லி அருகே ஹரியானா மாநிலத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குர்கான் ஆலையில் ஆண்டுக்கு 3.5 லட்சம் கார்களை கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஆலையிலிருந்து 16 வினாடிகளுக்கு ஒரு புதிய கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளியே வருகிறது. மாதத்திற்கு 62,500 கார்களை தயாரிக்க முடியும். உற்பத்தி திறனை வைத்து கணக்கிடும்போது ஆண்டுக்கு 4,87 லட்சம் டன் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.

எஞ்சின் உற்பத்தி

எஞ்சின் உற்பத்தி

குர்கான் ஆலையில் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 2.40 லட்சம் கே சீரிஸ் எஞ்சின்கள் உற்பத்தி செய்ய முடியும். மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர், ஓம்னி, ஈக்கோ, எர்டிகா உள்ளிட்ட கார்கள் குர்கானில் உற்பத்தியாகிறது. ஸ்விஃப்ட், டிசையர், செலெரியோ ஆகிய கார்கள் மானேசரில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 எரிபொருள்

எரிபொருள்

ஆலையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு காரிலும் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம், ஆண்டுக்கு 37.50 லட்சம் லிட்டர் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

கார் உற்பத்தி(மானேசர்)

கார் உற்பத்தி(மானேசர்)

குர்கான் ஆலையிலிருந்து 20 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கும் மானேசர் ஆலை 2007ல் உற்பத்தி துவங்கப்பட்டது. இது 600 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் கார்களுக்காக ஆண்டுக்கு 3.57 லட்சம் டன் ஸ்டீல் தேவைப்படுகிறது. மானேசர் ஆலையில் சுஸுகி பவர்ட்ரெயின் கூட்டணியுடன் டீசல் எஞ்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 லடசம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் வசதி உள்ளது.

 உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

குர்கான் மற்றும் மானேசர் ஆலைகளிலிருந்து ஆண்டுக்கு 14.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

 குஜராத்தில் புதிய ஆலை

குஜராத்தில் புதிய ஆலை

குஜராத் ஆலையில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. படிப்படியாக இந்த ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் மாருதி நிறுவனம் ஆண்டுக்கு 2 மில்லியன் கார்களை தயாரிக்கும் திறனை பெற இருக்கிறது.

 ரோபோ வசதி

ரோபோ வசதி

வெல்டிங் பிரிவுகள் முழுவதுமாக எந்திரமயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4,200 டன் ஸ்டீலில் வார்ப்புகள் செய்யப்படுகின்றன. குர்கான் மற்றும் மானேசர் ஆலைகள் சுத்தம், சுகாதாரத்திற்கு பெயர் பெற்றதாகவும் விளங்குகின்றன. எந்தவொரு இடத்திலும் தேவையில்லாத பொருட்களை காண முடியாது. குறிப்பாக, மானேசர் ஆலை மிக நவீனத்துவம் கொண்டதாக மேலை நாட்டு ஆலைகளுக்கு சவால் விடும் தொழில்நுட்பம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்

தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்

செலவீனத்தை குறைத்து உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையை ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்து பெற்று அதில் சிறந்தவற்றை மாருதி செயல்படுத்துகிறது. குறிப்பாக, பேட்டரியின் நீளத்தை குறைக்க கொடுத்த ஆலோசனையின் மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்படுகிறதாம். இது ஒரு உதாரணமே.

போக்குவரத்து

போக்குவரத்து

குர்கான், மானேசர் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை நாடு முழுவதும் உள்ள டீலர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக மாருதி நிறுவனம் நாள் ஒன்றுக்கு 10,000 டிரக்குகளை பயன்படுத்துகிறது. நாட்டின் எந்தவொரு மூலையிலும் உள்ள டீலருக்கு ஒரு டிரக் சராசரியாக இரண்டரை நாளில் கார்களை கொண்டு சேர்க்கின்றன. அப்படி பார்க்கும்போது, இரண்டரை நாளில் அந்த 10,000 டிரக்குகளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றன. இதுதவிர, ரயில் வேகன் வழியாகவும் கார்கள் அனுப்பப்படுகின்றன.

பார்க்கிங் வசதி

பார்க்கிங் வசதி

நாள் ஒன்றுக்கு 3,500 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட குர்கான் ஆலையில் உள்ள பார்க்கிங் பகுதியில் 5,000 கார்களை மட்டுமே நிறுத்த முடியும். எனவே, ஒரு நாளுக்கு மேல் ஒரு காரை அங்கு நிறுத்த முடியாது. எனவே, உடனுக்குடன் கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

 முன்பதிவு

முன்பதிவு

மாருதி நிறுவனத்தின் கையில் எந்தவொரு நேரமும் ஒரு லட்சம் பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த ஆலைகளில் உற்பத்தியாகும் கார்களின் உரிமையாளர்கள் வெளியில் காத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு புள்ளிவிபரம்

ஒரு புள்ளிவிபரம்

மாருதி உள்பட அனைத்து கார் நிறுவனங்களுமே தங்களது உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்து வருகின்றன. அயல்நாடுகளில் 1,000 பேரில் 600 பேரிடம் கார் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நம் நாட்டில் 1,000 பேரில் 18 பேரிடம் மட்டுமே கார் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் தங்களது முதலீடுகளையும், கவனத்தையும் நம் நாட்டு மீது கார் நிறுவனங்கள் திருப்பியுள்ளன.

Most Read Articles
English summary
We compiled some of the interesting facts about Maruti Suzuki Car Plants in India. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X